Home
Mobile

ரூ.8,000 க்கு இதுக்கு மேல வேற ஒன்னும் வேணாம் சாமி.. Realme Narzo N61-ன் வாய் பிளக்க வைக்கும் அம்சங்கள்!

ஏற்கனவே ரூ.8000 பட்ஜெட்டில் ரியல்மி சி63 (Realme C63) ஸ்மார்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துவிட்ட ரியல்மி நிறுவனம், ஜூலை 29 ஆம் தேதியன்று இதே பட்ஜெட்டில் இன்னொரு புதிய ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யவுள்ளது. அது ரியல்மி நார்சோ என்61 (Realme Narzo N61) மாடலாகும். ரியல்மி நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரிஸ் (Realme 13 Pro 5G Series) ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் (ஜூலை 30) ஒரு தினத்திற்கு முன்பாக ரியல்மி நார்சோ என்61 வருகிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரியல்மி நார்சோ என்61 ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகமாகும்? ஜூலை 29 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ள ரியல்மி நார்சோ என்61 ஸ்மார்ட்போன் ரூ.8,499 க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே என் சீரிஸின் கீழ், கடந்த மாதம் அறிமுகமான ரியல்மி நார்சோ என்63 (Realme Narzo N63) ஸ்மார்ட்போன் ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

Realme Narzo N61..ரூ.8,000 க்கு இதுக்கு மேல வேற ஒன்னும் வேணாம் சாமி!

ரியல்மி நார்சோ என்61 ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? உறுதி செய்யபட்ட அம்சங்களை பொறுத்தவரை, இது பேக் பேனலில் 32 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய டூயல் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். மேலும் ரியல்மி நார்சோ என்61 ஸ்மார்ட்போன் ஆனது நீர் மற்றும் தூசி பாதுகாப்புக்கான ஐபி54 ரேட்டிங்கையும் கொண்டிருக்கும்.

கூடவே இது ரியல்மியின் ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் அம்சத்தையும் கொண்டு வருகிறது, இந்த அம்சம் ஈரமான கைகளாலும் கூட ஸ்க்ரீனை பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு அம்சமாகும். பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட ரியல்மி நார்சோ என்61 ஸ்மார்ட்போன் ஆனது டியுவி ரெயின்லேண்ட் (TUV Rheinland) உயர் நம்பகத்தன்மை சான்றிதழ் உடனான ஆர்மர்ஷெல் ப்ரொடெக்ஷனையும் (ArmorShell Protection) கொண்டு வருகிறது. மீதமுள்ள அம்சங்கள் வெளியீட்டின் போது அறிவிக்கப்படும்.

ஜூலை 30 ஆம் தேதி அறிமுகமாகும் ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்திய சந்தையில் ரியல்மி 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.26,000 - ரூ.29,000 க்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்றும், மறுகையில் உள்ள ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல் ஆனது ரூ.30,000 - ரூ.35,000 க்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரிஸில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? டிஸ்பிளேவை பொறுத்தவரை 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே இடம்பெறலாம். ப்ராசஸரை பொறுத்தவரை, குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 சீரீஸ் சிப்செட் மூலம் இயக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 ஆக இருக்கலாம்.

கேமராக்களை பொறுத்தவரை ப்ரோ பிளஸ் மாடலில் 50எம்பி Sony LYT-701 ப்ரைமரி சென்சார் பேக் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனுடன், 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் திறன்களுடன் 50எம்பி Sony LYT-600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ இருக்கும்.இதனுடன் 8எம்பி அல்ட்ராவைடு கேமராவும் இடம்பெறலாம்.

ரியல்மி 13 ப்ரோ ஸ்மார்ட்போனில் ப்ரோ பிளஸ் மாடலில் உள்ள அதே ப்ரைமரி மற்றும் அதே அல்ட்ராவைட் கேமரா சென்சார்கள் இடம்பெறும். ஆனால் இது ஒரு டெலிஃபோட்டோ அல்லது பெரிஸ்கோப் லென்ஸை இழக்க நேரிடும். பேட்டரியை பொறுத்தவரை, இரண்டுமே 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,200mAh பேட்டரியை கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
ArmorShell Protection IP54 Rating Realme Narzo N61 to Launch in India on July 29
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X