OnePlus போன்களில் Jio சிம் யூஸ் பண்றீங்களா? முதல்ல "இதை" தெரிஞ்சுகோங்க!

|

நீங்கள் ஒரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதிலும் குறிப்பாக லேட்டஸ்ட் ஆக அறிமுகமான மாடல்களில் ஒன்றை பயன்படுத்துகிறீர்களா?

ஆம் என்றால், OnePlus நிறுவனத்தின் சமீபத்திய நடவடிக்கை ஒன்றைப்பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்!

ஒன்பிளஸ் போனில் ஜியோ சிம்!

ஒன்பிளஸ் போனில் ஜியோ சிம்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல்களை மட்டுமின்றி, அதில் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்ட்டையும் பயன்படுத்துகிறீர்களா? அப்போது கண்டிப்பாக "இந்த விஷயத்தை" பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்!

அதென்ன விஷயம்? ஒன்பிளஸ் நிறுவனம் அப்படி என்ன செய்துள்ளது? லேட்டஸ்ட் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் என்றால் அதென்ன மாடல்கள்? இதற்கிடையில் Jio சிம் கார்ட்டின் பெயர் அடிபடுவது ஏன்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

உங்க போன் Settings-ல் இந்த உங்க போன் Settings-ல் இந்த "சீக்ரெட்" மோட் இருக்கானு செக் பண்ணுங்க.. இருந்தா அதிர்ஷ்டம்!

வருது.. வருது!

வருது.. வருது!

நாம் இங்கே பேசுவது - ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் ஆன ஒன்பிளஸ் 10 சீரீஸ் மாடல்களை பற்றித்தான்.

ஏனென்றால், ஒன்பிளஸ் நிறுவனம் ஒருவழியாக அதன் OnePlus 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு Jio 5G சப்போர்ட்-ஐ வெளியிடத் தொடங்கி உள்ளது!

எந்தெந்த ஒன்பிளஸ் 10 மாடல்களுக்கு எப்போது ஜியோ 5ஜி கிடைக்கும்?

எந்தெந்த ஒன்பிளஸ் 10 மாடல்களுக்கு எப்போது ஜியோ 5ஜி கிடைக்கும்?

ஒன்பிளஸ் நிறுவனம், அதன் 10 சீரீஸின் கீழ் வாங்க கிடைக்கும் OnePlus 10T, OnePlus 10 Pro மற்றும் OnePlus 10R ஆகிய மாடல்களுக்கும் ஜியோ 5ஜி-க்கான ஆதரவை வழங்கும் அப்டேட்-ஐ வெளியிட தொடங்கி உள்ளது!

இந்த அப்டேட் இந்தியாவிற்கு மட்டுமே உரியது என்பதும், இது படிப்படியாகவே வெளியிடப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த அப்டேட் 'ஓவர் நைட்டில்' எல்லோருக்கும் கிடைத்து விடாது என்று அர்த்தம்!

வயிறு எரியுதுனு புலம்பும் OnePlus போன் பயனர்கள்.. சொந்த கம்பெனியே வச்ச புது ஆப்பு!வயிறு எரியுதுனு புலம்பும் OnePlus போன் பயனர்கள்.. சொந்த கம்பெனியே வச்ச புது ஆப்பு!

அப்டேட் வந்து இருக்கிறதா? செக் செய்து பாருங்கள்!

அப்டேட் வந்து இருக்கிறதா? செக் செய்து பாருங்கள்!

மேலே குறிப்பிடப்பட்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் - அதாவது ஒன்பிளஸ் 10டி, ஒன்பிளஸ் 10 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 10ஆர் மாடல்களில் - ஏதேனும் ஒன்று உங்களிடம் இருந்தால், உங்களுக்கு லேட்டஸ்ட் Android 12-அடிப்படையிலான OxygenOS அப்டேட் ஏதேனும் கிடைத்துள்ளதா என்று செக் செய்து பார்க்கவும்.

செக் செய்ய: செட்டிங்ஸ் > > சிஸ்டம் > சிஸ்டம் அப்டேட்ஸ் க்கு செல்லவும். லேட்டஸ்ட் அப்டேட் வந்து இருந்தால் உடனே அதை இன்ஸ்டால் செய்து கொள்ளவும். ஒருவேளை வரவில்லை என்றால், சிறிது நாட்கள் காத்திருக்கவும்!

லேட்டஸ்ட் அப்டேட் வழியாக Jio 5G மட்டும் தான் கிடைக்குமா?

லேட்டஸ்ட் அப்டேட் வழியாக Jio 5G மட்டும் தான் கிடைக்குமா?

இல்லை! ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ட்ரூ 5ஜி-க்கான சப்போர்ட் உடன் சேர்த்து, ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் அப்டேட் ஆனது சிஸ்டம், நெட்வொர்க் மற்றும் டிஸ்பிளே போன்றவைகளிலும் சில மேம்பாடுகளை கொண்டு வருகிறது.

ஒரே போனில் Airtel 5G & Jio 5G-க்கான சப்போர்ட்! கெத்து காட்டும் இந்திய மொபைல் பிராண்ட்!ஒரே போனில் Airtel 5G & Jio 5G-க்கான சப்போர்ட்! கெத்து காட்டும் இந்திய மொபைல் பிராண்ட்!

Settings-இல் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

Settings-இல் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

- உங்கள் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் 2022.10 க்கு அப்டேட் செய்யப்படும்.

- Performance scheduling ஆனது ஆப்டிமைஸ் செய்யப்படும் மற்றும் System fluency ஆனது மேம்படுத்தப்படும்.

- அவ்வப்போது ஏற்படும் Crash-களையும் சரி செய்யும்.

Network மற்றும் Display-வில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

Network மற்றும் Display-வில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

- Wi-Fi stability-ஐ ஆப்டிமைஸ் செய்யும் மற்றும் Network experience-ஐ மேம்படுத்தும்

- Communication stability-ஐ ஆப்டிமைஸ் செய்யும்.

- 5G நெட்வொர்க்கிற்கான ஆதரவில் ஜியோவை சேர்க்கும்.

- Screen display effect-ஐ மேம்படுத்தும்

தகுதியான மாடல் மட்டும் போதாது.. தகுதியான இடமும் வேண்டும்!

தகுதியான மாடல் மட்டும் போதாது.. தகுதியான இடமும் வேண்டும்!

நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் ஐந்து நகரங்கள் மட்டுமே Jio 5G சேவைக்கான சோதனைகள் நடக்கிறது.

ஆகையால் மேற்குறிப்பிட்ட எல்லா ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் ஜியோ 5ஜி-க்கான ஆதரவு கிடைக்கும் என்றாலும் கூட, நீங்கள் தகுதியுள்ள 5ஜி வட்டங்களில் இருந்தால் மட்டுமே அதை அனுபவிக்க முடியும்.

வெறும் 17 போன்களில் மட்டுமே Airtel 5G வேலை செய்யும்! கதறும் சீன மொபைல் உரிமையாளர்கள்!வெறும் 17 போன்களில் மட்டுமே Airtel 5G வேலை செய்யும்! கதறும் சீன மொபைல் உரிமையாளர்கள்!

அதுமட்டுமல்ல.. இன்னொரு ட்விஸ்ட்டும் உள்ளது!

அதுமட்டுமல்ல.. இன்னொரு ட்விஸ்ட்டும் உள்ளது!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே, அதன் ஜியோ 5ஜி சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது என்பதால் அனைத்து ஒன்பிளஸ் 10 சீரீஸ் வாடிக்கையாளர்களுக்குமே ஜியோ 5ஜி கிடைக்கும் என்றும் உறுதியளிக்க முடியாது!

ஒருவேளை நீங்கள் "தகுதியான இடத்தில்" வசிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு 5ஜி அப்டேட் கிடைத்து விட்டது என்றால், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள MyJio ஆப் வழியாக உங்களுக்கான Jio 5G நெட்வொர்க்-ஐ சரிபார்க்கலாம்!

ஒன்பிளஸ் போன்களுக்கு Airtel 5G எப்போது வரும்?

ஒன்பிளஸ் போன்களுக்கு Airtel 5G எப்போது வரும்?

ஏற்கனவே வந்துவிட்டது! ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தின்படி, ஒன்பிளஸ் நிறுவனத்தின் கீழ் லேட்டஸ்ட் ஆக அறிமுகமான பிரீமியம் மற்றும் மிட்-பிரீமியம் மாடல்கள், இப்போது ஏர்டெல் 5ஜி-க்கான ஆதரவை பெற்றுள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது!

Best Mobiles in India

English summary
Are you using a Jio sim card in your latest OnePlus smartphone Be ready to get Jio 5G support update

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X