வெறும் ரூ.11க்கு Samsung Galaxy S22 Ultra வாங்கலாம்: நம்பலனாலும் இதான் நிஜம்! லிமிடெட் ஆஃபர் பாஸ்!

|

Samsung Galaxy S22 Ultra ஸ்மார்ட்போனானது இந்தியாவில் பிப்ரவரி மாதம் ரூ.1,09,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. விலையை வைத்து மட்டுமல்ல அம்சங்களை வைத்தும் உறுதியாக கூறலாம் இது பக்கா ப்ரீமியம் ஸ்மார்ட்போன் என்று. இந்த ஸ்மார்ட்போன் தற்போது வெறும் ரூ.11க்கு கிடைக்கிறது.

வெறும் ரூ.11க்கு கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா

வெறும் ரூ.11க்கு கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போனை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த நிலையில் இதன் முந்தைய மாடல் ஸ்மார்ட்போனான கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா வெறும் ரூ.11க்கு கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இந்த சலுகையை எந்தவித பிரபல ஆன்லைன் விற்பனை தளங்களும் வழங்கவில்லை. இது Cred வாடிக்கையாளர்களுக்கானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே

அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே

fintech நிறுவனமான Cred அதன் வாடிக்கையாளர்களுக்கு வெறும் 11 ரூபாய்க்கு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. 11:11 drops விளம்பரத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அனைத்து Cred வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை கிடைக்காது, குறிப்பிட்ட அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சக்கரத்தை சுற்றினால் போதும்

சக்கரத்தை சுற்றினால் போதும்

91மொபைல் தளத்தில் இதுகுறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. 11 ரூபாய்க்கு Samsung Galaxy S22 Ultra ஸ்மார்ட்போனை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் க்ரெட் பயன்பாட்டுக்கு சென்று ஷாப்பிங் செய்யவும். ஆர்டர் செய்த பிறகு பயனர்கள் கேம் அரங்கிற்குச் சென்று சக்கரத்தை சுழற்றலாம், அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் வழங்கப்படும். அதுவும் வெறும் ரூ.11க்கு என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஒரு பயனர் மூன்று முறை மட்டுமே இதை முயற்சி செய்ய முடியும்.

Samsung Galaxy S22 Ultra இந்திய விலை

Samsung Galaxy S22 Ultra இந்திய விலை

Samsung Galaxy S22 Ultra ஸ்மார்ட்போனின் இந்திய விலை குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.1,09,999 என நிர்ணயிக்கப்பட்டது. பர்கண்டி, பாண்டம் பிளாக் மற்றும் பாண்டம் ஒயிட் ஆகிய வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியானது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.1,18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளாக், பர்கண்டி மற்றும் பாண்டம் ஆகிய வண்ண விருப்பங்களில் இந்த வேரியண்ட் வெளியானது.

உயர் திறன் Dynamic AMOLED டிஸ்ப்ளே

உயர் திறன் Dynamic AMOLED டிஸ்ப்ளே

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, 3080 x 1440 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.80' இன்ச் அளவு கொண்ட உயர் திறன் Dynamic AMOLED 2x டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 120 Hz ரெப்பிரேஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே அம்சத்துடன் வெளியானது. இந்த டிஸ்ப்ளே HDR 10 மற்றும் HDR+ ஆதரவை கொண்டிருக்கிறது. டிஸ்ப்ளேவின் முன்பக்கத்தில் பன்ச் ஹோல் கட்டவுட் வழங்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளே பாதுகாப்பைப் பலப்படுத்த கார்னிங் கொரில்லா கிளாஸ் Victus+ பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

108 எம்பி பிரைமரி கேமரா

108 எம்பி பிரைமரி கேமரா

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் கேமராக்களைப் பொறுத்த வரையில், இது f/1.8 துளையுடன் கூடிய 108 மெகாபிக்சல் (wide) முதன்மைக் கேமராவைக் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.

இத்துடன் f/2.2 துளை கொண்ட 12 மெகாபிக்சல் (ultrawide) கேமரா, f/4.9 துளை கொண்ட 10 மெகாபிக்சல் (periscope telephoto) கேமரா மற்றும் f/2.4 துளை கொண்ட 10 மெகாபிக்சல் (telephoto) கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பின்புற கேமரா அமைப்பில் பேஸ் டிடெக்ட் ஆட்டோஃபோகஸ் அம்சம் இருக்கிறது. இதில் செல்ஃபி வசதிகளுக்கு என f/2.2 துளை கொண்ட 40 மெகாபிக்சல் முதன்மை கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

5000mAh பேட்டரி, 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

5000mAh பேட்டரி, 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

Samsung Galaxy S22 Ultra ஆனது 5000mAh நீக்க முடியாத பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 45W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தைக் கொண்டிருக்கிறது. இது USB Power Delivery 3.0 அம்சம், பாஸ்ட் Qi/PMA வயர்லெஸ் சார்ஜிங் 15W அம்சம் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் 4.5W அம்சத்துடன், எஸ் பென் அம்சத்தையும் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Are you lucky? Then Why are you waiting.. You can buy a Samsung Galaxy S22 Ultra for just Rs.11!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X