அக்வாமார்பிக்-டிசைன் உடன் OPPO ColorOS 13: இதுவரை கண்டிராத மேம்பட்ட அம்சங்கள்!

|

OPPO ஸ்மார்ட்போன்களில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் என்பதே இருக்காது. ஆற்றல் நிரம்பிய செயல்திறன் மற்றும் சிறந்த அம்சங்கள் என அனைத்தும் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும். A-series மற்றும் F-seriesகளைப் பொறுத்தவரை, ஒப்போ போன்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறந்த இன் க்ளாஸ் பயனர் அனுபவத்தை வழங்குகின்றது. இதற்கு மேம்பட்ட ColorOS குறிப்படத்தக்க காரணம்.

அக்வாமார்பிக்-டிசைன் உடன் OPPO ColorOS 13: இதுவரை கண்டிராத அம்சங்கள்!

ColorOS இல் சிந்தனை மிக்க அம்சங்கள் நிரம்பியுள்ளது. ColorOS ஆனது சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 OS ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு பெரிய மறுசீரமைப்பிற்கு தயாராக இருக்கிறது. OPPO ColorOS 13ஐ 2022 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான Reno8 Pro இல் சில நாட்களாக சோதித்து வந்தோம். custom skin மற்றும் அதன் அம்சங்கள் குறித்த எங்களது அனுபவம் இதோ.

அக்வாமார்பிக்-டிசைன் உடன் OPPO ColorOS 13: இதுவரை கண்டிராத அம்சங்கள்!

மல்டி ஸ்க்ரீன் இணைப்பு

OPPO Pad Air டேப்லெட் பயனர்கள் "மல்டி-ஸ்கிரீன் கனெக்ட்" அம்சத்தை விரும்புவார்கள். ஃபைல்களை மாற்ற, இரண்டு சாதனங்களுக்கு இடையில் பயன்பாடுகளை திறக்க மற்றும் க்ளிப்போர்ட் டேட்டாவை பகிர உங்கள் OPPO போனை பெரிய டிஸ்ப்ளே கொண்ட டேப்லெட் உடன் இணைக்க இது உங்களை அனுமதிக்கிறது. மேலும் இந்த மல்டி-ஸ்கிரீன் கனெக்ட் அம்சத்தை பயன்படுத்தி PCக்களுடன் போனை இணைக்கவும் இது அனுமதிக்கிறது.

இதில் உள்ள புதிய "ஃபைல் எக்ஸ்சேஞ்ச்" அம்சமானது, மொபைல் டேட்டாவை உட்கொள்ளாமல் PCகள், OPPO போன்கள் மற்றும் OPPO Pad Air ஆகியவற்றுக்கு இடையே ஃபைல்களை பரிமாற்ற அனுமதிக்கிறது. ColorOS 13 ஆனது Android 13 இன் புதிய இணைப்பு அம்சங்களையும் ஒருங்கிணைக்கிறது. அதாவது ChromeOS சாதனங்களுக்கான ஆப் ஸ்ட்ரீமிங், Nearby விண்டோஸ் பிசி ஷேர், ஆடியோ டிவைஸ்களுடன் வேகமான இணைப்பு என பல இணைப்பு ஆதரவுகள் ஈர்க்கும் வகையில் இருக்கிறது.

அக்வாமார்பிக்-டிசைன் உடன் OPPO ColorOS 13: இதுவரை கண்டிராத அம்சங்கள்!

ஸ்மார்ட் Always-On-Display

ColorOS 13 ஆனது Always-On-Display அம்சத்திற்கு என புதிய வண்ண கோடுகளை கொண்டிருக்கிறது. ColorOS 13 இல் இயங்கும் ஸ்மார்ட்போன்களின் லாக் ஸ்க்ரீன் ஆனது, டிஸ்ப்ளே ரெஃப்ரஷிங் ரேட்டை 1Hz ஆகக் குறைக்கிறது. இதன் மூலம் குறைந்த ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. Spotify இல் நீங்கள் இசையைக் கட்டுப்படுத்தலாம், உணவு டெலிவரி ஆப்ஸைச் சரிபார்க்கலாம் மற்றும் பல ஆப்ஸ்களை ஓபன் செய்யாமலே லாக் ஸ்க்ரீனில் இருந்தபடியே கட்டுப்படுத்தலாம்.

இன்சைட் ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே என்பது ஒவ்வொரு போன் தயாரிப்பாளரும் வழங்க வேண்டிய மற்றொரு சிந்தனைமிக்க அம்சமாகும், மேலும் ColorOS 13 ஆனது Oppo ஸ்மார்ட்போன்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. உங்கள் டிஜிட்டல் பயன்பாட்டை நன்கு கவனித்துக் கொள்ளவும், தினசரி போன் பயன்பாட்டைக் கண்காணிக்கவும் இந்த பயன்பாடு உங்களுக்கு உதவும். ColorOS 13 ஸ்மார்ட்போன்களில் உங்கள் மொபைல் பயன்பாட்டு நேரம் துல்லியமாக கண்காணிக்கப்படும். அதாவது ஒரு வண்ணப் பட்டை மூலம் நீங்கள் மொபைலை எத்தனை முறை அன்லாக் செய்தீர்கள் மற்றும் அதில் எத்தனை மணிநேரம் செலவிடுகிறீர்கள் என்பதைக் கண்காணிக்கும்.

அக்வாமார்பிக்-டிசைன் உடன் OPPO ColorOS 13: இதுவரை கண்டிராத அம்சங்கள்!

இத்தகைய முக்கியமான தரவு உள்ளுணர்வாக வழங்கப்படுகிறது. அதாவது ColorOS 13 ஆனது எத்தனை மணி நேரம் போனை பயன்படுத்துள்ளீர்கள் என்பதை சுட்டிக்காட்டி, உங்கள் போன்களில் இருந்து விலகி வாழ்க்கையை அனுபவிக்க அதிக நேரம் செலவிட ஊக்குவிக்கிறது. AOD இல் Bitmoji ஒருங்கிணைப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. Bitmoji ஆப்ஸுடன் இணைந்ததும், உங்கள் மனநிலைக்கு ஏற்றவாறு உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தெரிவிக்க, லாக் ஸ்க்ரீனில் உங்களுக்குப் பிடித்த இமோஜிகளைக் காண்பிக்கலாம்.

அக்வாமார்பிக்-டிசைன் உடன் OPPO ColorOS 13: இதுவரை கண்டிராத அம்சங்கள்!

அல்ட்ரா-கம்ப்யூட்டிங் இயங்குதளம்

OPPO இன் தனியுரிம அல்ட்ரா கம்ப்யூட்டிங் இயங்குதளமானது ColorOS 13 இல் இயங்கும் போன்களை சிறந்த செயல்திறன் மற்றும் பேட்டரி ஆயுளைப் பெறுவதை உறுதி செய்கிறது. இந்த தொழில்நுட்பம் ஆனது தேவைப்படும் போது சிறந்த செயல்திறனை வழங்குகிறது. CPU, GPU, RAM மற்றும் கேச் நினைவகத்தை தீவிரமாக கண்காணித்து நிர்வகிப்பதன் மூலம் சார்ஜ் நுகர்வைக் குறைத்து வழக்கமான பணிகளை கூடுதல் நேரத்துடன் செய்ய அனுமதிக்கிறது.

மீட்டிங் அசிஸ்டென்ட்

work meetings போன்றவைகளுக்கு தொடர்ச்சியாக ஸ்மார்ட்போனை பயன்படுத்துபவராக நீங்கள் இருந்தால், OPPO இன் புதிய உற்பத்தித்திறனை மையமாகக் கொண்ட மீட்டிங் அசிஸ்டண்ட் அம்சம் கண்டிப்பாக பேருதவியாக இருக்கும். ColorOS 13 இல் உள்ள அல்காரிதம் நடப்பு சந்திப்புகளை விர்ச்சுவல் மீட்டிங் அனுபவமாக மேம்படுத்தி வழங்குகிறது. அதேபோல் இந்த அல்காரிதம், நெட்வொர்க்கை மேம்படுத்தி ஆன்லைன் சந்திப்புகளுக்கு முன்னுரிமை வழங்குகிறது. அதேபோல் ஆன்லைன் மீட்டிங்கின் போது நோட்டிபிகேஷன்களை கட்டுப்படுத்தி கவனச்சிதறல்களை குறைக்கிறது.

அக்வாமார்பிக்-டிசைன் உடன் OPPO ColorOS 13: இதுவரை கண்டிராத அம்சங்கள்!

அக்வாமார்பிக் டிசைன்

புதிய ColorOS ஆனது கண்களுக்கு சௌகரியமாக காட்சி வண்ணங்களை மேம்படுத்தி வழங்குகிறது. அதேபோல் சந்தையில் உள்ள பெரும்பாலான தனிப்பயன் ஆண்ட்ராய்டு ஸ்கின்களில் இல்லாத வகையில் பல பயன்பாடுகளை சுலபப்படுத்தி வழங்குகிறது. ColorOS 13 ஆனது தனித்துவமான நடுநிலை நீல வண்ண தீம் கொண்டிருக்கிறது. இது தண்ணீர் நிறத்தில் காட்சியளிக்கிறது. சூரிய உதயம் மற்றும் அஸ்தமன வெளிச்சத்துக்கு ஏற்ப நீலத்தன்மை மங்கியும் வெளிச்சமாகவும் காட்சியளிக்கிறது. 'அக்வாமார்பிக் டிசைன்' லேங்குவேஜ் ஆனது காட்சிகளின் வண்ணங்கள், திரவத் தன்மை (Fludity) மற்றும் தடிமன் (Thickness)க்கு ஏற்ப பல்வேறு பண்புகளை உத்வேகப்படுத்தி வழங்குகிறது.

வடிவமைப்பின் ஒவ்வொரு அம்சமும்- typography, fonts, transitions, மற்றும் animation என அனைத்தையும் கண்களுக்கு ஏதுவாக மேம்படுத்தி வழங்குகிறது. டிஸ்ப்ளவின் ஒட்டுமொத்த பயன்பாட்டினை மேம்படுத்தி நுட்பமான வண்ணங்களின் மூலம் எழுத்துகளை தனிமைப்படுத்தி காட்டுகிறது.

ColorOS 13 இல் உள்ள புதிய தீம் பிளேட்டுகள் சிஸ்டம் விரும்பத்தக்க வகையில் இருக்கிறது. கண்களுக்கு சௌகரியமான வடிவமைப்பை இது கொண்டிருக்கிறது. ColorOS 13 இல் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் உரையை எளிதாகப் படிக்கலாம். புதிய கார்டு-பாணியிலான மெனு அமைப்புகள் தகவல்களை பயன்படுத்த மிகவும் வசதியாக இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட ப்ரைவேஸி மற்றும் செக்யூரிட்டி

OPPO தனியுரிமை (Privacy) மற்றும் பாதுகாப்பு (Security) பிரிவு சில அற்புதமான முன்னேற்றங்களைக் கொண்டிருக்கிறது. ColorOS 13 ஆண்ட்ராய்டு சுற்றுச்சூழல் அமைப்பில் இதுவரை கண்டிராத சில பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. சேட்டிங் ஸ்கிரீன்ஷாட்களில் அவதார்கள் மற்றும் புனைப்பெயர் (Nick Name)களை மங்கலாக்கும் புதிய 'ஆட்டோ பிக்சலேட்' அம்சம் மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. உங்கள் தொடர்பு அவதார்கள் மற்றும் புனைப்பெயர் (Nick Name)களை ஒரே தட்டு மூலம் மங்கலாக்க முடியும், இதனால் பயனர்களின் தனிப்பட்ட தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது. மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளிலும் ஆட்டோ பிக்சலேட் ஆதரவு ஆதரிக்கிறது.

நாங்கள் விரும்பிய மற்றொரு அம்சம் 'பிரைவேட் சேஃப் (Private Safe) ஆகும். JPEG files, documents, audio recordings உள்ளிட்டவைகளை சேமிக்க ColorOS 13 ஸ்மார்ட்போனில் பிரத்யேக இடம் இருக்கிறது. AES அல்காரிதம் மூலம் குறியாக்கம் செய்யப்பட்டு தரவுகளை பாதுகாப்பான இடத்தில் சேமிக்கப்படுகிறது. இதனால் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

ColorOS 13 உங்கள் கிளிப்போர்டு ஹிஸ்டரியை தானாக க்ளீன் செய்து தீம்பொருள் தாக்குதலில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. அருகில் உள்ள வைஃபை மிகவும் பயனுள்ள அம்சமாகும். இருப்பிட தகவலை வெளிப்படுத்தாமல் வைஃபை அணுகலை பயன்படுத்த இது அனுமதிக்கிறது.

OPPO சாதனங்களின் அம்சங்கள் மற்றும் செயல்திறன் ஆனது ஒரு சூப்பர் கம்ப்யூட்டிங் இயங்குதளத்துக்கு இணையாக இருக்கிறது. இது மென்மையான பயனர் அனுபவத்தை வழங்குகிறது. உலகெங்கிலும் உள்ள அதன் பயனர்களுக்கு சிறந்த-இன்-கிளாஸ் மொபைல் அனுபவங்களை உறுதிசெய்வது பிராண்டின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.

அக்வாமார்பிக்-டிசைன் உடன் OPPO ColorOS 13: இதுவரை கண்டிராத அம்சங்கள்!

ஆண்ட்ராய்டு 13 பீட்டா பதிப்பை அடிப்படையாகக் கொண்ட ColorOS 13 ஆனது செப்டம்பர் 2022 முதல் படிப்படியாக வெளிவரும். எனவே உங்களிடம் OPPO ஸ்மார்ட்போன் இருந்தால் உங்கள் ஸ்மார்ட்போன் அனுபவத்தை மறுவரையறை செய்ய நீங்கள் சமீபத்திய ColorOS 13 க்கு மேம்படுத்த வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Aquamorphic-Design Inspired OPPO ColorOS 13 Goes Official

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X