மலிவு விலையில் டூயல் ரியர் கேமராவுடன் விற்பனைக்கு வரும்அக்வா ஜாஸ்.!
அக்வா ஜாஸ் சாதனத்தில் 2800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.
அக்வா மொபைல்ஸ் நிறுவனம் மலிவு விலையில் டூயல் ரியர் கேமரா வசதியுடன் அக்வா ஜாஸ் எனும் ஸ்மார்ட்போன் மாடலை இந்திய மொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த சாதனம் 5-இன் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (1280-720)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, கருப்பு மற்றும் தங்க நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
இந்த அக்வா ஜாஸ் ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
அக்வா ஜாஸ் ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய ரியர் கேமரா 13 மெகாபிக்சல் மற்றும் முன்புற கேமரா 5மெகாபிக்சல் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்வா ஜாஸ் சாதனத்தில் 2800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
இந்த அக்வா ஜாஸ் சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.5,999-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications