15 விநாடியில் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு சொல்லும் ஸ்மார்ட்வாட்ச்: ஆப்பிள் அசத்தல் அறிவிப்பு!

|

இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளிவிடும்படியான புதிய அம்சத்தோடு ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச்சின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

டைம் ஃபிளைஸ் நிகழ்வு

டைம் ஃபிளைஸ் நிகழ்வு

ஆப்பிள் நிறுவனத்தின் டைம் ஃபிளைஸ் நிகழ்வில் ஆப்பிள் புதிதாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6, ஆப்பிள் வாட்ச் எஸ்இ, ஐபேட் 8th ஜென், மேம்பட்ட ஐபேர் ஏர், ஆப்பிள் ஒன் மற்றும் ஃபிட்னஸ் ப்ளஸ் போன்ற பல்வேறு சாதனங்களின் அம்சங்கள் குறித்து அறிவித்தது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 அம்சங்கள்

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 அம்சங்கள்

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 அம்சங்கள் குறித்து பார்க்கலாம். இதில் ஒரு சென்சார் அமைப்பு உள்ளது அது இரத்த ஆக்ஸிஜன் அளவை அளவிட அனுமதிக்கும். இது மணிக்கட்டின் மூலம் இரத்த அளவை கணக்கிடுகிறது. இருப்பினும் இது விரல் நுனியில் சேகரிக்கப்படும் அளவீட்டை விட குறைந்த துல்லியமாகவே கருதப்படுகிறது. விரல் நுனியில் கிளிப் பொருத்தப்பட்டு அளவிடுவதே இயல்பாகும். இது மணிக்கட்டின் மூலம் கணக்கிடப்படுகிறது.

இரத்த ஆக்ஸிஜன் அம்சங்கள்

இரத்த ஆக்ஸிஜன் அம்சங்கள்

முன்னதாகவே இரத்த ஆக்ஸிஜன் அம்சங்களை கொண்ட கார்மின் மற்றும் ஃபிட்பிட் பயன்படுத்தும் அதே உக்திகள்தான் இது. ஆப்பிள் வாட்சின் இரத்த ஆக்ஸிஜன் செனஅசார் மருத்துவ சாதனம் அல்ல, இதில் எந்த மருத்துவ நிலைமைகளையும் கண்டறியவோ அல்லது கண்காணிக்கவோ முடியாது. பயனர்கள் உடற்பயிற்சி செய்யும் போது ஆரோக்கியத்தை புரிந்துக் கொள்ள உதவும் வகையிலேயே உள்ளது.

செல்போனை திருடி செல்பி எடுத்த குரங்கு:செல்போன் எப்படி திரும்பக் கிடைத்தது தெரியுமா?- வீடியோ!

ஸ்விம் ஃப்ரூப் வசதி, எஸ்6 பிராசஸர்

ஸ்விம் ஃப்ரூப் வசதி, எஸ்6 பிராசஸர்

அதோடு இந்த வாட்சில் எஸ்6 பிராசஸர், சீரிஸ் 3 மாடலை விட இருமடங்கு வேகம், ஸ்விம் ஃப்ரூப் வசதி போன்ற அம்சங்களோடு கோல்ட், கிராஃபைட், ப்ளு, ப்ராடெக்ட் ரெட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை வெறும் பதினைந்து விநாடிகளில் இது கண்டறியும். இந்த ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ.40,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பிரத்யேக அம்சங்கள்

பல்வேறு பிரத்யேக அம்சங்கள்

அதோடு இந்த ஸ்மார்ட்போனில் சோலோ லூப், ப்ரெயிடெட் சோலோ லூப் மற்றும் லெதர் லின்க் ஸ்டிராப். ஃபேமிலி செட்ட அப் போன்ற பிரத்யேக அம்சங்கள் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple Watch Series 6 Allows to Measure Blood Oxygen Levels

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X