Home
Mobile

1 வருஷம் ஆகல அதுக்குள்ள Apple அடிச்ச ஜம்ப்.. iPhone 18 Pro மாடல்களில் முக்கிய மாற்றம்!

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் புதிய 2026 ஐபோன் மாடல்களுகாக காத்திருப்பவர்களுக்கு இன்னொரு குட் நியூஸ் என்பது போல ஐபோன் 18 சீரீஸின் (iPhone 18 Series) ப்ரோ மாடல்களில் இடம்பெறவுள்ள முக்கியமான "கேமரா" அப்கிரேட் குறித்த விவரங்கள் லீக் ஆகி உள்ளது.

சைனீஸ் லீக்கர் ஆன ஒய்லெப் (WhyLab) வழியாக கிடைத்துள்ள புதிய தகவலின்படி, ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) ஆகிய 2 மாடல்களுமே மேம்படுத்தப்பட்ட செல்பீ கேமராக்களை கொண்டிருக்கலாம்.

Apple அடிச்ச ஜம்ப்.. iPhone 18 Pro மாடல்களில் முக்கிய மாற்றம்!

அதாவது இந்த இரண்டு ப்ரோமாடல்களும் 24எம்பி செல்பீ சென்சார்களுக்கு மாறலாம். இது உண்மையாகும் பட்சத்தில் ஐபோன் 18 சீரீஸின் ப்ரோ மாடல்களின் செல்பீ கேமராக்களின் ரெசல்யூஷனில் மிகப்பெரிய அப்கிரேட் இருக்கும். முன்னதாக வெளியான ஐபோன் 17 சீரீஸ் மாடல்களின் முன்பக்க கேமராக்கள் 18எம்பி சென்சாராக அப்கிரேட் ஆனதும் இங்கே குறிப்பித்தக்கது.

நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 11 இல் இருந்து ஐபோன் 16 சீரீஸ் வரை 12எம்பி செல்பீ கேமராக்களையே ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தி வந்தது. அதை ஐபோன் 17 சீரிஸ் உடன் முடிவுக்கு கொண்டு வந்த வேகத்தில் ஐபோன் 18 சீரீஸில் இன்னொரு அப்கிரேட் கிடைப்பது என்பது ஐபோன் ரசிகர்களுக்கும், புகைப்பட விரும்பிகளுக்கும் உண்மையையே குட் நியூஸ் தான்.

24எம்பி ஆக அப்கிரேட் ஆவது செல்பீகள் மற்றும் வீடியோ கால்களின் விவரங்களை இன்னும் மேம்படுத்தக்கூடும், மேலும் போர்ட்ரெயிட் ஷாட்கள் மற்றும் லோ லைட் செயல்திறனுக்கும் இது உதவக்கூடும். ஜேபி மார்கன் (JP Morgan) மற்றும் விநியோக சங்கிலி ஆதாரங்களின் முந்தைய அறிக்கைகள் கூட ஐபோன் 18 ப்ரோ மாடல்களுக்கு 24எம்பி செல்பீ கேமராவின் சாத்தியக்கூறுகளை குறிப்பிட்டுள்ளன.

இருப்பினும் இப்போதைக்கு இதுவொரு லீக் தான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒய்லேப் வழியாக கிடைத்துள்ள தகவலை "இறுதியான முடிவு" என்று கருதுவது நல்லதல்ல. இன்னும் நிறைய (2026 செப். வரை) காலம் உள்ளது; நிறைய லீக்ஸ் வர உள்ளது.

மிகவும் நெருக்கமாக இருக்கும் ஐபோன் 17இ அறிமுகம்: செப்.2026 இல் வரவிருக்கும் புதிய ஐபோன் மாடல்கள் ஒருபக்கம் இருக்க, ஆப்பிள் இன்னும் சில நாட்களில் (அல்லது சில வாரங்களில்) தனது அடுத்த என்ட்ரி லெவல் ஐபோன் (Entry Level iPhone) மாடகல் ஆன ஐபோன் 17இ மாடலை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஆப்பிள் ஐபோன் 16இ (Apple iPhone 16e) மாடலுக்கு அடுத்தபடியாக வரும் ஐபோன் ஆகும். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16இ ஆனது கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது, ஆக இந்த 2026 ஆண்டும் "அதே நேரத்தில்" ஐபோன் 17இ மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின்படி, ஐபோன் 17இ மாடலில் அதிக மாற்றங்கள் இருக்காது. பெரும்பாலும் இது ஐபோன் 16இமாடலில் உள்ளதை போலவே - அதே டிஸ்பிளே, அதே சிங்கிள் ரியர் கேமரா, ஆக்‌ஷன் பட்டன் மற்றும் யுஎஸ்பி-சி போர்ட் ஆகியவற்றை தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் (Apple) நிறுவனம்.. இந்த பிப்ரவரி மாதத்திலேயே.. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இன்னும் சில நாட்களில் தனது அடுத்த என்ட்ரி லெவல் ஐபோன் (Entry Level iPhone) மாடலை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ஐபோன் 17இ மாடல் ஆகும்.

நினைவூட்டும் வண்ணம் ஆப்பிள் ஐபோன் 16இ (Apple iPhone 16e) மாடல் கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது, ஆக இந்த 2026 ஆண்டும் "அதே நேரத்தில்" ஐபோன் 17இ மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின்படி, ஐபோன் 17இ மாடலில் அதிக மாற்றங்கள் இருக்காது. பெரும்பாலும் இது ஐபோன் 16இமாடலில் உள்ளதை போலவே - அதே டிஸ்பிளே, அதே சிங்கிள் ரியர் கேமரா, ஆக்‌ஷன் பட்டன் மற்றும் யுஎஸ்பி-சி போர்ட் ஆகியவற்றை தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் அதே அறிக்கைகள், ஐபோன் 17இ மாடலில் 3 முக்கிய அப்கிரேட் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறுகிறது. முதலாவதாக - ஐபோன் 17இ மாடலில் ஆப்பிளின் ஏ19 சிப் பேக் செய்யப்படலாம். இது ஐபோன் 16இ மாடலில் உள்ள ஏ18 சிப் உடன் ஒப்பிடும் போது நல்ல மேம்படுத்தல் ஆகும். இதன் விளைவாக ஐபோன் 17இ மடலில் இன்னும் மேம்பட்ட செயல்திறன் கிடைக்கும்.

இரண்டாவதாக ஐபோன் 17இ மாடல் புதிய சி1எக்ஸ் மோடமை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஆப்பிள் ஐபோன் 16இ மாடலில் காணப்படும் சி1 மோடத்தை விட இரண்டு மடங்கு வேகமானது என்று கூறப்படுகிறது. மூன்றாவதாக ஐபோன் 17இ மாடல்ல வைஃபை 7 மற்றும் ப்ளூடூத் 6-ஐ ஆதரிக்கும் என்1 சிப்பும் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Apple to Upgrade iPhone 18 Pro Models Selfie Camera Into 24MP Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X