Home
Mobile

இந்தியாவில் ஐபோன் 5ஐ விற்பனை செய்யவிருக்கும் புதிய நிறுவனங்கள்

By Karthikeyan
இந்தியாவில் ஐபோன் 5ஐ விற்பனை செய்யவிருக்கும் புதிய நிறுவனங்கள்

தீபாவளி சமயத்தில் ஆப்பிள் தனது ஐபோ 5ஐ இந்தியாவில் களமிறக்க இருக்கிறது. இதற்கு முன்பு ஆப்பிளின் தயாரிப்புகளை இந்தியாவில் ஏர்செல் மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் விற்பனை செய்தன. ஆனால் இந்த புதிய ஐபோன் 5ஐ விற்பனை செய்ய வேறு நிறுவனங்களை ஆப்பிள் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்வதில் ஒரு மாற்றத்தை ஆப்பிள் எதிர்பார்க்கிறது. குறிப்பாக இந்தியாவின் குக்கிராமங்களில் வாழும் கடைக்கோடி இந்திய குடிமகனையும் ஆப்பிளின் ஐபோன் 5 சேரவேண்டும் என்று ஆப்பிள் விரும்புகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்காக இன்க்ராம் மைக்ரோ இன்க் மற்றும் ரெடிங்க்டன் இந்தியா லிமிடட் போன்ற நிறுவனங்களுடன் ஆப்பிள் வர்த்தக ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 5ஐ விற்பனை செய்யும்.

இந்த ஐபோன் 5 ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக 4 இன்ச், 326பிபிஐ ரெட்டினா டிஸ்ப்ளே, ஜிபிஆர்எஸ், எட்ஜ், இவி-டிஒ, எச்எஸ்பிஎ, எச்எஸ்பிஎ+, டிசி-எச்எஸ்டிபிஎ, எல்டிஇ, வைபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், 8எம்பி கேமரா, 1080பி எச்டி பதிவு, 720பி முகப்புக் கேமரா மற்றும் 16ஜிபி, 32ஜிபி மற்றும் 4ஜிபி மாடல்கள் போன்ற எல்லா வசதிகளையும் கொண்டிருக்கிறது.

இந்த மாத இறுதியில் இந்த ஐபோன் 5 விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X