Home
Mobile

Apple நீ அசத்து ராஜா.. 9GB RAM உடன் கம்மி விலைக்கு புது iPhone.. எந்த மாடல்?

மிகவும் நம்பகமான மற்றும் டிஎப் இன்டர்நேஷனல் செக்யூரிட்டீஸ் (TF International Securities) சேர்ந்த ஆப்பிள் ஆய்வாளர் ஆன மிங்-சி குவோ (Ming-Chi Kuo) வழியாக, ஆப்பிளின் அடுத்த ஐபோன் அறிமுகங்களின் திட்டங்கள் குறித்தும், குறிப்பாக விலை குறைவான மாடல்களில் நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்தும் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது.

எக்ஸ் (X) தளம் வழியாக குவோ பகிர்ந்துள்ள விவரங்களின்படி, ஸ்டாண்டர்ட் ஐபோன் 18 (iPhone 18) மற்றும் அதிகம் பேசப்படும் பட்ஜெட் விலை மாடல் ஆன ஐபோன் 18இ (iPhone 18e) ஆகிய இரண்டிலும் 9ஜிபி டிரேம் (9GB DRAM) இடம்பெறும்.

Apple நீ அசத்து ராஜா.. 9GB RAM உடன் கம்மி விலைக்கு புது iPhone!

நினைவூட்டும் வண்ணம், தற்போதைய ஐபோன் 17 (iPhone 17) மாடலின் பேஸிக் வேரியண்ட்டில் உள்ள 8ஜிபி-ஐ விட இது ஒரு சிறிய அதிகரிப்பு மட்டுமே ஆகும். ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18இ மாடல்களின் 9ஜிபி டிரேம் உடன், ஆப்பிளின் வரவிருக்கும் ஏ20 சிப்செட்டுடன் இணைக்கப்பட்ட ஆறு 1.5ஜிபி சிப்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக 8ஜிபி ரேம் ஆனது 12ஜிபி வரை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது மற்றும் சில லீக்ஸ்களும் வெளியாகி இருந்தன. 12ஜிபி ரேம் அளவிலான பெரிய அதிகரிப்பு ஆனது ஆன்-டிவைஸிலேயே (on-device) சிக்கலான ஏஐ (AI) செயல்பாடுகளை செயல்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்படும் கருதப்பட்டிருந்தது.

ஆனால், மெமரி தட்டுப்பாடு மற்றும் செலவு தொடர்பான நெருக்கடிகள் காரணமாக, ஆப்பிள் அந்த திட்டத்தை கைவிட்டு, ஸ்டெபிலிட்டிக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எழும் இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தால், ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18இ ஆகிய மாடல்களின் விலைகளையும் (பெரிதும் அதிகரிக்காமல்) கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

சிப் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை, ஏ20 சிப் ஆனது டிஎஸ்எம்சி-யின் மேம்பட்ட 2என்எம்(நானோமீட்டர்) தொழில்நுட்பத்திற்கு மாறுகிறது. ஏ19 சீரீஸ் உடன் ஒப்பிடுகையில், இது சுமார் 15% சிறந்த சிபியு (CPU) செயல்திறனையும், 30% வரை மேம்பட்ட ஆற்றல் திறனையும் (power efficiency) வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் அன்றாட பயன்பாட்டில் வேகம் அதிகரிப்பது, சிறந்த பேட்டரி லைப் மற்றும் எதிர்கால ஏஐ அம்சங்களுக்கான வலிமையான 'நியூரல் இன்ஜின்' (neural engine) ஆகியவை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இதற்கு மாறாக, ஹைஎண்ட் ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) மாடல்கள் மற்றும் ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோன் ஆன ஐபோன் அல்ட்ரா (iPhone Ultra) மாடல்கள் மிகவும் மேம்பட்ட கட்டமைப்பை கொண்டிருக்கும்.

அதாவது 12ஜிபி ரேம் மற்றும் சக்திவாய்ந்த ஏ20 ப்ரோ (A20 Pro) சிப் ஆகியவைகளை பேக் செய்யலாம். இந்த மாடல்கள் வழக்கம்போல 2026-ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் (fall season) அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18இ மாடல்கள் 2027 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குவோவின் கணிப்புகள் பெரும்பாலும் துல்லியமாக இருக்கும் என்பதால், ஆப்பிளின் அறிமுகத்திற்கு முன் திட்டங்கள் மாறக்கூடும் என்பதையும் நாங்கள் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். எனவே இந்த தகவல்களை எல்லாம் மேலோட்டமாக எடுத்துக்கொள்வது நல்லது. சாதாரண மாடல்களில் ரேம் அளவை பொறுத்தவரை ப்ரோ மாடல்களுக்கு இணையான வசதி கிடைக்காதது இது சிலருக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். இருப்பினும், மிக சமீபத்திய 'ஆன்-டிவைஸ்' ஏஐ திறன்கள் தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் ஐபோன்களை வழங்க இந்த சிறிய அளவிலான மேம்பாடு ஆப்பிளுக்கு உதவும்.

Best Mobiles in India

English summary
Apple to pack 9GB RAM in iPhone 18 and iPhone 18e Instead of 12GB Analyst Ming-Chi Kuo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X