Home
Mobile

அப்புறம் வருத்தப்படுவீங்க.. OFFER-ல கிடைக்குதுனு.. அவசரப்பட்டு பழைய iPhone-களை வாங்கிடாதீங்க. ஏன்னா?

iPhone SE 4 Launch: ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என.. ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் அனைத்து தளங்களும் தத்தம் பண்டிகை கால சிறப்பு விற்பனைகளை நடத்தி வருகின்றன.அவைகளில் உங்களுடை முழு கவனமும் ஐபோன்கள் மீதான சிறப்பு சலுகைகள் மற்றும் அபார தள்ளுபடிகள் மீது மட்டுமே இருக்கிறது என்றால்.. பழைய ஐபோன் மாடல்களை.. அதாவது ஐபோன் 13 (iPhone 13), ஐபோன் 14 (iPhone 14) மற்றும் ஐபோன் 15 (iPhone 15) மாடல்களை சற்றே மலிவான விலைக்கு வாங்க இதுவே சரியான நேரமாக இருக்கும்.

ஒருவேளை.. மலிவான விலைக்கு தான் ஐபோன் வேண்டும். ஆனால் அது பழைய மாடலாக இருக்க கூடாது என்பவர்கள்.. இன்னும் சிறிது காலம் காத்திருக்கலாம். ஏனென்றால் ஆப்பிள் நிறுவனம் அதன் மேம்படுத்தப்பட்ட ஐபேட் ஏர் (iPad Air) உடன் சேர்த்து மிகவும் எதிர்பார்க்கப்படும் நான்காம் தலைமுறை ஐபோன் எஸ்இ (iPhone SE fourth generation) மாடலை கூடிய விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

OFFER-ல கிடைக்குதுனு.. அவசரப்பட்டு பழைய iPhone-களை வாங்கிடாதீங்க!

அதாவது 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிள் நிறுவனம் புதிய எஸ்இ மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஐபோன் எஸ்இ 3 (iPhone SE 3) மாடல் ஆனது கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐபோன் எஸ்இ 4 எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:

ஐபோன் எஸ்இ 4 மாடல் ஆனது 2025 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஐபோன் எஸ்இ மாடலில் பழைய ஹோம் பட்டன் (Home Button) இடம்பெறாது என்றும், அதற்கு பதிலாக இது எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்பிளேவை (Edge to Edge Display) பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது ஐபோன் 14 மாடலை போன்ற பாடி மற்றும் டைனமிக் ஐலேண்ட்டை (iPhone 14 like bodya and Dynamic Island) கொண்டிருக்கும் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன

இருப்பினும் இது ஒரிஜினல் ஐபோன் 14 மாடலை போல டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) பேக் செய்யாமல் சிங்கிள் 48எம்பி ரியர் கேமராவை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் பேஸிக் ஐபோன் 16 (iPhone 16) மாடல்களில் பயன்படுத்தப்படும் புதிய ஏ18 சிப் (A18 Chip) கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிப்செட் தான் ஆப்பிள் இன்டெலிஜென்ஸை (Apple Intelligence) ஆதரிக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தற்போதைய ஐபோன் எஸ்இ 3 மாடல் ஆனது, ஹோம் பட்டனை உள்ளடக்கிய, ஆப்பிள் நிறுவனத்தின் கடைசி ஸ்டாண்டர்ட் வெர்ஷன் ஆன ஐபோன் 8 (iPhone 8) போலவே உள்ளது. இது ரூ.47,600 க்கு வாங்க கிடைக்கிறது. இது ஸ்டாண்டர்ட் ஐபோன்களின் விலைகளை விட குறைவானது; ஆனால் இதே பிரிவில் உள்ள பல போட்டியாளர்களை விட விலை அதிகமானது. புதிய 2025 ஐபோன் எஸ்இ மாடலின் விலை நிர்ணயமானது ரூ.49,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிளின் புதிய ஐபாட் ஏர் மாடல்களை பொறுத்தவரை, 11 இன்ச் மற்றும் 13 இன்ச் என 2 மாடல்கள் வெளியாகலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆப்பிள் ஏர் சீரிஸ் ஆனது எம்2 சிப் மூலம் அப்டேட் செய்யப்பட்டு, 13 இன்ச் ஸ்க்ரீன் விருப்பமும் சேர்க்கப்பட்டது. இதோடு புதிய ஐபேட் மினி மாடலும் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன் எஸ்இ மற்றும் ஐபேட் மாடல்களுக்கு அப்பால், ஆப்பிள் நிறுவனம் அதன் மேக் சீரீஸையும் அப்டேட் செய்து வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple to launch new iPhone SE 4th Generation without home button in early 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X