அடேங்கப்பா.. குட்டி 5.5-இன்ச் iPhone முதல் புது அல்ட்ரா வாட்ச் வரை.. 2026-ல் Apple இறக்கும் 15 தயாரிப்புகள்!
புதிய லீக்ஸ் மற்றும் அறிக்கைகள் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் 2026 தயாரிப்பு திட்ட வரைபடம் (Apple 2026 product roadmap) குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளது. அதாவது இந்த 2026 ஆம் ஆண்டிற்குள் ஆப்பிள் நிறுவனம் என்னென்ன புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் என்கிற விவரங்கள் கிடைத்துள்ளது
இதுகுறித்து கிடைத்த தகவல்கள் உண்மையாக இருந்தால், ஆப்பிள் நிறுவனம், சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் பரபரப்பான வெளியீட்டு காலங்களில் ஒன்றிற்கு தயாராகி வருகிறது. நெக்ஸ்ட் ஜெனெரஷன் ஐபோன் 18 ப்ரோ வரிசையின் மீதுதான் அதிக கவனம் இருக்கிறது.

இருந்தாலும் புதிய ஐபேட்கள், மேக் புக்குகள், வியரபிள்ஸ் டிவைஸ்கள் மற்றும் ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகள் உட்பட வரும் மாதங்களில் மட்டுமே மொத்தம் 15 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் தயாராகி வருவதாக புதிய லீக்ஸ் குறிப்பிடுகின்றன. எனவே, இந்த ஆண்டு முடிவதற்குள் மிகப்பெரிய ஹார்ட்வேர் அப்கிரேட் ஒன்று வருகிறது!
அந்த 15 க்கும் மேற்பட்ட புதிய ஆப்பிள் தயாரிப்புகள் என்னென்ன? முதலில் இருப்பது - உங்களுக்கே தெரியும், ஐபோன் 18 சீரீஸ். இதில் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகம். ஏனென்றால் இந்த மாடல்களில் - வடிவமைப்பு மற்றும் கேமரா தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் ஆப்பிள் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை திட்டமிட்டுள்ளதாக ஆரம்பகட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதிகம் பேசப்படும் மாற்றங்களில் ஒன்று, ஃபேஸ் ஐடி (Face ID) எலிமெண்ட்ஸ் டிஸ்பிளேவுக்கு கீழே நகர்த்தப்படுவதற்கான சாத்தியம் ஆகும். ஆப்பிள் இந்த தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினால், தற்போதைய டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island) வடிவமைப்பு சிறியதாக மாறக்கூடும் அல்லது முழுவதுமாக மறைந்துவிடவும் கூடும். செல்பீ கேமரா ஒரு சிறிய பஞ்ச்-ஹோல் (punch-hole) கட் வழியாக தெரியும் வகையில் இருக்கலாம். இந்த டிசைன் டிஸ்பிளேவை மிகவும் நேர்த்தியானதாக காட்டலாம்.
கேமரா அமைப்பிலும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்கள் எடுக்கும்போது, பயனர்களுக்கு லைட் மற்றும் டெப்த் விளைவுகள் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்கும் வகையில், ஆப்பிள் ஒரு வேரியபிள் அபெர்ச்சர் லென்ஸை (வஃariable aperture lens) அறிமுகப்படுத்தக்கூடும் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
லோ லைட் போட்டோ செயல்திறனை மேம்படுத்தக்கூடிய ஒரு புதிய இமேஜ் சென்சாரையும் (image sensor) கூட ஆப்பிள் நிறுவனம் சோதித்து வருவதாக கூறப்படுகிறது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ப்ரோ மாடல்களை ஆப்பிளின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஏ20 ப்ரோ சிப் (A20 Pro chip) கொண்டு இயங்கலாம். கடைசியாக சற்று ரிய ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலில் ஒரு பெரிய பேட்டரியையும் நாம் எதிர்பார்க்கலாம். இதன் விளைவாக அது சற்றே தடிமனான பாடியை பெறலாம்
இந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகப்படுத்த உள்ளதாக மீதமுள்ள தயாரிப்புகள்:
- ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோன்
- புதிய ஐபேட் 12
- நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஐபேட் மினி
- புதிய ஆப்பிள் மேக் சீரீஸ்
- புதிய மேக் ஸ்டுடியோ
- புதியமேக் மினி
- புதிய ஐமேக்
- ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12
- ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா
- புதிய ஸ்மார்ட் ஹோம் ஹப்
- ஆப்பிள் டிவி மற்றும் ஹோம்பாட் ஆகியவற்றின் புதிய வெர்ஷன்கள்
ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோனின் மாடல் பெயர் என்னவாக இருக்கலாம்? இது ஐபோன் அல்ட்ரா (iPhone Ultra) என்கிற பெயரின் கீழ் மார்க்கெட்டிங் செய்யப்பட்டு, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் சீரிஸில் மிகவும் பிரீமியம் மாடலாக (அதாவது விலை உயர்ந்த மாடலாக) நிலைநிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
