அடிச்சான் பாரு Apple.. iPhone யூசர்களே SIM கார்டுகளுக்கு குட்பை சொல்லிடுங்க!
ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் ஐபோன் 14 மாடலை அறிமுகப்படுத்தியதன் மூலம் - அதன் ஐபோன்களில் இசிம் ஒன்லி மாடலை அறிமுகப்படுத்தி இருந்தது. இதனால் பிஸிக்கில் சிம் ட்ரேவிற்கு வேலை இல்லாமல் போனது. இப்போது ஆப்பிள் நிறுவனம் அதேபோன்ற உத்தியை - அதன் ஐபோன் 18 சீரிஸில் செயல்படுத்த தயாராகி வருவதாக தெரிகிறது.
ஏன் இந்த நடவடிக்கை? சிம் ட்ரேயை அகற்றுவதன் மூலம் வரவிருக்கும் ஐபோன் 18 சீரிஸில் அதிக உள் இடத்தை கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஐபோன் 18 சீரீஸின் பேட்டரி அளவிற்கும் பங்களிக்கக்கூடும். நினைவூட்டும் வண்ணம் ஏற்கனவே ஐபோன் 17 மாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிஸிக்கில் சிம் கார்டுகளை ஆதரிக்கவில்லை.

எந்த நாடுகளில் ஐபோன் 18 சீரீஸ் இசிம்-ஒன்லி மாடல்களாக அறிமுகமாகும்? டெக்மேனியாக்ஸ் வெளியிட்டுள்ள ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனமானது ஐரோப்பாவில் இசிம்-ஒன்லி ஐபோன் 18 மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பிஸிக்கல் சிம் ட்ரேவை நீக்குவதன் மூலம், ஆப்பிள் அனைத்து ஐபோன் 18 தொடர் ஸ்மார்ட்போன்களிலும் பெரிய பேட்டரிக்காக உள் இடத்தை விடுவிக்க முடியும்.
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸின் உலகளாவிய மாறுபாடு 5100mAh முதல் 5200mAh வரை மதிப்பிடப்பட்ட பேட்டரி உடன் வரும் என்று வதந்தி பரவியுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இது ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் உள்ள பேட்டரி யூனிட்டை விட ஐந்து சதவீதம் அதிகமாகும்.
இசிம் அடிப்படையிலான மொபைல் திட்டங்களுக்கு மாறுவதால், பயனர்கள் பாரம்பரிய சிம் கார்டை செருகுவதற்கு பதிலாக, தங்கள் மொபைல் கேரியர் மூலம் டிஜிட்டல் முறையில் தங்கள் மொபைல் திட்டங்களை செயல்படுத்த வேண்டியிருக்கும். இந்த நடவடிக்கை உண்மையாக இருந்தால், அடிக்கடி தங்கள் சிம் கார்டுகளை மாற்றும் பயனர்களுக்கு இது சிரமமான காரியமாக இருக்கலாம். மேலும் சில பிராந்தியங்களில், புதிய இசிம்-ஐ வழங்குவதற்கு கேரியர்கள் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கிறது.
2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஐபோன் 14 சீரீஸை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் அதன் பிஸிக்கல் சிம் ட்ரேவை கைவிட்டது. அமெரிக்காவிற்கு வெளியே உள்ள பிற சர்வதேச சந்தைகளில், இந்நிறுவனம் இசிம் செயல்பாட்டுடன் கூடிய பிஸிக்கல் சிம் ஸ்லாட்டுடன் கூடிய ஐபோன் மாடல்களை கிடைக்கச் செய்தது. கடந்த ஆண்டு, ஆப்பிள் நிறுவனம் ஜப்பான், கனடா மற்றும் யுஏஇ போன்ற பல சந்தைகளில் இ-சிம் ஒன்லி ஐபோன் 17 மாடல்களை அறிமுகப்படுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இசிம் தொழில்நுட்பம் ஆனது பாரம்பரிய சிம் கார்டுகளுக்கு ஒரு வசதியான மாற்றாகும், மேலும் எளிதாக செயல்படுத்துதல் மற்றும் உடனடி செயலிழப்பு ஆகியவற்றை வழங்குகிறது. ஆனால் அடிக்கடி டிவைஸ்களை மாற்றுபவர்களுக்கு இது பொருத்தமானதல்ல.
ஐபோன் 17இ அறிமுகம்: நேற்று இரவு திடீரென்று, ஆப்பிள் (Apple) நிறுவனம் வருகிற மார்ச் 4 ஆம் தேதி ஒரு சிறப்பு நிகழ்வை (Special event) நடத்துவதாக அறிவித்து இருந்தது. ஆப்பிளின் இந்த நிகழ்வு நியூயார்க், லண்டன் மற்றும் ஷாங்காய் முழுவதும் காலை 9 மணிக்கு ET/2 PM GMT/10 PM CST மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த நிகழ்விற்கான சிறப்பு நேரடி ஒளிபரப்பு ஏதேனும் இருக்குமா என்பது குறித்த விவரங்கள் இல்லை.
ஆப்பிளின் இந்த வெளியீட்டு நிகழ்வில் "பட்ஜெட் விலையில்" புதிய ஐபோன் 17இ (iPhone 17e) உட்பட பல வகையான ஆப்பிள் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 17இ மாடல் ஆனது கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 16இ மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக வரும்.
இது ஆப்பிள் ஏ19 சிப்புடன் வரலாம் என்றும், இது செயல்திறன் அதிகரிப்பு மற்றும் பல மேம்பாடுகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது டைனமிக் ஐலேண்டுடன் கூடிய 6.1இன்ச் திரை மற்றும் ஐபோன் 17 சீரிஸில் காணப்படும் அதே 18MP செல்பீ கேமராவையும் கூட பேக் செய்யலாம். ரியர் பேனலில் சிங்கிள் 48MP கேமரா இருக்கலாம். இந்த மாடல் சுமார் $599 (ரூ.54,500) க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








