Home
Mobile

தாராளமா 1 மாசம் வெயிட் பண்ணலாமே.. Apple-ன் புதிய iPhone 17 Air மாடலின் விலை லீக் ஆனது!

ஆப்பிள் (Apple) நிறுவனம் ஆனது இன்னும் 1 மாதத்தில்.. அதாவது வருகிற செப்டம்பர் மாதத்தில் அதன் புதிய ஐபோன் 17 சீரீஸ் (iPhone 17 Series) மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது (விரைவில் தேதி அறிவிக்கப்படும்). இந்த சீரிஸின் ஹைலைட் ஆக - புத்தம் புதிய மாடல் ஆன ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) இருக்கும்; இது பிளஸ் மாடலுக்கு பதிலாக ஸ்லிம் ஆன மாடலாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஐபோன் 17 ஏர் மாடல் உட்பட மொத்த ஐபோன் 17 சீரீஸ் மீதும் நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் எகிறிக்கொண்டே போகின்ற நிலையில், ஜெஃப்பெரிஸ் ஆய்வாளர் ஆன எடிசன் லீ (Jefferies analyst Edison Lee) வழியாக அனைத்து ஐபோன் 17 சீரிஸ் மாடல்களின் விலை நிர்ணயம் (iPhone 17 Series Price) குறித்த தகவல்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

Apple-ன் புதிய iPhone 17 Air மாடலின் விலை லீக் ஆனது!

லீக் ஆன தகவல்களின்படி ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் சீரீஸிற்கான விலை உயர்வுகளை பரிசீலித்து வருகிறது. அதாவது அதிகரித்து வரும் காம்போனென்ட் செலவுகள் (Component costs ) மற்றும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் கட்டணப் போர் (Tariff war between the US and China) ஆகியவைகளின் விளைவாக ஐபோன் 17 சீரிஸ் ஆனது அதிக விலைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று பரிந்துரைக்கிறது.

ஆனால் வெண்ணிலா வேரியண்ட் ஆன ஐபோன் 17 மாடலின் விலை (iPhone 17 Price) ஆனது பழைய ஐபோன் 16 மாடலின் வெளியீட்டு விலையுடன் பொருந்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஜெஃப்பெரிஸ் ஆய்வாளர் ஆன எடிசன் லீயின் கூற்றுப்படி, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் உடன் ஒப்பிடும் போது ஐபோன் 17 சீரீஸ்-க்கான விலையை சுமார் $50 (தோராயமாக ரூ.4,000) உயர்த்த வாய்ப்புள்ளது.

இந்த கணிப்பு துல்லியமாக இருந்தால், ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro Price) மாடலின் விலை $1,049 (தோராயமாக ரூ.91,000) க்கு தொடங்கலாம், இது ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மாடலின் வெளியீட்டு விலையான $999 (தோராயமாக ரூ.87,000) விட அதிகமாகும்.

நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) $1,199 (தோராயமாக ரூ.1,00,700) க்கு அறிமுகமானது. இதனுடன் ஒப்பிடும்போது ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max Price) மாடலின் விலை $1,249 (தோராயமாக ரூ.1,09,000) ஆக இருக்கலாம்.

முன்னரே குறிப்பிட்டபடி இம்முறை ஐபோன் 17 பிளஸ் (iPhone 17 Plus) அறிமுகம் செய்யப்படாது; மாறாக புதிய ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air Price) மாடல் அறிமுகம் செய்யப்படலாம். இதன் ஆரம்ப விலை $949 (தோராயமாக ரூ.83,000) ஆக இருக்கலாம். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus) மாடல் ஆனது $899 (தோராயமாக ரூ.75,500) க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜெஃப்பெரிஸ் ஆய்வாளர் ஆன எடிசன் லீ வழியாக கிடைத்த இந்த லீக் தகவலில் இருக்கும் ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், இந்த ஆண்டு விலை உயர்வு இல்லாமல் அறிமுகமாகும் ஒரே ஐபோன் 17 சீரீஸ் மாடல் ஆக ஐபோன் 17 மாடல் இருக்கும். இது ஐபோன் 16 மாடலின் அதே வெளியீட்டு விலையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று ஆய்வாளர் லீ கூறுகிறார். அதாவது ஐபோன் 17 மாடல் $799 (தோராயமாக ரூ.67,100) க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple to Increase Prices for iPhone 17 Air iPhone 17 Pro iPhone 17 Pro Max Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X