Home
Mobile

புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் ஐபோன் 8 & ஐபோன் 8 பிளஸ்.!

ஐபோன் 8 பிளஸ் இரட்டை கேமரா கொண்டு வருகிறது. எப்/1.8 மற்றும் எப்/2.8 துளைகள் கொண்ட இதன் 12எம்பி கேமரா ஆழமான பிக்சல்கள் மற்றும் புதிய கலர் பில்டர்ஸ் கொண்டுள்ளது.

By Prakash S

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் மாடல்கள் அதிகவரவேற்பை பெற்றுள்ளது, குறிப்பாக இந்த ஆண்டு பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது ஆப்பிள் நிறுவனம். மேலும் அந்நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி இன்று முதல் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் சிவப்ப நிறங்களில் கிடைக்கும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் ஐபோன் 8 & ஐபோன் 8 பிளஸ்.!

ஐபோன் 8 ஆனது 4.7 இன்ச் டிஸ்ப்ளேவும் மறுகையில் ஐபோன் 8 பிளஸ் ஆனது 5.5 அங்குல டிஸ்ப்ளேவும் கொண்டுள்ளது. புதிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் சக்திவாய்ந்த ஏ11 பியோனிக் சிப் ஆகிய அம்சங்கள் இந்த புதிய மாறுபாடுகளில் இடம்பெற்றுள்ளன. ஏ11 பியோனிக் சிப் கொண்டு இயங்கும் ஐபோன் 7-ஐ இவிட இந்த சிப் 70 சதவீதம் வேகமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 8 பிளஸ் இரட்டை கேமரா கொண்டு வருகிறது. எப்/1.8 மற்றும் எப்/2.8 துளைகள் கொண்ட இதன் 12எம்பி கேமரா ஆழமான பிக்சல்கள் மற்றும் புதிய கலர் பில்டர்ஸ் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமரா 240 ப்ரேம் பெர் செகண்ட் என்ற அளவிலான 1080எச்டி ஸ்லோ மோஷன் வீடியோக்களை கைப்பற்றவும் உதவும்.

மேலும் இந்த ஆப்பிள் ஐபோன் சாதனங்களில் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும், அதன்பின்பு அட்டகாசமான எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் ஐபோன் 8 & ஐபோன் 8 பிளஸ்.!

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் இரண்டுமே வயர்லெஸ் சார்ஜ் அம்சம் கொண்டுள்ளது .ஐபோன் 8 மற்றும் 8 பிளஸ் ஆகியவைகள் முறையே 32 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆகிய சேமிப்பு மாதிரிகளில் கிடைக்கின்றன.

குறிப்பாக ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் சாதனங்கள் ஆப்பிள் ஐஒஎஸ் 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் சாதனங்கள்.

How to check PF Balance in online (TAMIL)

டச் ஐடி, கைரேகை சென்சார், ஹோம் பட்டன், வைபை, ப்ளூடூத் 5.1, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆப்பிள் ஸ்மார்ட்போன் மாடல்கள். மேலும் இந்த சாதனங்களின் விலை சற்று உயர்வாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Apple tipped to launch special iPhone 8 8 Plus Red edition today; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X