விற்பனைக்கு வந்த ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர்.! ஆனா ஒரு சிக்கல்.!
ஆப்பிள் நிறுவனத்தின், புதிய ஆப்பிள் எக்ஸ்.ஆர் ஐபோன் விற்பனை இன்று முதல் இந்திய சந்தையில் துவங்குகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின், புதிய ஆப்பிள் எக்ஸ்.ஆர் ஐபோன் விற்பனை இன்று முதல் இந்திய சந்தையில் துவங்குகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆன்லைன் ஆப்பிள் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர்
ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர், உள்ளூரில் உள்ள அனைத்து ஆப்பிள் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என்பது கொஞ்சம் சந்தேகத்திற்குரியதே. இன்னும் இந்தியாவில் உள்ள பல ஆப்பிள் ஸ்டோர்களில், இந்த புதிய ஐபோன் மாடல் ஸ்டாக்கள் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

ஆப்பிள் ஸ்டோர் ஸ்டாக் நிலவரம்
இன்னும் சில ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் விற்பனையாளர்களும் கூட, இன்னும் எக்ஸ்.ஆர் ஐபோன் ஸ்டாக் லோக்கல் பிக்கப்களுக்கு கிடைக்கவில்லை என்றே தெரிவித்திருக்கிறது. முக்கிய நகரங்களில் இருக்கும் பெரிய ஆப்பிள் ஸ்டோர்களில் நிச்சயம் இன்று முதல் விற்பனைக்குக் கிடைக்குமென்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ப்ரீ-ஆர்டர்
ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர் போன்களை ஆப்பிள் இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ப்ரீ-ஆர்டர் செய்தால் மூன்று முதல் ஐந்து நாட்களில் கிடைக்கும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐபோன் கேஸ்
ஆப்பிள் ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே மனவருத்தம், இன்னும் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர் போன்னிற்கு உரிய அதிகாரப்பூர்வ மொபைல் கேஸ்களை வெளியிடாதது தான். இன்னும் ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர் போனிற்கான கிளியர் கேஸ் ஆன்லைன் மற்றும் ஸ்டோர்களில் விற்பனைக்காகக் கொண்டுவரப்படவில்லை. இதுதான் ஆப்பிள் ரசிகர்களுக்கு ஒரு சிக்கலாக தற்பொழுது அமைந்துள்ளது.

விலை
ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர் போன் இன் 64ஜிபி வேரியண்ட் மாடல் வெறும் ரூ.76,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் 128 ஜிபி வேரியண்ட் போன் வெறும் ரூ. 81,900 க்கும், 256 ஜிபி வேரியண்ட் போன் வெறும் ரூ. 91,900 என்ற விலையில் இன்று முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த புதிய ஐபோன் வைட், பிளாக், ப்ளூ, கோரல் மற்றும் ரெட் நிறத்தில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








