Home
Mobile

குறிப்பிட்ட ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்: ஏன் தெரியுமா?

உலகம் முழுவதும் ஐபோன்களை அதிகளவில் தான் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விடக் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த ஐபோன் சாதனங்கள் வெளிவருவதால் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ்

ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ்

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் எஸ், போன்ற மாடல்களை அறிமுகம் செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது, இதனால் இந்தியாவில் இவற்றின் விற்பனையை நிறுத்திக்
கொள்வதாக ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிரீமியம் ஐபோன் மாடல்

பிரீமியம் ஐபோன் மாடல்

குறிப்பாகப் பழைய ஐபோன் மாடல்களின் விற்பனையை நிறுத்திவிட்டு பிரீமியம் ஐபோன் மாடல்களின் மீது அதிக கவனம் செலுத்த இருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் நிறுத்தப்போவதாகக் குறிப்பிட்டிருக்கும் நான்கு ஐபோன் மாடல்களும் திரும்பப் பெறப்பட்டன.

வருவாய் அதிகரித்துள்ளது

வருவாய் அதிகரித்துள்ளது

மேலும் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் துவக்க மாடல் ஐபோனாக ஐபோன் 6எஸ் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. விற்பனை நிறுத்தம் பற்றி வினியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை குழுவினருக்கு ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டு விட்டது, இந்தியாவில் ஐபோன் எக்ஸ்ஆர் விலை குறைக்கப்பட்டது முதல் ஐபோன் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்துள்ளது என அந்நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.

பை-பேக் மற்றும் கேஷ்பேக்

பை-பேக் மற்றும் கேஷ்பேக்

இந்த புதிய நடவடிக்கை மூலம் ஆப்பிள் நிறுவனம் பிரீமியம் ஐபோன் மாடல்களில் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாகத் தெரிகிறது. மேலும் ஐபோன் மாடல்களை வாங்குவோருக்கு பை-பேக் மற்றும் கேஷ்பேக் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கத் திட்டமிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

 ஐபோன் எக்ஸ்எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்எஸ்

ஐபோன் எக்ஸ்எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்எஸ்

தற்சமயம் இந்த பை-பேக் மற்றும் கேஷ்பேக் போன்ற சலுகைகள் ஐபோன் எக்ஸ்எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் மாடல்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த மாதம் விற்பனைக்கு வரும்

அடுத்த மாதம் விற்பனைக்கு வரும்

ஒரு முக்கிய சிறப்புத் தகவல் என்னவென்றால் ஆப்பிள் நிறுவனம் முதன் முறையாகத் தனது ஐஒஎஸ் 13 தளத்தை இந்திய வாடிக்கையாளர்களுக்கென கஸ்டமைஸ் செய்ய இருக்கிறது. இந்த புதிய தளத்தை 22 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படும். பிறகு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன்கள் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple stops shipments of iPhone SE, 6, 6 Plus, 6s Plus in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X