அப்படியே நிறுத்துங்க! இனி ஆபர் விலையில் iPhone தேடாதீங்க.. ஆப்பிளின் இந்த புது பட்ஜெட் மாடலை பாருங்க!
புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகமானதும் அல்லது அடுத்த ஐபோன் மாடல்கள் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்றதும்.. அதற்கு முன் வெளியான ஐபோன்களின் மீது விலைகுறைப்புகள், சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்படுவது மிகவும் வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம் தான்.
பெரும்பாலான பட்ஜெட்வாசிகள் அதுபோன்ற தருணங்களுக்காகத்தான் காத்திருப்பார்கள். ஏனென்றால் ஆபர்கள் அறிவிக்கப்படும் போது ஆப்பிள் ஐபோன்களை மிகவும் குறைவான விலைக்கு வாங்க முடியும். ஆனால் இனிமேல் அதுபோன்ற ஆபர்களுக்கு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஏனென்றால்.. ஆப்பிள் மீண்டும் பட்ஜெட் விலை ஐபோன் தயாரிப்பில் இறங்கியுள்ளது!
ஆம்! ஆப்பிள் அதன் ஐபோன் எஸ்இ (iPhone SE) சீரிஸின் கீழ் புதிய மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. அது ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) மாடலாகும். ஆப்பிளின் ஒவ்வொரு நகர்வையும் வெளிப்படுத்தும் மிங்-சி குவோவின் சமீபத்திய அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனம் "மீண்டும்" பட்ஜெட் விலை ஐபோன்களை தயாரிக்க தொடங்கியுள்ளது.
iPhone SE 4 இல் ஆப்பிளின் சொந்த 5ஜி மோடம் இடம்பெறும்
மிங்-சி குவோவின் கூற்றுப்படி ஐபோன் எஸ்இ 4 மாடலானது ஆப்பிள் உருவாக்கிய 5ஜி மோடமை பேக் செய்யும் முதல் ஐபோனாக இருக்கும். ஆக ஐபோன் எஸ்இ 4 மாடலின் அறிமுகத்திற்கு பின்னர் வெளியாகும் ஐபோன்களில் ஆப்பிளின் சொந்த 5ஜி மோடம் பயன்படுத்தப்படும் என்பதை வெளிப்படையாக அறிய முடிகிறது!
iPhone SE 4 ஒரு பெரிய டிஸ்பிளேவை பேக் செய்யும்
மிங்-சியின் சமீபத்திய அறிக்கையானது, ஐபோன் எஸ்இ 4-ல் 6.1-இன்ச் அளவிலான டிஸ்பிளே இடம்பெறலாம் மற்றும் அது முந்தைய லீக்ஸ் தகவல்களின்படி எல்சிடி ஸ்க்ரீனாக (LCD Screen) இல்லாமல், ஓஎல்இடி பேனலை (OLED Panel) பேக் செய்யலாம் என்கிறது. அதாவது இது "சிறிய மாற்றங்களுடன்" ஐபோன் 14-ஐ போலவே இருக்கும்!
iPhone SE 4-ன் வடிவமைப்பு மற்றும் கேமரா
ஐபோன் எஸ்இ 4-இன் ஒட்டுமொத்த வடிவமைப்பும் ஐபோன் எக்ஸ்ஆர் (iPhone XR0 மாடலை போலவேத்தான் இருக்கும். கூடவே சில சிறிய மாற்றங்களும் இருக்கும். இருப்பினும் இது ஐபோன் 12-ஐ போலவே பிளாட் ஆன ஃபிரேமை கொண்டிருக்குமா அல்லது ஐபோன் எக்ஸ்ஆர் அல்லது ஐபோன் 11-ஐ போன்ற கர்வ்டு டிசைனை கொண்டிருக்குமா என்பதில் தெளிவு இல்லை.
ஐபோன் எஸ்இ 4-ன் முன்பக்கத்தில் ஃபேஸ் ஐடி (Face ID) அம்சம் இடம்பெறும். கூடவே ஐபோன் 14-ல் உள்ளதை போன்ற நாட்ச் டிசைனும் இடம்பெறும். பின்பக்கத்தை பொறுத்தவரை, சிங்கிள் ரியர் கேமரா பேக் செய்யப்படலாம். இருப்பினும் அது என்ன மாதிரியான சென்சார் உடன் வரும் என்பது பற்றிய போதுமான தகவல் இல்லை!
iPhone SE 4 எப்போது அறிமுகமாகும்.. என்ன விலைக்கு வரும்?
கிடைக்கப்பெற்ற தகவலின்படி ஐபோன் எஸ்இ 4 மாடலின் உற்பத்தியானது வருகிற 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தொடங்கும். பின்னர் இது 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் விற்பனைக்கு வரும். எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஐபோன் எஸ்இ 4-இன் இந்திய விலை ரூ.49,999 ஆக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications