இந்தியாவில் ஐபோன் உற்பத்தி ஆரம்பம் - இந்தியர்களுக்கு என்ன சலுகைகள்.?

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியை தொடங்க ஏன் இவ்வளவு குறியாக உள்ளது.? ஆப்பிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலம் இந்தியர்களாகிய நமக்கு என்னென்ன லாபங்கள்.?

|

பல வகையான போராட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களுக்கு பின்னர் ஆப்பிள் நிறுவனத்தின் 'உள்ளூர் கடை'யான ஆப்பிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் உருவாகிவிட்டது. மிக விரைவில் பெங்களூரில் உள்ள அதன் தைவான் உற்பத்தி பங்குதாரர்களுடன் (விஸ்ட்ரான்) இணைந்து ஒரு ஆலையில் ஐபோன்கள் தயாரிக்கப்படுகின்றன.

விஸ்ட்ரான் நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி ஐபோன் எஸ்இ கருவிகளின் பாகங்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உயர்ந்து வரும் தொழிலாளர் செலவுகள் காரணமாக ஆப்பிள் நிறுவனம் அதன் சீன உற்பத்தி அலகுகள் சிலவற்றை இந்தியாவிற்கு மாற்ற கூடும் என்றும் நம்பப்படுகிறது.

அவைகளெல்லாம் ஒருபக்கம் இருக்க இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியை தொடங்க ஏன் இவ்வளவு குறியாக உள்ளது.? ஆப்பிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலம் இந்தியர்களாகிய நமக்கு என்னென்ன லாபங்கள்.?

உள்ளூர் உற்பத்தி

உள்ளூர் உற்பத்தி

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐபோன் எஸ்இ கருவி வெளியானது. நான்கு அங்குல ஸ்மார்ட்போன் ஆன அதன் 16B பதிப்பின் விலை ரூ.39,000/- என்ற 'பெரிய அளவிலான' விலை நிர்ணயம் பெற்றது. தற்போது, இ-காமர்ஸ் இணையதளங்களில் ரூ.30,000/- என்ற விலையில் கிடைக்கும் இந்த கருவி உள்ளூர் உற்பத்தி தொடங்கிய பின்னர் மேலும் செலவுகளை குறைக்க முடியும், அதனால் கருவியின் விலை நிர்ணயமும் தானாகவே குறையும்.

விலை

விலை

ஐபோன்களின் அளவுகடந்த விலைக்கு முக்கிய காரணமாக, அவைகள் அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டு மற்றும் சீனாவில் தயாரிக்கப்படும் கருவிகளாக திகழ்வதால் தான், இறக்குமதி வரிகள் மற்றும் இதர வரிகள் என அதன் விலை அதிகபட்ச ஸ்மார்ட்போன் கருவியின் விலையாக உள்ளது. ஒருவேளை ஐபோன்கள் இந்தியா செய்யப்படுகின்றன என்றால், அதன் உலக சுற்றுப்பயணம் (வரிகள்) கழித்தல் போக ஐபோன்கள் இந்தியாவில் நல்லதொரு மலிவான விலை கருவியாக மாறும்.

எளிமை

எளிமை

ஐபோன்கள் ஒரு குறிப்பிட்ட விநியோகஸ்தர்கள் மூலம் எண்ணிக்கையிலான அலகுகள் மட்டுமே வாங்கப்பட்டு மற்றும் நாட்டில் விற்கப்படுகின்றன. ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆப்லைன் மற்றும் ஆன்லைன் விநியோகஸ்தர்கள் ஆகிய இரண்டுமே உண்டு என்றாலும் கூட சில நேரங்களில் ஐபோன்கள் கிடைப்பதில் பல சிக்கல்கள் உள்ளது.

சிக்கல்கள்

சிக்கல்கள்

குறிப்பாக ஆன்லைன் விற்பனையாளர்கள் மூலம் சர்வீஸ் செய்யப்பட மாட்டாது என்ற நிலையில் மறுபக்கம் ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் கிடையாது என்பதால் பழுது மற்றும் மாற்று அல்லது கூறுகள் கிடைக்காமல் போவது போன்ற பல சிக்கல்கள் ஆப்பிள் கருவிகளில் உள்ளன. ஒருவேளை இந்தியாவில் ஐபோன்கள் தயாரிக்கப்பட்டால் இந்த அணைத்து சிக்கல்களும் எளிமையாக தீரும்.

சொந்த கடைகள்

சொந்த கடைகள்

பொதுவாக, சந்தையில் அறிமுக தினத்தன்று ஆப்பிள் ஸ்டோர்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் நின்று கருவிகளை வாங்குவது வழக்கமான ஒரு விடயமாகும். ஆப்பிள் நிறுவனம் நாட்டில் அதன் உற்பத்தியை தொடங்குகிறது என்றால், அந்த நிறுவனம் தனது சொந்த கடைகள் இங்கு அமைக்க வேண்டும். அதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு விநியோகஸ்தரக மையங்கள் வெளியே வாடிக்கையாளர்கள் வரிசையில் நில்லாமல் நேரடியாக கடைகளில் இருந்து ஐபோன்களை வாங்கலாம்.

மூன்றாவது மண்டலமாகும்

மூன்றாவது மண்டலமாகும்

ஆப்பிள் ஒரு புதிய தயாரிப்பின் அறிவிப்பு வெளியிட்ட பின் நமது காத்திருப்பு தொடங்குகிறது. காத்திருப்பு என்றால் புதிய கருவி ஆப்பிள் ஸ்டோர்களை அடைய வேண்டும் பின்னர் மற்ற நாடுகளுக்கு ஷிப்பிங் செய்யப்பட வேண்டும் என்று அர்த்தம். ஆப்பிள் நிறுவனம் அதன் கருவிகள் சார்ந்த ஷிப்பிங் பணியை நிகழ்த்த உலக நாடுகளை மூன்று மண்டலங்களாக பிரித்துள்ளது அதில் இந்தியா மூன்றாவது மண்டலமாகும்.

ஷிப்பிங்

ஷிப்பிங்

இந்தியாவில் ஐபோன் விநியோக மற்றும் வெளியீட்டு காலவரிசையல் முன்னேற்றம் இருக்கிறது என்றாலும் கூட அது இன்னும் திருப்திகரமானதாக இல்லை. ஒருவேளை ஆப்பிள் இந்தியாவில் அதன் பொருட்களின் உற்பத்தியை தொடங்குகிறது என்றால், நாம் ஷிப்பிங் நடக்கும் காலம் வரை காத்திருக்க அவசியம் இருக்காது.

விரைவில்

விரைவில்

நாட்டில் பெரும்பாலானோர்கள் ஐபோன்களை இரண்டு காரணங்களுக்காக சர்வதேச சந்தைகளில் இருந்து வாங்குகின்றர். ஒன்று மலிவான விலை மற்றும் இரண்டாவது கருவிகள் விரைவில் ஷிப்பிங் செய்யப்படும் என்பதால் தான் வாங்கப்படும் அலகுகளுக்கு எந்த விதமான உத்தரவாதம் இல்லை என்றாலும் கூட மக்கள் சர்வதேச சந்தைகளில் இருந்து ஐபோன்களை வாங்க விரும்புகின்றனர்.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

ஒருவேளை ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டால் சர்வதேச கொள்முதல் நிச்சயமாக கீழே இறங்கும், மக்கள் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்ற ஐபோன்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பர்.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

இந்தியாவில் தயாரிப்பு மேற்கொள்ளவதின் மூலம் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனமும் சிறந்த இலாபங்களை அனுபவிக்கும். அதாவது இறக்குமதி வரிகள் மற்றும் இதர வரிகள் நீக்கப்படும், ஆப்பிள் கப்பல் செலவுகளில் ஒரு கணிசமான அளவு சேமிக்க முடியும். விலை குறைக்கப்பட்டாலும் இந்தியாவில் கருவிகள் செய்யப்படுகின்றன என்பதால் ஐபோன்களின் வருவாயில் கணிசமான உயர்வு இருக்கும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

நோக்கியா கருவிகளை கண்டு ஆப்பிள் 'மிரண்டுவிட்டது' போலும்.!

Best Mobiles in India

English summary
Apple to start India manufacturing soon with iPhone SE. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X