Home
Mobile

Apple SE 2020 என்ற குறைந்த விலை என்ட்ரி லெவல் ஐபோன் பற்றி தெரியுமா? விரைவில் அறிமுகம்!

ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்த விலை என்ட்ரி லெவல் ஐபோன் மாடலான ஐபோன் SE 2020 மாடலை விரைவில் அறிமுகம் செய்யப்போவதாக ஆப்பிள் நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாகவே ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடலின் பெயரை தனது ஆப்பிள் வலைத்தளத்தில் ஏற்கனவே வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஐபோன் மாடலின் விபரங்களைப் பார்க்கலாம்.

அடுத்த ஐபோன் மாடல்

அடுத்த ஐபோன் மாடல்

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன் மாடல் ஐபோன் 9 என அழைக்கப்படும் என பரவலாகக் கூறப்பட்டு வந்தது, எனினும், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் எஸ்இ மாடலுக்கு மேம்பட்ட ஒரு புதிய வெர்ஷனை உருவாக்கி வருவதாகத் தெரிகிறது.

அனைவரின் கரங்களுக்கும் ஆப்பிள் சென்றடைய வேண்டும்

அனைவரின் கரங்களுக்கும் ஆப்பிள் சென்றடைய வேண்டும்

புதிய மாடல் வளரும் நாடுகளைக் குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்று தகவல் குறிப்பிடுகிறது. குறைந்த விலையில் அனைவரின் கரங்களுக்கும் ஆப்பிள் சென்றடைய வேண்டும் என்று நிறுவனம் இம்முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

புதிய ஐபோன் SE 2020

புதிய ஐபோன் SE 2020

இந்த புதிய ஐபோன் SE 2020 மாடல் பார்ப்பதற்கு ஐபோன் 7 அல்லது ஐபோன் 8 சீரிஸ் போன்களை போன்று இருக்கும் என்று கிடைத்திருக்கும் தகவல்களின் படி கூறப்படுகிறது. இந்த புதிய ஐபோன் SE 2020 போனின் சிறப்பம்சங்களைப் பொருத்தவரை 4.7' இன்ச் எல்.சி.டி. பேனல், டச் ஐடி ஹோம் பட்டன், 3 ஜி.பி. ரேம், ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் மற்றும் சிறப்பான கேமரா அம்சத்துடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தோற்றத்தில் புதிய ஐபோன்

புதிய தோற்றத்தில் புதிய ஐபோன்

இந்த புதிய ஐபோன் SE 2020 போனில் புகைப்படங்களை எடுக்க ஒற்றை பிரைமரி கேமரா சென்சாருடன், டச் ஐடி பட்டன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக 2016 மார்ச் மாதத்தில் ஐபோன் 5எஸ் மாடலில் புதிய அம்சங்களை சேர்த்து ஐபோன் எஸ்இ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அந்த வரிசையில் ஐபோன் எஸ்இ 2020 மாடலும் ஐபோன் 11 மாடலில் ஐபோன் 7 ரக அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன விலையில் அறிமுகம் செய்யப்படும்?

என்ன விலையில் அறிமுகம் செய்யப்படும்?

புதிய ஐபோன் SE 2020 மாடல் போன் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதன் தொடக்க விலை சுமார் 399 டாலர்கள் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஐபோன் SE 2020 போனின் மற்ற கூடுதல் விபரங்கள் இந்த வாரத்தில் வெளியிடப்படும் என்பதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை சற்று காத்திருக்கலாம். தகவல் கிடைத்ததும் உடனே உங்களுக்கு அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
Apple SE 2020 iPhone May Get Launched On April : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X