Home
Mobile

ஏப்.15 வரை ஸ்பெஷல் சேல்.. iPhone 16 உட்பட 3 ஐபோன்கள் மீது மெகா விலை குறைப்பு.. பேங்க் ஆபரும் அறிவிப்பு!

ஐபோன் 16இ (iPhone 16e) அறிமுகமானாலும் ஆனது, சில பிளாக்ஷிப் ஐபோன் மாடல்களின் மீது அவ்வப்போது திடீர் விலைக்குறைப்புகளை காண முடிகிறது. அப்படியாக தற்போது ஐபோன் 15, ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் மாடல்கள் மீது திடீர் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது

ஒருவேளை நீங்கள் உங்களுடைய பழைய ஐபோன் மாடலை அப்கிரேட் செய்ய விரும்பினால் அல்லது ஆண்ட்ராய்டில் இருந்து ஐஓஎஸ்-க்கு மாற விருப்பினால், அதற்கு இதுவே சிறந்த நேரமாக இருக்கலாம். ஆப்பிள் நிறுவனத்தின் பிரீமியம் ரீசெல்லர் ஆன iNvent, அதன் பிக் டீல் டேஸ் விற்பனையின் (Big Deal Days Sale) ஒரு பகுதியாக ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 16 (iPhone 16) மற்றும் ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus) ஆகிய மாடல்கள் மீது தள்ளுபடியை அறிவித்துள்ளது.

iPhone 16 உட்பட 3 ஐபோன்கள் மீது மெகா விலை குறைப்பு!

ஏப்ரல் 15 வரை செல்லுபடியாகும் இந்த லிமிடட் டைம் ஆபரின் கீழ், மேற்குறிப்பிட்ட 3 ஐபோன் மாடல்களையும், முன்னெப்போதும் இல்ல அளவிலான மிக குறைந்த விலைக்கு வாங்க முடியும். நேரடி தள்ளுபடியை தவிர்த்து கூடுதலாக வங்கி தள்ளுபடிகளும் (Bank Offers) கிடைக்கிறது. என்னென்ன மாடல்கள் மீது என்னென்ன ஆபர்கள் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

ஐபோன் 15 மீதான ஆபர்கள் (Offers on iPhone 15): கடந்த 2023 இல் ரூ.79,900 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 15 மாடல் ஆனது தற்போது ரூ.17,000 தள்ளுபடியை பெற்று, ரூ.62,900 க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் நீங்கள் ஐசிஐசிஐ (ICICI), கோடாக் (Kotak) அல்லது ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) கிரெடிட் கார்டை பயன்படுத்தினால், கூடுதலாக ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கும். இப்படியாக ஐபோன் 15 மாடலின் ஃபைனல் ஆபர் ப்ரைஸ்-ஐ ரூ.59,900 க்கு கொண்டுவரலாம். அதாவது சமீபத்தில் அறிமுகமான ஐபோன் 16இ மாடலின் விலைக்கு கொண்டுவரலாம்.

ஐபோன் 15 மாடலின் முக்கிய அம்சங்கள் (iPhone 15 Major Specifications): இது டைனமிக் ஐலேண்ட் நாட்ச் உடனான 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஏ16 பயோனிக் சிப் மூலம் இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 12எம்பி அல்ட்ரா-வைட் சென்சார் கொண்ட 48எம்பி ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது. இது யூஎஸ்பி-சி சார்ஜிங் ஆதரவையும் வழங்குகிறது.

ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் மீதான ஆபர்கள் (Offers on iPhone 16 and iPhone 16 Plus): ஐபோன் 16இ மாடலுக்கு முன்ன அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 16 ஆனது முதலில் ரூ.79,900 என்கிற விலையின் கீழ் வாங்க கிடைத்தது. இப்போது ரூ.9,400 பிளாட் தள்ளுபடிக்கு பிறகு ரூ.70,500 க்கு வாங்க கிடைக்கிறது. வங்கி சலுகைகளுடன் இந்த விலையை மேலும் குறைத்து ரூ.66,500 க்கு கொண்டுவர முடியும்

இதேபோல ரூ.89,900 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட சற்றே பெரிய ஐபோன் 16 பிளஸ் மாடல் ஆனது இப்போது ரூ.80,500 க்கு விற்கப்படுகிறது. மேலும் ரூ.4,000 பேங்க் ஆபர் உடன், ஐபோன் 16 பிளஸ் மாடலின் இறுதி சலுகை விலையை ரூ.76,500 க்கு கொண்டு வர முடிகிறது.

ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ் மாடல்களின் முக்கிய அம்சங்கள் (iPhone 16, iPhone 16 Plus Major Specifications): ஐபோன் 16 மற்றும் 16 பிளஸ் ஆகிய இரண்டும் சக்திவாய்ந்த ஏ18 சிப்பை கொண்டுள்ளன, இது ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்கள் மற்றும் ஹை-எண்ட் கேமிங்கை ஆதரிக்கிறது. ஐபோன் 16 மாடல் 6.1-இன்ச் டிஸ்பிளேவையும், அதே நேரத்தில் பிளஸ் மாடல் 6.7-இன்ச் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. இரண்டுமே மேம்படுத்தப்பட்ட சூட்டிங் கண்ட்ரோலுக்கான புதிய கேமரா கண்ட்ரோல் பட்டனுடன் வருகின்றன. கேமரா மூலம் சுற்றுப்புறங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய விஷுவல் இன்டலிஜென்ஸ் அம்சத்தையும் (Visual Intelligence feature) கொண்டுள்ளன.

Best Mobiles in India

English summary
Apple Reseller iNvent Big Deal Days Sale Price Cut Bank Offer on iPhone 15 iPhone 16 Till April 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X