விற்பனை சரிந்ததால் அரடியாக விலை குறைந்த ஐபோன்கள்.!
வெளிநாடுகளில் ஐபோன் வெடித்து தீப்பற்றியதை தொடர்ந்து தற்போது, ஐபோன்களின் சிலை சரிவடையத்துவங்கியுள்ளது. விற்பனை தற்போது குறைந்துள்ளதால், தற்போது வெளிவந்துள்ள ஐ போன்களில் ஐ போன் எக்ஸ்ஆர், ஐபோன் எக்ஸ்
வெளிநாடுகளில் ஐபோன் வெடித்து தீப்பற்றியதை தொடர்ந்து தற்போது, ஐபோன்களின் சிலை சரிவடையத்துவங்கியுள்ளது.

விற்பனை தற்போது குறைந்துள்ளதால், தற்போது வெளிவந்துள்ள ஐ போன்களில் ஐ போன் எக்ஸ்ஆர், ஐபோன் எக்ஸ் மேக்ஸ், ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் உள்ளிட்ட மாடல்களில் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது.

விலை குறைப்பு:
விலை குறைந்துள்ள ஐபோன் மாடல்களில் ஐபோன் எக்ஸ்ஆர் மாடலுக்கு சரியாக 66 டாலர்கள் (ரூ.4,645 விலை குறைந்துள்ளது.) மற்ற மாடல்களுக்கு 59 டாலர்கள் (ரூ.4,145) டாலர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சலுகைகள் அறிவிப்பு:
ஐ போன்களின் மீதான தாக்கம் குறைந்துள்ளதால், ஐபோன்களின் விலை குறைந்து வருகின்றது. ஆப்பிள் நிவனத்திறன் சரியான முடிவாக பார்க்கப்படுகிறது. விலை குறைப்பு, பை-பேக் சலுகைகள் மற்றும் இதர வகைகளில் தள்ளுபடி வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு:
ஆப்பிள் நிறுவனம் இதுபோன்ற சலுகைகளை அதிகாரப்பூர்வமாக தனது வலைத்தளத்தில் அறிவித்து இருக்கின்றது.
ஐபோன்கள் எக்ஸ் ஆர் விலை டாலர் 449 (ரூ31,602க்கும், XS 699 டாலர்கள் (49,199க்கும்) மற்ற ஐபோன்கள் 999 டாலர்களில் ரூ. 70,314 முதல் விற்பனை துவங்குகின்றது.

புதிய ஐபோன்:
புதிய ஐபோன்களின் விற்பனை துவங்கியது முதல் ஐபோன் XR பிரபல மாடலாகவும், அதிகம் விற்பனையாகும் மாடலாகவும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவுக்கு மட்டும் விலை குறைப்பு:
சீனாவில் ஐபோன்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்தியா மற்றும் இதர நாடுகளில் விலை குறைப்பு சார்ந்த அறிவிப்பு வெளியாகுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.


Click it and Unblock the Notifications