ஐபோன் 12 மினி உற்பத்தி நிறுத்தம்? காரணம் இதுதான்.!

|

அண்மையில் வெளியான தகவலின்படி ஐபோன் 12 மினி மாடல்களின் உற்பத்தியை நிறுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஐபோன் 12, ஐபோன் 2 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சாதனங்களுடன் ஐபோன் 12 மினி சாதனமும் அறிமுகம் செய்யப்பட்டது.

வரவேற்பு கிடைப்பதாக கூறப்படுகிறது

அதாவது ஐபோன் 12 மினி தவிர மற்ற அனைத்து மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைப்பதாக கூறப்படுகிறது. பின்பு ஐபோன் 12 மினி விற்பனையில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை எட்டவில்லை என ஆய்வு நிறுவனங்கள் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு

உள்ளது.

மோர்கன் சேஸ் சப்ளை

மேலும் இதுபற்றி ஜே.பி. மோர்கன் சேஸ் சப்ளை செயின் ஆய்வாளர் ஆன வில்லியம் யாங் கூறுகையில், ஐபோன் 12 மினி உற்பத்தி 2021 இரண்டாவது காலாண்டு வாக்கில் நிறுத்தப்படலாம். குறிப்பாக உற்பத்தி நிறுத்தப்பட்டாலும்,இந்த மாடலின் விற்பனை சில காலங்கள் வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Skype ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.! என்ன தெரியுமா?Skype ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.! என்ன தெரியுமா?

ஐபோன் 12 மினி உற்பத்தி சுமார்

வெளிவந்த தகவலின்படி, ஐபோன் 12 மினி உற்பத்தி சுமார் ஒரு கோடி யூனிட்கள் வரை நிறுத்தப்படலாம் என தெரிகிறது. மேலும் இந்த ஐபோன் 12 மினி மாடலானது 5.4-இன்ச் அளவிலான சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. பின்பு 2340x1080 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 476 பிபி பிக்சல் அடர்த்தியுடன் இந்த சாதனம் வெளிவந்தது.

iOS 14-இன் சமீபத்திய மென்பொருளை

ஆப்பிள் ஏ14 பயோனிக் சிப்செட் மூலம் இயங்கும் ஐபோன் 12 மினி மாடலானது 64ஜிபி, 128ஜிபி, 256ஜிப ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கிறது. மேலும் இது iOS 14-இன் சமீபத்திய மென்பொருளை இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 13 மாடல்

ஐபோன் 13 மாடல்

அதேபோல் ஆப்பிள் நிறுவனம் 2021-ம் ஆண்டு செப்டம்பரில் புதிய ஐபோன் 13 மாடல்களை அறிமுகம் செய்யும் என தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் ஐபோன் 12 தொடரில் ஏற்பட்டது போல் (கோவிட்-19 லாக்டவுன் விளைவாக ஐபோன் 12 தொடர் கிட்டத்தட்ட ஒரு மாதம் தாமதமாக அறிமுகமாகின) இந்த ஆண்டு அறிமுகத்தில் எந்த விதமான தாமதமும் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது.

Paytm மூலம் எப்படி ரயில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வது? சில நொடியில் தட்கல் டிக்கெட் ரிசர்வேஷன்..Paytm மூலம் எப்படி ரயில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வது? சில நொடியில் தட்கல் டிக்கெட் ரிசர்வேஷன்..

ஐபோன் 13 தொடரின் கீழ்

வெளிவந்த தகவலின்படி, ஐபோன் 13 தொடரின் கீழ் 4 மாடல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அந்த 4 மாடல்களின் பெயர்களை பொறுத்தவரை, ஐபோனி 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் என்று கூறப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple plans to stop production of iPhone 12 Mini: What is the reason?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X