புத்தம் புது வடிவமைப்புடன் வரும் ஆப்பிள் ஐபோன்-5!!

Posted By: Staff
புத்தம் புது வடிவமைப்புடன் வரும் ஆப்பிள் ஐபோன்-5!!
மொபைல் விற்பனை உலகில் ஏகபோக வரவேற்பை அள்ளி இருக்கும் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய யோசனைகளை மக்களுக்கு சிறிதும் தயங்காமல் கொடுத்து கொண்டே இருக்கிறது. ஆப்பிள் ஐபோன்-4எஸ் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு புதிய புதிய தொழில் நுட்பங்களின் மூலம் அனைவரையும் தனது பக்கம் வெகுவாக ஈர்க்கிறது.

ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து இன்னும் புதிய செய்திகள் காற்றுவாக்கில் கசிந்து கொண்டு தான் இருக்கிறது. ஐபோன்-5 என்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போனில் புதிய வசதிகளை அப்டேட் செய்ய இருக்கிறது ஆப்பிள் நிறுவனம். அப்டேட் செய்வதோடு மட்டும் அல்லாமல் புதிதாக ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போனை வடிவமைக்கவும் இருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

ஐபோன் 4-எஸ் ல்மார்ட்போனின் புதிய தொழில் நுட்பங்களும், புதிய புதிய வசதிகளும் வாடிக்கையாளர்களை தூங்க விடாமல் செய்தது. அதே போல் பல சுவாரஸியமான வசதிகளுடன் இந்த ஆப்பிள் ஐபோன்-5 இருக்கும். இந்த ஆப்பிள் ஐபோன் 5 ஸ்மார்ட்போன் வருகிற ஆண்டில் கோடை காலத்தில்  வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

புதிய அப்டேட் வசதிகளுடன் 2012 ஆண்டு வெளியாக இருக்கும் ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன், 2013-ஆம் வருடம் 142 மில்லியன் விற்பனையை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி இன்னும் அதிகமாகலாம் என்று இந்நிறுவனத்தின் உயர் அதிகாரியான ஜெனி மன்ஸ்டர் தெரிவித்து

இருக்கிறார்.

இப்படி புதிய தொழில் நுட்பங்களை கொடுப்பதோடு மட்டும் அல்லாமல், அதன் மூலம் மொபைல் உலகில் தனி சாம்ராஜ்யம் உருவாக்க முயற்சிக்கிறது ஆப்பிள் நிறுவனம் என்று தான் சொல்ல வேண்டும். ஐபோன்-5 ஸ்மார்ட்போனை ஆப்பிள் நிறுவனம் சரியாக எப்பொழுது வெளியிடும் என்று தெரியவரவில்லை. ஆனால் மக்களுக்கு ஒரு அற்புதமான படைப்பு காத்திருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்