Home
Mobile

iPhone 15 சீரீஸ் அறிமுக தேதி அறிவித்த Apple.. மொத்தம் எத்தனை மாடல்கள்? சரியாக என்ன விலைக்கு வரும்?

ஒருவழியாக ஆப்பிள் (Apple) நிறுவனம், தனது வருடாந்திர ஐபோன் வெளியீட்டு நிகழ்வுக்கான தேதியை (iPhone 15 Launch Date ) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிகழ்வு வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதி குபெர்டினோவில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அழைப்பிதழில் (Invitation) ஆப்பிள் லோகோ நீலம் மற்றும் தங்க நிறத்தில் உள்ளது கூடவே "வொண்டர்லஸ்ட்" (Wonderlust) என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது என்னென்ன தயாரிப்புகள் அறிமுகமாகும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனம் எந்த விவரங்களையும் வெளிப்படையாக வழங்கவில்லை.

iPhone 15 சீரீஸ் அறிமுக தேதி அறிவித்த Apple!

இருப்பினும் குறிப்பிட்ட தேதியில் ஆப்பிள் தனது அடுத்த தலைமுறை ஐபோன் 15 சீரீஸ் (iPhone 15 Series) மாடல்களை அறிமுகம் செய்யும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்நிகழ்வு இந்திய நேரப்படி செப்டமபர் 12 ஆம் தேதி இரவு 10:30 மணி மணிக்கு தொடங்கும்.

வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதியன்று புதிய ஆப்பிள் ஐபோன் 15 சீரீஸின் கீழ் மொத்தம் எத்தனை மாடல்கள் அறிமுகமாகும்? அவைகளின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? புதிய ஐபோன்கள் தவிர்த்து வேறு என்னென்ன அறிமுகங்கள் நிகழும்? இதோ விவரங்கள்:

ஐபோன் 15 சீரீஸின் கீழ் மொத்தம் எத்தனை ஐபோன்கள் அறிமுகமாகும்? இந்த ஆண்டு 2 ஸ்டாண்டர்ட் (Standard) ஐபோன் 15 மாடல்கள் மற்றும் 2 ஹை-எண்ட் (High-end) ஐபோன் 15 ப்ரோமாடல்கள் உட்பட மொத்தம் 4 புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. அவற்றில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மாடலாக ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) உள்ளது.

ஏனென்றால் இது ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 10எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கேமரா மற்றும் ரவுண்டர்-எட்ஜ் டிசைனுடன் கூடிய புதிய டைட்டானியம் கேஸிங் ஆகியவற்றை பெற உள்ளது. மேலும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆனது ஐபோன் 15 அல்ட்ரா என்றும் அழைக்கப்படலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

எல்லாவற்றை விடவும் முக்கியமாக செப்டம்பர் 12 ஆம் தேதி அறிமுகமாகும் அனைத்து ஐபோன் 15 சீரிஸ் மாடல்களிலுமே (ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்) யூஎஸ்பி-சி போர்ட் சேர்க்கப்படும். எல்லா ஸ்மார்ட்போன்களிலுமே ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட் இருக்க வேண்டும் என்கிற கட்டாய சட்டத்தை தொடர்ந்து ஆப்பிள் இந்த நடவடிக்கையை (வேறு வழி இல்லாமல்) எடுத்துள்ளது.

என்ன விலைக்கு அறிமுகமாகும்? ஐபோன் 15 சீரீஸ் ஆனது ஆப்பிளின் மிக விலையுயர்ந்த ஐபோன் ரேன்ஜ் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதிலும் குறிப்பாக ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் அல்லது ஐபோன் 15 அல்ட்ரா மாடல்கள் ஆகிய இரண்டும் அவற்றின் முன்னோடிகளை விட அதாவது ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸை விட) விலை அதிகமாக இருக்கும்.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஐபோன் 15 ஆனது ரூ.79,900 என்கிற ஆரம்ப விலையின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள ஹை-எண்ட் மாடலான ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் அல்லது ஐபோன் 15 அல்ட்ராவானது ரூ.1,49,990 க்கு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

புதிய ஐபோன்களுடன் சேர்த்து, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வாட்ச் (New Apple Watch) மாடல்களும் அறிமுகமாகும், அவைகளில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவில் ஆக்ஷன் பட்டன் (Action Button) அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் பக்கவாட்டில் உள்ள ஒரு பிஸிக்கல் பட்டனாகும். இதை நீங்கள் அழுத்துவதன் மூலம், முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்பாடு அல்லது ப்ரோகிராமை இயக்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Officially announced iPhone 15 Launch Event Date September 12 What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X