இந்த மாடல் போன் வாங்கினால் ரூ.14,900 மதிப்புள்ள ஏர்பாட் இலவசம்!
பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட ஆப்பிள் ஐபோன் 11 வாங்குபவர்களுக்கு ரூ.14,900 மதிப்புள்ள ஏர்பாடை இலவசமாக வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

பண்டிகை கால விற்பனை
அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இரண்டு நிறுவனங்களும் ஒரே சமயத்தில் தங்களது பண்டிகை கால விற்பனை தினங்களை அறிவித்துள்ளது. இந்த விற்பனை தினங்களில் ஐபோன்களுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது.

ஆப்பிள் ஐபோன் வாங்குபவர்களுக்கு ஒரு சலுகை
ஆப்பிள் ஐபோன் வாங்குபவர்களுக்கு மேலும் ஒரு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அது ஆப்பிள் ஐபோன் 11 வாங்குபவர்களுக்கு ரூ.14,900 என்ற மதிப்புள்ள ஏர்பாட் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகையானது அக்டோபர் 17 முதல் தொடங்கும்.

ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர்
ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மூலம் ஐபோன் 11 வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு ஏர்பாட் இலவசமாக கிடைக்கும். இலவச ஜோடி ஏர்பாட்கள் விலை ரூ.14,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அக்டோபர் 17 முதல் ஆப்பிள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும். பண்டிகை கால விற்பனையாக ஆப்பிள் அறிவித்துள்ள சலுகை இதுவாகும்.

ஐபோன் 11 வாங்கும்போது ஏர்பாட் இலவசம்
ஆப்பிள் ஐபோன் வாங்கும்போது ஏர்பாட் இலவசமாக வழங்குவது அதன் வாடிக்கையாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஆப்பிள் ஐபோன் 11 சமீபத்தில் தள்ளுபடி விலையில் அறிவிக்கப்பட்டது. 64 ஜிபி ஐபோன் 11 விலை ரூ.68,300 ஆக இருந்தது. இந்த ஐபோன் மாடல் ஆப்பிள் மற்றும் அமேசான் ஆகிய இரண்டு தளங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியை அறிவித்தது. ஐபோன் 11 அமேசான் வலைதளத்தில் ரூ.49,999 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. இது அக்டோபர் 17 ஆம் தேதிமுதல் அமேசான் இந்தியாவில் கிடைக்கும்.

6.1' இன்ச் டிஸ்ப்ளே
ஆப்பிள் ஐபோன் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.1' இன்ச் கொண்ட லீகுய்ட் ரெட்டினா டிஸ்பிளேவும் அன்டோனைஸ்ட் அலுமினியம் மற்றும் டஃப் கிளாஸ் டிசைனோடு கிடைக்கிறது.

128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ்
A13 பயோனிக் சிப் பிராசஸரோடு இயக்கப்படும் ஐபோன் 11 மாடல் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் கிடைக்கிறது. மேலும் இந்த ஐபோன் மாடலின் பின்புறத்தில் 12 மெகா பிக்சல் டூயல் லென்ஸ் கேமரா செட்டப் மற்றும் 12 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு மற்றும் வைடு ஆங்கிள் 12 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

ஃபாஸ்டர் ஃபேஸ் ஐடி அம்சம்a
பாதுகாப்பு அம்சத்துக்காக ஃபாஸ்டர் ஃபேஸ் ஐடி, IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (2 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் தாக்குப்பிடிக்கும்). அதோடு லைட்டனிங் கனெக்டர் உடன் கூடிய ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. ஐபோன் எக்ஸ்ஆர் பேட்டரி சேவையை காட்டிலும் 1 மணிநேரம் கூடுதலாக இதில் பேட்டரி பேக்அப் நீட்டிப்பு அம்சம் உள்ளது.


Click it and Unblock the Notifications