ஐபோன் 7, ஐபோன் 7எஸ், ஐபோன் 7எஸ் பிளஸ் ஆகிய மாடல்களின் மோல்டுகள் லீக்

By Siva
|

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று விதமான புதிய மாடல் ஐபோன்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. அவற்றில் இரண்டு ஐபோன் 7எஸ் மற்றும் ஐபோன் 7எஸ் பிளஸ் ஆகியவை ஆகும். இந்த இரண்டு மாடல்களும் கடந்த ஆண்டு வெளிவந்த மாடலின் தொடர்ச்சிகள். மூன்றாவது இந்நிறுவனம் ஐபோன் 8 என்ற மாடலை 10வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி வெளீயிட திட்டமிட்டுள்ளது.

ஐபோன் 7, ஐபோன் 7எஸ், ஐபோன் 7எஸ் பிளஸ் ஆகிய மாடல்களின் மோல்டுகள்

இந்த நிலையில் இந்த மூன்று மாடல்களின் மோல்டுகள் ஒருசில இணையதளங்களில் லீக் ஆகி, இந்த மாடல்கள் எந்த மாதிரியான அம்சங்களை கொண்டிருக்கலாம் என்ற யூகத்தை தோற்றுவித்துள்ளது. ஐபோன் 7எஸ், ஐபோன் 7எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் 8 மாடலின் மோல்டுகள் தான் இவை என்று தெரிய வந்துள்ளதாக டெக்னாலஜி அறிஞர்கள் இந்த மாடல்களின் சிறப்பு அம்சங்களை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்து வருகின்றனர். இதுகுறித்து தற்போது பார்ப்போம்

ஐபோன் மோல்டுகளில் இருந்து தெரிய வருவது என்ன?

ஐபோன் மோல்டுகளில் இருந்து தெரிய வருவது என்ன?

இணையதளங்களில் லீக் ஆன இந்த ஐபோன்களின் மோல்டுகளில் இருந்து தெரிய வருவது என்னவெனில் இந்த மூன்று மாடல்களில் ஐபோன் 7எஸ் மாடல் அளவில் சிறியது என்பதும், சிங்கிள் கேமிராவை பின்பக்கம் கொண்டது என்பதும் தெரிய வந்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் மீதியுள்ள இரண்டு மாடல்களான ஐஐபோன் 7எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் 8 ஆகியவை பின்பக்கம் இரண்டு கேமிராக்களை கொண்டதாக இருக்கும், மேலும் ஐபோன் 8 மாடல் 5.8 இன்ச் டிஸ்ப்ளேவுடன் மற்ற இரண்டு மாடல்களை விட பெரிய திரையாக உள்ளது.

மேலும் ஐபோன் 8 என்பது பெஸல் மாடல் இல்லை என்பதும் இதுவொரு எட்ஜ் டு எட்ஜ் மாடல் என்பதும் உறுதியாகியுள்ளது. மேலும் 5.8 இன்ச் டிஸ்ப்ளே இருந்தாலும் இதில் 5.15 இன்ச் மட்டுமே போனுக்கு பயன்படுத்தப்படும் டிஸ்ப்ளேவாகவும், மீதியுள்ள இடங்கள் வெர்டியுவல் டச் ஐட் பட்டன்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

செங்குத்தான டூயல் லென்ஸ் கேமிரா அமைப்பு:

செங்குத்தான டூயல் லென்ஸ் கேமிரா அமைப்பு:

ஐபோன் 8 மாடலில் பின்பக்கம் இரண்டு செங்குத்தான டூயல் லென்ஸ்கள் கொண்ட கேமிராக்கள் அமையும். அதேபோல் ஐபோன் 7எஸ் பிளஸ் மாடலின் மோல்டும் இதே தோற்றத்தில் உள்ளதால் அதே அம்சங்களை பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே லீக் ஆன ஐபோன் 8 மாடலின் டம்மி மாடலிலும் பின்பக்கம் டூயல் லென்ஸ் கேமிரா இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

4.7இன்ச் உடன் வெளிவரும் அட்டகசமான கேலக்ஸி ஃபீல்.!4.7இன்ச் உடன் வெளிவரும் அட்டகசமான கேலக்ஸி ஃபீல்.!

ஐபோன் விலை என்ன என்பது குறித்து ஏதாவது தெரியுமா?

ஐபோன் விலை என்ன என்பது குறித்து ஏதாவது தெரியுமா?

என்னதான் சிறப்பு அம்சங்கள் பல இருந்தாலும் ஐபோன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் கேட்கும் முக்கிய கேள்வி இதன் விலை என்ன? என்பதுதான்.

ஆப்பிள் நிறுவனத்தின் 10வது ஆண்டின் நினைவாக வெளியாகவுள்ள இந்த சிறப்புக்குரிய ஐபோன் $1000 வரை விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போன் இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக மோர்கன் ஸ்டேன்லி தெரிவித்துள்ளார். இவர் ஒரு ஐபோன் ஆய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source

Most Read Articles
Best Mobiles in India

English summary
The leaked Apple molds show how the iPhone 8, iPhone 7s and iPhone 7s Plus will look like.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X