Home
Mobile

Apple அடித்த பல்டி.. iPhone 18 விலைகளில் புதிய திருப்பம்!

ஐபோன் 18 சீரீஸ் மாடலால் ஆனது ஆப்பிள் நிறுவனத்தின் ஏ20 அல்லது ஏ20 ப்ரோ சிப்செட்களுடன் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஐபோன் 18 சீரிஸின் கீழ் உள்ள ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய 2 மாடல்களும் இந்த ஆண்டு செப்டம்பரில் சந்தைக்கு வரக்கூடும் என்றும், அதே நேரத்தில் ஐபோன் 18 மாடல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தான் வரும் என்றும் கூறப்படுகிறது

அதிகரித்து வரும் கூகாம்போனென்ட் லவுகள் காரணமாக ஆப்பிள் நிறுவனம் அதன் அடுத்த ஐபோன் மாடல்களின் விலைகளை அதிகரிக்கக்கூடும் என்று முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், டிஎப் இன்டர்நேஷனல் செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் ஆன மிங்-சி குவோ, இதற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Apple அடித்த பல்டி.. iPhone 18 விலைகளில் புதிய திருப்பம்!

அவருடைய கூற்றுபடி, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 18 சீரீஸின் தொடக்க விலையை "மாற்றாமல் வைத்திருக்கலாம்". இதுகுறித்த எக்ஸ் தள பதிவில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 18 விலையை முடிந்தவரை உயர்த்துவதை தவிர்க்க வாய்ப்புள்ளது என்று குவோ கருத்து தெரிவிக்கிறார். அதாவது ஐபோன் 17 சீரீஸின்அதே விலையில் ஐபோன் 18 மாடல்கள் வரக்கூடும்.

அதிகரித்து வரும் மெமரி செலவுகள் ஐபோனின் மொத்த லாபத்தை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் ஆப்பிள் சிப்களை பாதுகாப்பதன் மூலம் சந்தை குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என்றும், "செலவுகளை உறிஞ்சி, அதிக சந்தைப் பங்கைப் பிடிக்கும்" என்றும் அவர் கூறுகிறார். முன்னதாக வெளியான சில தகவல்கள் - ஆப்பிள் நிறுவனம் பல்வேறு வகையான உதிரிபாகங்களின் விலையை அதிகரிக்கக்கூடும் என்கிறன.

நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ஐபோன் 17 விலை ரூ. 82,900 இல் தொடங்குகிறது, அதே நேரத்தில் ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முறையே ரூ. 1,34,900 மற்றும் ரூ. 1,49,900 இல் தொடங்குகின்றன. இதை விட அதிக விலை நிர்ணயம் எதிர்பார்க்கப்பட்டது . அனால் இப்போது இதேபோன்ற விலையே நிர்ணயம் செய்யப்படலாம் என்பது போல் தெரிகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் விலைகளும் லீக் ஆகியுள்ளன: மைக்ரோபிளாக்கிங் தளமான ப்ளூஸ்க்கை சோஷியல் (Bluesky Social) வழியாக டிப்ஸ்டர் ரோலண்ட் குவாண்டின் பகிர்ந்துள்ள விவரங்களின்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) மாடல் ஆனது கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடலை விட (இந்திய ரூபாய் மதிப்பின்படு) தோராயமாக ரூ.11,000 விலை குறைவாக இருக்கும். இந்த விலை மாற்றம் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 256GB மற்றும் 512GB ஆப்ஷன்களுக்கு பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ஐரோப்பாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,62,000 என்கிற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆக கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை தோராயமாக ரூ.1,51,000 க்கு தொடங்கலாம்.

இருப்பினும் டாப்-எண்ட் 1டிபி ஆப்ஷனின் விலை அதன் முன்னோடியை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது தோராயமாக ரூ. 2,04,000 ஆக இருக்கலாம். இதேபோல சாம்சங் கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல்களின் விலைகள் அப்படியே இருக்கலாம் என்றும் டிப்ஸ்டர் கூறுகிறார்.

குறிப்பிடத்தக்க வண்ணம் ஐரோப்பாவில் கேலக்ஸி எஸ்25 மற்றும் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தோராயமாக ரூ.1,01,000 மற்றும் ரூ.1,28,000 என்கிற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆக சாம்சங் கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல்களும் இதே போன்ற விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple may not increasing iPhone 18 Series Prices iPhone 18 Price Could Remain Same Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X