ஆப்பிளுக்கு வந்த சோதனை; கடைசியில் சாம்சங் ஸ்மார்ட்போனை காப்பி அடிக்கிறது.!
ஆப்பிள் நிறுவனமானது அதன் வருங்கால ஸ்மார்ட்போன் ஒன்றில், அதன் பிரதான போட்டியாளரான (எதிரியான) சாம்சங் நிறுவனத்தின் வடிவமைப்பை பின்பற்ற உள்ளதாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய தலைமை சாதனமான ஐபோன் எக்ஸ் ஆனது, நிறுவனத்தின் வழக்கமான ஐபோன் வடிவமைப்பை "கிட்டத்தட்ட" மாற்றி அமைத்ததும், அதே வடிவமைப்பில் 10-க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வெளியாக தயாராகி கொண்டிருப்பதும் நாம் அறிந்த ஒன்றே.

இப்படியாக, ஆப்பிள் நிறுவனத்தின் புத்தம் புதிய வடிவமைப்பு அல்லது புரட்சிமிக்க அம்சங்களை பிற நிறுவனங்கள் 'காப்பி' அடிப்பதே வழக்கம். ஆனால் இனி நிலைமை தலைகீழாகும் என்பது போல தெரிகிறது. ஆப்பிள் நிறுவனமானது அதன் வருங்கால ஸ்மார்ட்போன் ஒன்றில், அதன் பிரதான போட்டியாளரான (எதிரியான) சாம்சங் நிறுவனத்தின் வடிவமைப்பை பின்பற்ற உள்ளதாம்.

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்.!
சாம்சங் நிறுவனமானது, அதன் கேலக்ஸி எக்ஸ் ஸ்மார்ட்போன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அக்கருவி மடங்க கூடியதொரு வடிவமைப்பை கொண்டிருக்குமென்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன. சாம்சங் கேலக்ஸி எக்ஸ் பற்றிய வதந்திகள் வால் ஸ்ட்ரீட் நிறுவனத்தின் மூலம் வெளியானது இங்கு குறிப்பிடத்தக்கது.

"போல்டபிள்' டிசைனில் ஆப்பிள் ஐபோன்.!
தற்போது அதே மாதிரியான "போல்டபிள்' டிசைனில் ஆப்பிள் நிறுவனமும் ஒரு சாதனத்தை வடிவமைக்க அல்லது உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மிக விரைவில் அல்ல, வருகிற 2020-ஆம் ஆண்டில் கூறப்படும் சாதனம் வெளியாகுமாம்.

ஐபோன் எக்ஸ் போன்ற வடிவமைப்புடன் இருக்கும்.!
ஆய்வாளரான (பாங்க் ஆப் அமெரிக்கா மெர்ரில் லிஞ்ச்) வம்ஸி மோகனின் கருத்துப்படி, "ஆப்பிள் தனது ஆசிய பங்காளிகளுடன் ஒரு மடங்கக்கூடிய ஐபோன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கூறப்படும் போல்டபிள் ஆப்பிள் ஐபோன் ஆனது இந்த ஆண்டு வெளியான ஐபோன் எக்ஸ் போன்ற வடிவமைப்புடன் மற்றும் சில அளவு சார்த்த மாற்றங்களும் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது".

லெனோவா மற்றும் சாம்சங், இப்போது ஆப்பிள்.!
மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படுமொரு தொழில்நுட்பமாகும். இதை யார் சாத்தியப்படுத்துகிறார்கள் என்கிற போட்டியானது லெனோவா மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்றுக் கொண்டிருக்க, அந்த போட்டியில் சாம்சங் முன்னணி வகிக்கும் நிலைப்பாட்டில் ஆப்பிளும் இந்த போட்டிக்குள் நுழைந்திருப்பது சுவாரசியம்.

ஒரு டேப்ளெட் போன்று இருக்கும்.!
சாம்சங் நிறுவனம், இந்த ஆண்டு அல்லது 2019-ல் சாம்சங் நிறுவனத்தின் முதல் மற்றும் உண்மையான போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி எக்ஸ் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியாகினும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் நமது கைகளில், மடங்க கூடிய ஒரு பெரிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன் தவழும் என்பது மட்டும் உறுதி. கோட்பாட்டளவில், போல்டபிள் ஸ்மார்ட்போன்கள் ஒரு டேப்ளெட் போன்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


மீண்டும் கிளம்பியுள்ளது.!
நினைவூட்டும் வண்ணம், ஆப்பிளின் போல்டபிள் சாதனம் பற்றிய முதல் வதந்தி இதுவல்ல. கடந்த அக்டோபரில், ஆப்பிள் நிறுவனம் எல்ஜி டிஸ்ப்ளே உடனான ஒரு மடிக்கக்கூடிய தொலைபேசி சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. பின்னர் அது மெல்ல மெல்ல ஓய்ந்தது. தற்போது மீண்டும் வெளியாகியுள்ளதால் ஒரு சாத்தியமான மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்கிற கான்செப்ட் (கருத்து) விரைவில் யதார்த்தமாக மாறும் என்றே தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications