கிட்னியை விற்க யாரெல்லாம் ரெடி.? மூன்று புதிய ஆப்பிள் ஐபோன்கள் அறிமுகம்.!

|

ஆப்பிள் நிறுவனம் அதன் மூன்று புதிய தலைமை ஐபோன் மாடல்களை - ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் எக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. வெளியான மூன்று ஐபோன்களுடன் இணைந்து ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 3 மற்றும் ஆப்பிள் டிவி ஆகிய கேட்ஜெட்களையும் அறிமுகம் செய்துள்ளது.

கிட்னியை விற்க யாரெல்லாம் ரெடி? 3 புதிய ஆப்பிள் ஐபோன்கள் அறிமுகம்.!

பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆப்பிள் பார்க் வளாகத்தில் நிகழ்ந்த இந்த வெளியீட்டு நிகழ்வில் வெளியான ஐபோன்களின் விலை நிர்ணயத்தை கேட்டால் ஐபோன்களுக்கே உரிய மிகவும் பிரபலமான இண்டர்நெட்ஜோக்கொன்று தான் நினைவிற்கு வருகிறது - "ஷட் அப் டேக் மை கிட்னி அண்ட் கிவ் மீ ஏ ஐபோன்".!

கிட்னியை விற்க யாரெல்லாம் ரெடி? 3 புதிய ஆப்பிள் ஐபோன்கள் அறிமுகம்.!

இந்திய விலை நிர்ணயம்.? இந்திய வெளியீட்டு தேதி.?
வேடிக்கைகள் ஒருபக்கமிருக்க, இந்த வெளியீடுகள் அனைத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் பத்தாம் ஆண்டு கொண்டாட்டத்தின் வெளிப்பாடு என்பதையும் இத்தருணத்தில் நினைவுகோர வேண்டும். சரி அப்படியென்ன விலை நிர்ணயத்தை இக்கருவிகள் கொண்டுள்ளன.? அதாவது இதன் இந்திய விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.? இந்தியாவில் எப்போது வாங்க கிடைக்கும்.?

ஐபோன் எக்ஸ்

ஐபோன் எக்ஸ்

வெளியீட்டு நிகழ்வின் சூப்பர் ஸ்டார் சாதனமான இது ஹோம் பொத்தானை கொண்டிருக்கவில்லை. சரி அப்போது சாதனத்தை திறப்பது எப்படி என்று பார்த்தால், இதன் பேஸ்ஐடி (FaceID) உங்களுக்கு உதவும். சாதனத்தில் சேமிக்கப்படும் முகத்தரவுகள் ஆனது ஏ11 பயோனிக் சில் கொண்டு பாதுகாக்கப்படும். இந்த பேஸ்ஐடி அம்சம் மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மற்றும் ஆப்பிள் பே உடன் இணைந்து செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

ஐபோன் எக்ஸ் சாதனத்தின் வடிவமைப்பை பொறுத்தமட்டில் துருப்பிடிக்காத ஸ்டீல் மற்றும் கண்ணாடி ஆகியவற்றால் உருவாக்கம் பெற்றுள்ளது. இந்த புதிய சாதனம் இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் - வெள்ளி மற்றும் கிரே. இது சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே மற்றும் 2436x1125 மற்றும் 458பிபிஐ என்ற திரை தீர்மானம் கொண்ட 5.36 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ளது. அகச்சிவப்பு கேமரா, ஸ்பீக்கர், மைக்ரோஃபோன் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ட்ரூ டெப்த் கேமரா அமைப்புடன் வரும் ஐபோன் எக்ஸ் ஒரு 64-பிட் செயலி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

கேமரா

கேமரா

எப்/1.8என்ற பரந்தகோண லென்ஸ் மற்றும் இரட்டை தொனியில் ஃப்ளாஷ் கொண்ட முதன்மை 12 மெகாபிக்சல் கேமரா ஒன்றும் மற்றும் எப்/2.4 துளை மற்றும் ஒரு டெலிஃபோட்டோ லென்ஸைப் பயன்படுத்தும் இரண்டாம் நிலை பின்புற கேமராவும் கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில், இக்கருவி எப்/2.2 லென்ஸ் கொண்ட ஒரு 7 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

ஐபோன் எக்ஸ் இந்திய விலை

ஐபோன் எக்ஸ் இந்திய விலை

ஐபோன் எக்ஸ் ஆனது நவம்பர் 3-ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும். அதாவது உலக சந்தையில் கிடைக்கும் அதே நாளில் இந்தியாவிலும் கிடைக்கும். இதன் இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், ஐபோன் எக்ஸ்-ன் 64ஜிபி மற்றும் 256ஜிபி மாறுபாடு முறையரே ரூ.89,000/- மற்றும் ரூ.102,000/- என்ற புள்ளிகளை எட்டலாம்.

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ்

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ்

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மூன்று வண்ண மாறுபாடுகளில் வரும் - வெள்ளி, ஸ்பேஸ் சாம்பல் மற்றும் தங்கம். இரண்டுமே மிகவும் நிலைப்புத்தன்மை வழங்கும் கண்ணாடி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. ஐபோன் 8 ஆனது 4.7 இன்ச் டிஸ்ப்ளேவும் மறுகையில் ஐபோன் 8 பிளஸ் ஆனது 5.5 அங்குல டிஸ்ப்ளேவும் கொண்டுள்ளது. புதிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் சக்திவாய்ந்த ஏ11 பியோனிக் சிப் ஆகிய அம்சங்கள் இந்த புதிய மாறுபாடுகளில் இடம்பெற்றுள்ளன. ஏ11 பியோனிக் சிப் கொண்டு இஐங்கும் ஐபோன் 7-ஐ இவிட இந்த சிப் 70 சதவீதம் வேகமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை கேமரா அமைப்பு

இரட்டை கேமரா அமைப்பு

ஐபோன் 8 பிளஸ் இரட்டை கேமரா கொண்டு வருகிறது. எப்/1.8 மற்றும் எப்/2.8 துளைகள் கொண்ட இதன் 12எம்பி கேமரா ஆழமான பிக்சல்கள் மற்றும் புதிய கலர் பில்டர்ஸ் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமரா 240 ப்ரேம் பெர் செகண்ட் என்ற அளவிலான 1080எச்டி ஸ்லோ மோஷன் வீடியோக்களை கைப்பற்றவும் உதவும்.

32 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி

32 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் இரண்டுமே வயர்லெஸ் சார்ஜ் அம்சம் கொண்டுள்ளது .ஐபோன் 8 மற்றும் 8 பிளஸ் ஆகியவைகள் முறையே 32 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆகிய சேமிப்பு மாதிரிகளில் கிடைக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஓஎஸ்11 ஆனது செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் இந்த இரண்டு சாதனங்களிலும் அப்டேட் ஆகும்.

ஐபோன் 8 இந்திய விலை.!

ஐபோன் 8 இந்திய விலை.!

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. ஐபோன் 8 சாதனத்தை பொறுத்தமட்டில், அதன் 64ஜிபி மாறுபாடு ஆனது சுமார் ரூ. 64,000/- என்ற ஆரம்ப விலை நிர்ணயத்தை கொண்டுள்ளன. மறுகையில் இதன் 256ஜிபி மாறுபாடு சுமார் ரூ.77,000/- என்ற விலைநிர்ணய புள்ளியை கொண்டிருக்கலாம்.

ஐபோன் 8 ப்ளஸ் இந்திய விலை.!

ஐபோன் 8 ப்ளஸ் இந்திய விலை.!

மறுபக்கம் ஐபோன் 8 ப்ளஸ் சாதனத்தை பொறுத்தமட்டில், இதன் தொடக்கநிலை மாறுபாடு ஆனது சுமார் ரூ.73,000 /- என்ற ஆரம்ப விலை நிர்ணயத்தை கொண்டுருக்கலாம் மற்றும் இதன் 256ஜிபி மாறுபாடு சுமார் ரூ.86,000/- என்ற விலைக்கு இந்திய சந்தைக்குள் நுழையலாம். ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 ப்ளஸ் கருவிகளின் உலகளாவிய வெளியீடு செப்டம்பர் 22-ஆம் தேதி நிகழும் என்றாலும் இதன் இந்திய விற்பனை செப்டம்பர் 29 முதல் தொடங்கும்.

Best Mobiles in India

English summary
Apple launches iPhone X, iPhone 8 Plus, iPhone 8. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X