Home
Mobile

பலரும் எதிர்பார்த்த ஐபோன் 5வைக் களமிறக்கிய ஆப்பிள்

By Karthikeyan
பலரும் எதிர்பார்த்த ஐபோன் 5வைக் களமிறக்கிய ஆப்பிள்

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபோன் 5வை நேற்று ஆப்பிள் களமிறக்கி இருக்கிறது. இந்த ஐபோன் 5 முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தைத் தரும் என்று ஆப்பிள் தெரிவித்திருக்கிறது.

இந்த ஐபோன் 5 கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வருகிறது. பார்ப்பதற்கும் மிகவும் அழகாகவும் அதே நேரத்தில் ஸ்டைலாகவும் இருக்கிறது. இதன் 4 இன்ச் டிஸ்ப்ளை மிகவும் துல்லியமாக இருக்கிறது. ஐஒஎஸ் தளத்தில் வரும் இந்த புதிய சாதனம் ஏராளமான அப்ளிகேசன்களுடன் வருகிறது.

இந்த ஐபோன் 5 புதிய எ6 சிப்செட்டுடன் வருகிறது. அதோடு இதன் சிபியு மற்றும் ஜிபியு ஆகியவை ஐபோன் 4எஸ்ஸைவிட 2 மடங்கு அதிக வேகத்துடன் இருக்கும் என்று ஆப்பிள் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த சாதனம் க்வாட் கோர் ப்ராசஸர் அல்லது க்வல்காம் சினாப்ட்ராகன் எஸ்4 ப்ராசஸரில் வந்திருக்கும் என்று தெரிகிறது.

இணைப்பு வசதிகளைப் பொருத்தவரை இந்த சாசனம் எல்டிஇ இணைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் 4ஜி எல்டிஇ நெட்வொர்க் வசதிகளைக் கொண்டிருக்காது என்று தெரிகிறது. மேலும் இந்த ஐபோன் 5 எச்எஸ்பிஎ+ மற்றும் டூவல் கேரியர் எச்எஸ்டிபிஎ வசதிகளையும் மற்றும் டூவல் பேன் வைபை வசதிகளையும் வழங்குகிறது.

இதன் பேட்டரி நீடித்த இயங்கு நேரத்தை வழங்குகிறது. 8எம்பி கேமராவை ஐபோன் 5 கொண்டிருப்பதால் மிகத் தெளிவான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம்.

சுருக்கமாக சொன்னால் இந்த புதிய ஐபோன் 5 பல மடங்கு வேகமாக இயங்கும் திறனையும், நீடித்து உழைக்கக்கூடிய உறுதியையும் மற்றும் உயர்ந்த தரத்தையும் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. வரும் செப்டம்பர் 21 அன்று அமெரிக்கா மற்றும் 8 நாடுகளில் விற்பனைக்கு வரவிருக்கிறது. வரும் 28ல் மேலும் சில நாடுகளுக்கு விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 100 நாடுகளுக்கும் மேல் இந்த ஐபோன் 5 விற்பனைக்கு வைக்கப்படும் என்று தெரிகிறது.

வரும் தீபாவளிக்கு இந்தியாவிற்கு இந்த சாதனம் வந்துவிடும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X