நவீன வசதிகளுடன் புதிய ஐபோனை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்

ஐபோன்-5 ஸ்மார்ட்போனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று வாடிக்கையாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், அந்த நிறுவனம் தற்போது ஆப்பிள் ஐபோன்-4எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததால் ஐபோன் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும், ஐபோன் 4 எஸ் ஸ்மார்ட்போனிலும் ஏராளமான புதிய வசதிகளுடன் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. $2.99 கட்டணத்தில் வாழ்த்து அட்டைகளை அனுப்பும் அப்ளிகேஷன் வசதி இதில் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில், போனை பற்றிய சந்தேகங்களுக்கு வாய்மொழியாக விளக்கம் அளிக்கும் வாய்ஸ் ஆக்டிவேட் சர்வீஸும் உள்ளது.
ஆப்பிள் ஐபோன்-4எஸ் மொபைலில் அனைவரும் ஆச்சர்யப்படக்கூடிய வகையில் கேமராவின் தொழில் நுட்பம் அமைக்கப்பபட்டுள்ளது. இதில் ஏடி மற்றும் டி வசதியும் உள்ளது. கேள்விகள் மற்றும் கமென்டுகள் போன்ற பயன்பாடுகளுக்கு இதில் புதிதாக சிரி என்ற அப்ளிக்கேஷன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஐபோன் 4எஸ் ஸ்மார்ட்போனை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர் அல்லது மேக் கம்ப்யூட்டர் ஆகியவற்றுடன் எளிதாக இணைக்கும் வகையில் வயர்லெஸ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
வரும் 12ந் தேதி முதல் புதிய 'ஐக்ளவுட்' என்ற புதிய ஆன்லைன் சேவையை ஆப்பிள் நிறுவனம் துவங்க உள்ளது. இதன்மூலம், ஐக்ளவுட் ஸ்டோரிலிருந்து புகைப்படங்கள், வீடியோ, மியூசிக் உள்ளிட்டவற்றை ஐபோன் மொபைகளுககு டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.
இந்த ஐபோன் மொபைலில் ஐஓஎஸ்-5 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. வரும் 12ந் தேதியிலிருந்து ஐபோன் 3ஜிஎஸ் மற்றும் 4, ஐக்ளவுட் வசதியுடன் புதிய ஐபோட் டச் மாடல்கள் கிடைக்க இருக்கிறது.
இந்த நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஸ்டீவ் ஜாப் கூறுகையில், இன்னும் 12 மாதத்தில் இன்னொரு புதிய ஐபோன் வெளிவர உள்ளது. அதோடு புதிய வசதிகள் கொண்ட சிப்களும் இதனுடன் வழங்கப்பட உள்ளது. இந்த ஆப்பிள் ஐபோன்-4எஸ் மொபைல் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன் 4எஸ் ஸ்மார்ட்போன் 10,000 முதல் 15,000 வரையிலான விலையில் மார்க்கெட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications