Home
Mobile

ஐபோன் 12, ஐபோன் 12மினி பரப்பில் வண்ண மாறுபாடு வெளியீடு: விலை இதோ!

நேற்று (செவ்வாய்கிழமை) இரவு ஸ்ப்ரிங் லோடிங் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஐபோன் 12 தொடர் இரண்டு சாதனத்தின் புதிய வண்ண வகைகளை ஆப்பிள் வெளியிட்டது. ஆப்பிள் ஐபோன் 12, ஐபோன் 12 மினி ஊதா(பர்ப்பில்) வண்ண விருப்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனம் முன்னதாக கருப்பு, ப்ளூ, க்ரீன், சிவப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வண்ண மாறுபாடு ஏப்ரல் 30 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

ஐபோன் 12, ஐபோன் 12 மினி புதிய வண்ண மாறுபாடு

ஐபோன் 12, ஐபோன் 12 மினி புதிய வண்ண மாறுபாடு

அதேபோல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐபோன் 12, ஐபோன் 12 மினி புதிய வண்ண மாறுபாடானது ஏப்ரல் 23 முதல் 30 நாடுகளில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் இந்த மாறுபாடு கிடைக்கவில்லை. இருப்பினும் ஐபோன் 12, ஐபோன் 12 மினி விரைவில் இந்தியாவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் புதிய வண்ண மாறுபாட்டு விலையில் ஏதும் மாற்றங்கள் இல்லை.

ஐபோன் 12, ஐபோன் 12 மினி விலை

ஐபோன் 12, ஐபோன் 12 மினி விலை

அதேபோல் ஐபோன் 12 அடிப்படை மாடலான 64ஜிபி வேரியண்ட் விலை இந்தியாவில் ரூ.79,900 ஆக இருக்கிறது. அதேபோல் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.84,900 ஆக இருக்கிறது. மேலும் 256 ஜிபி சாதனத்தின் ஹை வேரியண்ட் விலை இந்தியாவில் ரூ.99,900 ஆக இருக்கிறது. அதேபோல் ஐபோன் 12 மினி அடிப்படை வேரியண்ட்டான 64ஜிபி விலை ரூ.69,900 ஆகவும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.74,900 ஆகவும் ஹை எண்ட் வேரியண்ட் ஆன 256 ஜிபி மாடல் விலை ரூ.84,900 ஆகவும் இருக்கிறது.

இரண்டுக்குமான காட்சி அளவு, பேட்டரி மாற்றம்

இரண்டுக்குமான காட்சி அளவு, பேட்டரி மாற்றம்

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி அம்சங்கள் குறித்து பார்க்கையில் ஐபோன் 12, ஐபோன் 12 மினி ஒரே கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் இரண்டுக்குமான வேறுபாடு இதன் காட்சி அளவு மற்றும் பேட்டரி திறன் ஆகும். ஐபோன் 12 சாதனமானது 6.1 இன்ச் ரெடினா எக்ஸ்டி ஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அதேபோல் ஐபோன் 12 மினி 5.4 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் டால்பி ஆதரவோடு வருகிறது. அதேபோல் இரண்டும் ஒரே ஏ14 பயோனிக் அம்சத்துடன் இயக்கப்படுகின்றன.

2851 எம்ஏஎச், 2227 எம்ஏஎச் பேட்டரி

2851 எம்ஏஎச், 2227 எம்ஏஎச் பேட்டரி

ஐபோன் 12 சாதனத்தில் 2851 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஐபோன் 12 மினி சாதனத்தில் 2227 எம்ஏஎச் பேட்டரி உடன் இருக்கிறது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த சாதனம் கேமரா அமைப்பில் 12 எம்பி அகல கோண லென்ஸ் ஆதரவு, 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் ஆதரவு இருக்கிறது. அதேபோல் செல்பி, வீடியோ அழைப்புகளுக்கு 4கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவுடன் 12 எம்பி செல்பி கேமரா இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Apple launched iths Iphone 12, Iphone 12 Mini Purple Colour Variant
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X