சும்மாவே ஐபோன் வாங்க முடியாது, இப்போ இது வேறயா.? சுத்தம்.!

அடுத்த 2018-ஆம் ஆண்டிலாவது ஒரு ஆப்பிள் ஐபோன் வாங்கிவிடலாமென்று கனவு கண்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்களில் நீங்களும் ஒருவர் என்றால் - ஐ யம் வெரி சாரி.

|

யூகங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் தகர்ந்து போயின. ஆம், இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களின் விலை குறையுமென்றும், அதன் விளைவாக இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனம் நோக்கியா மற்றும் சியோமி போன்று தனக்கான தனி இடத்தை பிடிக்குமென்றும் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், நடந்ததோ வேறு.!

சும்மாவே ஐபோன் வாங்க முடியாது, இப்போ இது வேறயா.? சுத்தம்.!

அடுத்த 2018-ஆம் ஆண்டிலாவது ஒரு ஆப்பிள் ஐபோன் வாங்கிவிடலாமென்று கனவு கண்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்களில் நீங்களும் ஒருவர் என்றால் - ஐ யம் வெரி சாரி. இனி, ​​பயனர்கள் தங்களுக்கு விருப்பமான ஐபோன்களை வாங்க இன்னும் அதிக பணம் செலுத்த வேண்டும்.

அனைத்து வகையான ஐபோன் மாதிரிகளும்.!

அனைத்து வகையான ஐபோன் மாதிரிகளும்.!

ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து வகையான ஐபோன் மாதிரிகளும் விலை உயர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஒரே காரணத்திற்காக ஐபோன் எஸ்இ மட்டும் இந்த விலை உயர்வில் இருந்து தப்பித்துள்ளது. தற்போது ஆப்பிள் நிறுவனம் அதன் பெங்களூரு தொழிற்சாலையில் ஐபோன் எஸ்இ மாடலை, விஸ்டன் கார்ப்பரேஷன் என்கிற தைவானிய உற்பத்தியாளருடன் இணைந்து தயாரித்து வருகிறது.

எந்தெந்த கருவிகளுக்கு, என்னென்ன விலை உயர்வு.?

எந்தெந்த கருவிகளுக்கு, என்னென்ன விலை உயர்வு.?

கடந்த வாரம் 10 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதம் வரை என்ற இறக்குமதி வரிகளில் ஏற்படுத்தப்பட்ட 5 சதவிகித உயர்வானது, ஆப்பிள் கருவிகளின் விலைப்புள்ளியை எகிற வைத்துள்ளன. இந்த விலை உயர்வை நிகழ்த்தும் முதல் நிறுவனமான ஆப்பிள் திகழ்கிறது. சரி, ஐபோன் 6எஸ் முதல் ஐபோன் எக்ஸ் வரை எந்தெந்த கருவிகளுக்கு, என்னென்ன விலை உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை விரிவாக காண்போம்.

ஐபோன் எக்ஸ்

ஐபோன் எக்ஸ்

நேற்று முதல் நடைமுறைக்கு வந்த விலை உயர்வின்படி, ஐபோன் எக்ஸ் கருவியின் 64ஜிபி ,மாறுபாடானது ரூ.92,430/-க்கும், மறுகையில் உள்ள அதன் 256ஜிபி மாறுபாடானது ரூ.1,05,720/-க்கும் விற்பனையாகிறது.

ஐபோன் எஸ்இ

ஐபோன் எஸ்இ

முன்னரே குறிப்பிட்டபடி ஆப்பிள் ஐபோன் எஸ்இ கருவிகளுக்கு எந்தவொரு விலை உயர்வும் ஏற்படுத்தப்படவில்லை. அது தவிரத்து நாட்டில் கிடைக்கும் இதர ஐபோன் மடல்களுக்கு மட்டுமே புதிய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 6எஸ்

ஐபோன் 6எஸ்

சுங்க வரி விலக்கிற்கு பிறகு, ஐபோன் 6எஸ் சாதனத்தின் 32ஜிபி மாறுபாட்டின் புதிய விலையானது ரூ.41,550/- என்றாகியுள்ளது. இதன் முந்தைய விற்பனை விலை ரூ.30,780/- என்பது குறிப்பிடத்தக்கது. மறுகையில் உள்ள ஐபோன் 6எஸ் சாதனத்தின் 128ஜிபி மாறுபாடானது ரூ.50,660/- என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.

ஐபோன் 6எஸ் பிளஸ்

ஐபோன் 6எஸ் பிளஸ்

ஐபோன் 6எஸ் பிளஸ் சாதனத்தின் 32 ஜிபி மற்றும் 128 ஜிபி மாறுபாடுகள் முறையே ரூ.50,740/-க்கும் மற்றும் ரூ 59,860/-க்கும் விற்கப்படுகின்றன.

ஐபோன் 7

ஐபோன் 7

ஐபோன் 7 சாதனத்தின் 32 ஜிபி மாறுபாடானது இப்பொது ரூ.50,810/-க்கு துவங்குகிறது, இதன் 128 ஜிபி மாதிரியானது ரூ.59,910/- ஆகும்.

ஐபோன் 7 பிளஸ்

ஐபோன் 7 பிளஸ்

ஐபோன் 7 பிளஸ் கருவியின் 32ஜிபி மாறுபாடானது இப்போது ரூ.61,060/- என்ற விலைக்கும், இதன் 128 ஜிபி சேமிப்பு மாதிரியானது ரூ.70,180/-க்கும் விற்பனையாகிறது.

ஐபோன் 8

ஐபோன் 8

ஐபோன் 8 கருவியின் 64ஜிபி மாறுபாட்டின் விலை இப்போது ரூ.66,120/- ஆகும் மற்றும் அதன் 256ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.79,420/-க்கு கிடைக்கும்.

ஐபோன் 8 பிளஸ்

ஐபோன் 8 பிளஸ்

ஐபோன் 8 பிளஸ் சாதனத்தின் 64ஜிபி மாறுபாடானது ரூ.75,450/-க்கும், அதன் 256ஜிபி மாறுபாடானது ரூ.88,750/-க்கும் விற்பனையில் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Apple iPhones get costlier; from iPhone 6s to iPhone X, see full price list. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X