ஐபோன் X-ன் பாதி விலையில், பல வண்ணங்களில் வெளியாகும் ஐபோன் Xc.?

|

ஆப்பிள் நிறுவனத்தின் ஹை-பட்ஜெட் சாதனமான ஐபோன் எக்ஸ்-ஐ, இனி உங்களால் எளிமையாக, மிகவும் மலிவான விலையில் வாங்க முடியுமென்று நாங்கள் கூறினால் நம்புவீர்களா.? நம்பித்தான் ஆக வேண்டும்.

ஐபோன் X-ன் பாதி விலையில், பல வண்ணங்களில் வெளியாகும் ஐபோன் Xc.?

சந்தேகமேயின்றி இப்போது வாங்க கிடைக்கும் தலைசிறந்த கருவிகளில் ஐபோன் எக்ஸ் சாதனமும் ஒன்று. ஆனால் இது அனைவருக்குமானது அல்ல. இதன் அர்த்தம் எல்லோரும் சுமார் 1000 அமெரிக்க டாலர்கள் அல்லது அல்லது ரூ.89,000/- என்கிற விலைக் குறியீட்டை அனைவராலும் அணுக முடியாது என்பதாகும்.

எப்படி இருக்கும்.?

எப்படி இருக்கும்.?

இந்நிலைப்பாட்டில், மலிவான விலை நிர்ணயத்தில் ஐபோன் எக்ஸ்-ன் அதே வடிவமைப்பு மொழியை பின்பற்றும் ஒரு ஐபோன் கிடைத்தால் எப்படி இருக்கும்.? ஒரு ஐபோன் எக்ஸ் வாங்க வேண்டும் என்று ஏங்கும் பல மக்களின் கனவு நிறைவேறும் அல்லவா.?

ஐபோன் எக்ஸ்சி (XC)

ஐபோன் எக்ஸ்சி (XC)

அந்த கனவு கருவி - ஆப்பிள் ஐபோன் எக்ஸ்சி (XC) ஆகும். ஐபோன் எக்ஸ் சாதனத்திற்கான சிறந்த மாற்று தேடும் அனைத்து பயனர்களும், சமீபத்தில் வெளியாகியுள்ள ஐட்ராப்நியூஸ் (iDropNews) மூலம் உருவாக்கபட்டுள்ள ஒரு சுவாரஸ்யமான கான்செப்ட் ஆனது, நல்ல தீனி போடுகிறது என்றே கூறலாம்.

கான்செப்ட்

கான்செப்ட்

ஆனால் இதை கான்செப்ட் ஆகவே எடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைக்கிறோம் மற்றும் இது ஆப்பிள் நிறுவனத்தின் உண்மையான தயாரிப்பு அல்ல என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம்.

கண்ணியமான காரணங்களை முன்வைக்கிறது

கண்ணியமான காரணங்களை முன்வைக்கிறது

இருப்பினும் கூட, ஐ ட்ராப்நியூஸ் ஆனது, ஆப்பிள் நிறுவனம் அதன் நுகர்வோர்களுக்காக ஏன் ஒரு ஐபோன் எக்ஸ்சி சாதனத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கான சில கண்ணியமான காரணங்களை முன்வைக்கிறது. அதுமட்டுமின்றி ஆப்பிள் நிறுவனத்திற்கு ஏன் ஒரு ஐபோன் எக்ஸ்சி தேவை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

நேரடி வாரிசாக இருக்கும்

நேரடி வாரிசாக இருக்கும்

முதலில், கூறப்படும் ஆப்பிள் ஐபோன் எக்ஸ்சி ஆனது, கடந்த 2013-ல் வெளியிடப்பட்ட ஐபோன் 5சி சாதனத்தை போன்றே பல வண்ணங்களில் வெளியிடப்படும் மற்றும் நிச்சயமாக ஐபோன் எக்ஸ்சி ஆனது ஐபோன் 5சி-யின் ஒரு நேரடி வாரிசாக இருக்கும்.

வடிவமைப்பு குறிப்பு

வடிவமைப்பு குறிப்பு

உடன் கூறப்படும் ஐபோன் எக்ஸ்சி கான்செப்ட் ஆனது, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அசல் 5சி கருவியில் இருந்து வடிவமைப்பு குறிப்புகளை நிறைய எடுத்துக்கொண்டுள்ளது. மற்றும் ஐபோன் எக்ஸ்சி ஐபோன் எக்ஸ் போன்ற முன்பக்க வடிவமைப்பை கொண்டிருக்கும். மறுகையில் இந்த சாதனம் பிளாஸ்ட்டிக் கொண்டு உருவாக்கப்படும்.

சிறப்பம்சமாக விலை நிர்ணயம்

சிறப்பம்சமாக விலை நிர்ணயம்

இக்கருவியின், பெரும்பாலான வடிவமைப்பானது ஐபோன் 5சி போல இருந்தாலும் கூட ஐபோன் எக்ஸ் கொண்டுள்ள அனைத்து அம்சங்களும் ஐபோன் எக்ஸ்சி சாதனத்தில் இருக்க வேண்டும். அதன் சிறப்பம்சமாக விலை நிர்ணயம் - மற்றும் எளிமையான நுகர்வோர் இலக்கு - திகழும்.

இரட்டை பின்புற கேமராக்கள்

இரட்டை பின்புற கேமராக்கள்

ஐட்ராப்நியூஸ்-ன் படி ஐபோன் எக்ஸ்சி ஆனது, ட்ரூடெப்த் கேமரா சிஸ்டம், அமிமோஜி, இரட்டை பின்புற கேமராக்கள், ஆப்பிள் ஏ11 பயோனிக் அல்லது ஆப்பிள் ஏ12 சிப்செட் போன்ற அம்சங்களுடன் சுமார் 449 மற்றும் 549 அமெரிக்க டாலர்கள் என்கிற விலை நிர்ணயத்திற்கு நடுவே ஒரு புள்ளியை எட்டும்.

நுகர்வோர் புரட்சி

நுகர்வோர் புரட்சி

600 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான விலை டேக் கொண்டு கிடைக்கும் ஐபோன் எக்ஸ்சி சாத்தியமானால், நிச்சயமாக இதுவொரு நுகர்வோர் புரட்சியை உண்டாக்கும். முக்கியமான ஆப்பிள் பிரியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு உபாயமாக இருக்கும்.

ஏமாற்றம் அடைந்துள்ளனர்

ஏமாற்றம் அடைந்துள்ளனர்

இந்த நியாமான கான்சப்ட் ஆனது ஆப்பிளின் காதுகளுக்கு எட்டினால், ஐபோன் எக்ஸ்சி ஒரு நிஜமாகும் வாய்ப்பும் ஏற்படலாம். ஏனெனில் இந்தியாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி, ஐபோன் எக்ஸ்-ன் விலை குறியீட்டினால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Apple iPhone Xc is a Colourful and Affordable Apple iPhone X Concept. Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X