Amount ரெடியா இருக்கா.? பட்ஜெட் விலையில் ஆப்பிள் ஐபோன் X (அம்சங்கள்).!

சும்மாவே ஒரு ஆப்பிள் ஐபோனை வாங்க முடியாது என்கிற நிலைப்பாடு இருந்தது, அந்த நிலைமை ஆப்பிள் ஐபோன் எக்ஸ் வெளியான பின்னர் இன்னும் மோசமானது.

|

சும்மாவே ஒரு ஆப்பிள் ஐபோனை வாங்க முடியாது என்கிற நிலைப்பாடு இருந்தது, அந்த நிலைமை ஆப்பிள் ஐபோன் எக்ஸ் வெளியான பின்னர் இன்னும் மோசமானது.

ஒரு ஐபோன் வாங்க.. 1 லட்சமா.? என்கிற குமுறல்கள் ஆங்காங்கே கிளம்பின. அந்த ஏக்க குரல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் காதுகளுக்கு எட்டிவிட்டது போலும். அதனாலேயே வெளியாகவுள்ளது பட்ஜெட் விலையில் ஐபோன் எக்ஸ் உடன் கூடுதல் அம்சங்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கான ஐபோன் எக்ஸ் ப்ளஸ்.!

இந்த இரண்டு புதிய ஐபோன் எக்ஸ் தொடர் ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு எப்படி இருக்கும்.? அம்சங்கள் என்ன.? விலை நிர்ணயம் என்னவாக இருக்கும் என்பதை விரிவாக காணலாம்.

'பட்ஜெட்' ஐபோன்.?

'பட்ஜெட்' ஐபோன்.?

முன்னர் வெளியான தகவலின் படி ஐபோன் எக்ஸ் ப்ளஸ் ஆனது 6.5 இன்ச் ஐபோனாகவும், மறுகையில் உள்ள 'பட்ஜெட்' ஐபோன் எக்ஸ் ஆனது 6.1 இன்ச் ஐபோனாகவும் வெளியாகும் என்று அறியப்பட்டது. தற்போது அவற்றின் வடிவமைப்பின் அளவு மற்றும் பல்வேறு அம்சங்களையும் விவரிக்கும் லீக்ஸ் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஃபோர்ப்ஸ் பங்களிப்பாளரான கோர்டன் கெல்லி வழியாக வெளியாகியுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

6.5 இன்ச் ஐபோன் எக்ஸ் ப்ளஸ் (அம்சங்கள்)

6.5 இன்ச் ஐபோன் எக்ஸ் ப்ளஸ் (அம்சங்கள்)

எதிர்வரும் முதன்மை ஐபோன் (ஐபோன் எக்ஸ் ப்ளஸ் ?) ஆனது 6.5 இன்ச் OLED டிஸ்பிளே கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 19: 9 என்கிற அளவிலான திரை விகிதம் மற்றும் 157.2 x 77.1 மிமீ அளவிலான பிக்சல் அளவுகள் ஆகியவைகளை கொண்டிருக்கும். இது நிஜமாகும் பட்சத்தில் தற்போதைய ஐபோன் 8 பிளஸ்-ன் 158.4 x 78.1 மிமீ-ஐ விட மிகவும் சிறியதாக இருக்கும்.

பேஸ் ஐடி 2.0 இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.!

பேஸ் ஐடி 2.0 இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.!

வெளியான வதந்திகளின் படி, இந்த ஐபோனின் டாப் நாட்ச் ஆனது ஒரு எஃகு சேஸ் கொண்டு வடிவமைக்கப்படும். அதாவது வடிவமைப்பில் ஐபோன் எக்ஸ் போன்றே இருக்கும் அனால் ஐபோன் 8ப்ளஸ்-ஐ (202கிராம்) விட அதிக எடையுள்ளதாக இருக்கும். உடன் டாப் நாட்ச்சில் பேஸ் ஐடி 2.0 இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

லென்ஸ்களுக்கான மூன்று வெட்டுக்கள் உள்ளன, அப்படியானால்.?

லென்ஸ்களுக்கான மூன்று வெட்டுக்கள் உள்ளன, அப்படியானால்.?

இறுதியாக, கோர்டன் கெல்லியின் படி, 6.5 இன்ச் ஐபோன் ஆனது ஒரு மூன்று கேமரா அமைப்பை கொண்டு வெளியாகும். வெளியான ஸ்கீமெட்டிக்ஸ் அளவீடுகளில் லென்ஸ்களுக்கான மூன்று வெட்டுக்கள் உள்ளன, ஆனால் ப்ளாஷ் காட்டப்படவில்லை. இது பெரும்பாலும் மூன்று கேமரா அமைப்பிற்கான வடிவமைப்பாவே பார்க்கப்படுகிறது. இது எந்த அளவு உண்மையானது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

பட்ஜெட் 6.1 இன்ச் ஐபோன் எக்ஸ் ப்ளஸ் (அம்சங்கள்)

பட்ஜெட் 6.1 இன்ச் ஐபோன் எக்ஸ் ப்ளஸ் (அம்சங்கள்)

மறுகையில் உள்ள 6.1 இன்ச் ஐபோன் ஆனது 'பட்ஜெட்' மாடல் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏனெனில் இது ஒற்றை கேமரா மற்றும் பேஸ் ஐடி 1.0 கொண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் கூட, இது ஐபோன் எக்ஸ் மற்றும் 6.5 அங்குல ஐபோனை விட பெரிய அளவிலான டாப் நாட்ச் வடிவமைப்பை கொண்டுள்ளது.

3டி டச் அம்சத்தினை இழக்கும், ஏன்.?

3டி டச் அம்சத்தினை இழக்கும், ஏன்.?

இதர அம்சங்களை பொறுத்தவரை, பட்ஜெட் ஐபோன் ஆனது 147.12 x 71.52 மிமீ அளவைக் கொண்டுள்ளது. அதாவது ஐபோன் எக்ஸ் (143.6 x 70.9 மிமீ) மாடலை விட பெரியது (6.1-அங்குல VS 5.8 அங்குல). பட்ஜெட் விலைப்பிரிவின் விளைவாக இந்த 6.1 இன்ச் ஐபோன் ஆனது 3டி டச் அம்சத்தினை இழக்கும் என்பதும், இந்த குறைபாட்டால் 6.1 ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு குறையப்போவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

"அந்த" மூன்றாவது ஐபோன்.!?

ஆகமொத்தம் இந்த 2018 க்கான மூன்று ஐபோன்களில் இரண்டு ஐபோன்கள் என்னென்ன என்பது உறுதியாகிவிட்டது. மூன்றாவது ஐபோன் ஆனது ஐபோன் எக்ஸ்-ன் அதே வடிவமைப்பை கொண்டிருக்கும் என்றும், உடன் மேற்கூறப்பட்ட ஐபோன் எக்ஸ் ப்ளஸ்-ல் (6.5 இன்ச் மாடல்) இருப்பதுபோன்றே பேஸ் ஐடி 2.0 மற்றும் ட்ரிபிள் கேமரா அமைப்பு இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.?

விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.?

ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன்களின் மீதான விலை வரம்பைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். குறிப்பிட்டுள்ள பட்ஜெட் ஐபோன், அதனொரு வெளிபாடு என்றே கூறலாம். கடந்த 2017 ல் வெளியான ஐபோன் மாடல்களில் சுமார் 300 டாலர்கள் வரையிலான விலைகுறைப்பு நிகழலாம் என்று கூறப்படுகிறது. இதன் அர்த்தம் கூறப்படும் இரண்டு ஐபோன்களும் தற்போதைய விலையுயர்ந்த மாடல் ஆன ஐபோன் எக்ஸ் அளவில் தான் விலையிடப்படும், புதிய உச்சத்தை எட்டாது.

Best Mobiles in India

English summary
Apple iPhone X Plus and 'budget' iPhone X design and size leak in schematics. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X