ஐபோன் பயன்படுத்துறீங்களா? உடனே ஆன்ட்ராய்டு போன் வாங்க ஒன்பது காரணங்களை பாருங்க.!

ஆன்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்திலேயே வழங்கப்பட்டு விட்ட இந்த அம்சம் சமீபத்திய ஐஓஎஸ் 12 பதிப்பிலும் வழங்கப்படவில்லை.

|

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஓஎஸ் இயங்குதளமான ஐஓஎஸ் 12 சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இயங்குதளம் பயனர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்களை ஐபோனில் வழங்குகிறது. இத்துடன் இந்த இயங்குதளம் ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்துக்கு போட்டியாக அமைந்துள்ளது. இரண்டு இயங்குதளங்களும் பீட்டா பதிப்பில் மட்டுமே இருக்கும் நிலையில், இன்னும் சில மாதங்களில் இவை வெளியிடப்பட இருக்கின்றன.


ஆன்ட்ராய்டு இயங்குதளம் ஏற்கனவே வழங்கும் அல்லது புதிய ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இதுவரை ஐபோன்களில் வழங்கப்படாத அம்சங்களை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பல்வேறு ப்ரோஃபைல்கள்

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பல்வேறு ப்ரோஃபைல்கள்

ஆன்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்திலேயே வழங்கப்பட்டு விட்ட இந்த அம்சம் சமீபத்திய ஐஓஎஸ் 12 பதிப்பிலும் வழங்கப்படவில்லை. இந்த அம்சம் கொண்டு ஒவ்வொரு செயலிகள் மற்றும் அக்கவுன்ட்களுக்கு பல்வேறு ப்ரோஃபைல்களை செட் செய்து கொள்ள முடியும்.

ஹோம் ஸ்கிரீனில் கஸ்டமைஸ் செய்யக்கூடிய லான்ச்சர்கள்

ஹோம் ஸ்கிரீனில் கஸ்டமைஸ் செய்யக்கூடிய லான்ச்சர்கள்

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை பலவிதங்களில் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். டெவலப்பர்களிடம் இருந்து உங்களுக்கு பல்வேறு செயலிகள் கிடைக்கும் என்பதால், உங்களால் லான்ச்சரின் தோற்றம் மற்றும் ஆப் டிராயர் உள்ளிட்டவற்றையும் மாற்றியமைக்க முடியும். இந்த அம்சமும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் இதுவரை வழங்கப்படவில்லை.

ஸ்ப்லிட்-ஸ்கிரீன் மல்டி டாஸ்கிங்

ஸ்ப்லிட்-ஸ்கிரீன் மல்டி டாஸ்கிங்

ஆன்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளத்தில் அறிமுகமான ஸ்ப்லிட்-ஸ்கிரீன் அம்சம் கொண்டு பயனர்கள் இரண்டு செயலிகளை ஒரே சமயத்தில் திறக்க முடியும். இதனை ஐஓஎஸ் பயனர்கள் இன்னும் அனுபவிக்கவில்லை.

ஆல்வேஸ் - ஆன் / ஆம்பியன்ட் டிஸ்ப்ளே

ஆல்வேஸ் - ஆன் / ஆம்பியன்ட் டிஸ்ப்ளே

அனைத்து ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்படவில்லை என்றாலும், இது ஆன்ட்ராய்டு தளத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் கூகுள் பிக்சல் 2, சாம்சங் கேலக்ஸி எஸ்9, மோட்டோரோலா, நோக்கியா மற்றும் பல்வேறு இதர மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது, எனினும் ஐஓஎஸ்-இல் இதுவரை வழங்கப்படவில்லை.

இன்டோர் நேவிகேஷன் (indoor navigation)

இன்டோர் நேவிகேஷன் (indoor navigation)

ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் வைபை ஆர்டிடி (Wi-Fi RTT) அல்லது IEEE 802.11mc வைபை ப்ரோடோகால் வழங்கப்பட்டு இருக்கிறது, இதனால் சிறப்பான இன்டோர் நேவிகேஷன் கிடைக்கும். ஐபோன்களில் இந்த வசதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

ஆட்டோ ஆப் ஷார்ட்கட்

ஆட்டோ ஆப் ஷார்ட்கட்

ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் ஆப் ஷார்ட்கட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை கொண்டு செயலியின் அம்சங்களை திரையில் இருந்தபடி ஒற்றை க்ளிக் மூலம் செய்துவிட முடியும்.

செக்யூரிட்டி மோட்

செக்யூரிட்டி மோட்

ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தின் என்ட்டர் லாக்டவுன் (Enter Lockdown) ஆப்ஷன் கொண்டு சில அம்சங்களுக்கு கூடுதல் வசதிகளை பெற முடியும், கைரேகை சென்சார் உள்பட. பவர் பட்டனை அழுத்தி பிடித்தால் இந்த அம்சத்தை இயக்க முடியும்.

க்விக் ஸ்கிரீன் ரொட்டேஷன்

க்விக் ஸ்கிரீன் ரொட்டேஷன்

ஐஓஎஸ் 12 இயங்குதளம் வழங்காத மற்றொரு அம்சமாக இது இருக்கிறது. ஸ்கிரீன் ரொட்டேஷன் பட்டன் ஸ்மார்ட்போன் லேன்ட்ஸ்கேப் மோடில் வைக்கப்பட்டதும் திரையின் வலதுபுற மூலையில் மேல்பக்கமாக தோன்றும். இதன் மூலம் ஸ்மார்ட்போனை நோட்டிஃபிகேஷன் பேனல் சென்று இந்த ஆப்ஷனை செயல்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.

Best Mobiles in India

English summary
Apple iPhone users, here are 9 reasons to switch to Android smartphone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X