இன்னும் சில மணி நேரங்களில் ஆப்பிளின் புதிய படைப்புகள்!!

Written By:

இன்று செப்டம்பர் 10 ஆம் தேதி, தொழில்நுட்ப உலகமே ஆப்பள் நிறுவனத்தின் புதிய படைப்புகளின் வெளியீட்டை எதிர்நோக்கி உள்ளது. ஆப்பிள் சாதனங்களின் ரசிகர்களும் இந்நிறுவனத்தின் புது படைப்புகளை கொண்டாட காத்திருக்கின்றனர்.

ஆப்பிளின் புதிய படைப்புகளுக்கு இவ்வளவு எதிர்பார்ப்பு நிலவுவதற்க்கு காரணம் கடந்த 10 மாதங்களக்கும் மேலாக ஆப்பிளி நிறுவனம் எந்த ஒரு புதிய சாதனங்களையும் வெளியிடாமல் இருந்ததுதான். இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு இந்த வெளியீட்டு விழா தொடங்குகிறது.

ஆப்பிள் ஐபோன் 5S, ஐபோன் 5C, ஆப்பிளின் புதிய ஓஎஸ், மேக்புக் ஆகிய இன்னும் ஆப்பிள் வெளியிடும் என்று வதந்திகள் பரவுகின்றன. எல்லா சாதனங்களை காட்டிலும் குறைந்த விலை ஐபோனாக வர்ணிக்கப்பட்டு வரும் ஆப்பிள் ஐபோன் 5C பற்றிய எதிர்பார்ப்பே அதிகம் நிலவுகிறது.

ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து மக்கள் எதிர்பார்க்கும் சாதனங்கள் பற்றிய சில தகவல்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

ஆப்பிள் ஐபோன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன்களின் அடுத்த பரிமாணம் இது தான். இதில் பிங்கர் பிரின்ட் சென்ஸார் இருக்கும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

 ஆப்பிள் ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C

கம்மி விலை ஐபோனான ஐபோன் 5C பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாடியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது பல வண்ணங்களில் வெளிவர இருக்கிறது.

ஐஓஎஸ்7

ஐஓஎஸ்7

ஆப்பிளின் புதிய மொபைல் ஓஎஸ் ஐஓஎஸ்7 ஆகும். புதிதாக வெளிவரும் ஆப்பிளின் ஐபோன்கள் இந்த ஓஎஸ் உடன் வெளிவரும் என்று தெரிகிறுது.

 மேக்புக் புரோ

மேக்புக் புரோ

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஹாஸ்வெல் பிராசஸருடன் மேக்புக் புரோவை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபாட்

ஐபாட்

புதிய ஐஓஎஸ் உடன் ஆப்பிள் நிறுவனத்தின் மியூசிக் சாதனமான ஐஓஎஸ் வெளிவரலாம் என சில தகவல்கள் உள்ளன.

மியூசிக் ஸ்ட்ரீமிங் சர்வீஸ்

மியூசிக் ஸ்ட்ரீமிங் சர்வீஸ்

ஆப்பளின் மியூசிக் உலகமான ஐடியூன் ஸ்டோரை மேலும் வலுபடுத்தும் வகையில் ஆப்பிள் நிறுவனம் மியூசிக் ஸ்ட்ரீமிங் சர்வீஸ் ஆரம்பிக்கும் என சில பேச்சுகள் உள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்