மூன்றாம் தலைமுறை ஐபோன் எஸ்இ இந்த அம்சத்தோடு வருமா?

|

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ மூன்றாம் தலைமுறை சாதனம் அடுத்தாண்டு வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் ஐபோன் எஸ்இ தொடரின் முதல் சாதனம் வெளியிடப்பட்டது. எஸ்இ மாடலின் அடுத்த சாதனம் 2020 ஆம் ஆண்டில் குறைந்த விலை ஐபோன் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அடுத்த தலைமுறை அதாவது மூன்றாம் தலைமுறை ஐபோன் எஸ்இ 2022 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இது 2020 ஆம் ஆண்டில் அறிமுகமான ஐபோன் 8 மாடலை போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் வேகமான சிப் மற்றும் டச் ஐடி உடன் விற்பனை செய்யப்படுகிறது.

மூன்றாம் தலைமுறை ஐபோன் எஸ்இ

மூன்றாம் தலைமுறை ஐபோன் எஸ்இ

மூன்றாம் தலைமுறை ஐபோன் எஸ்இ மாடலில் ஆப்பிள் ஒரு பெரிய டிஸ்ப்ளே காட்சி மற்றும் 5ஜி ஆதரவோடு வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது. காம்பாக்ட் சாதனம் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த விருப்பமான தேர்வாக இருக்கும். எஸ்இ 6.1 இன்ச் டிஸ்ப்ளே கிடைக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இருப்பினும் இது சில தரப்பினரால் மறுக்கப்படுகிறது. ஐபோன் எஸ்இ மூன்றாம் தலைமுறை மாடலின் அளவு மற்றும் வேறு சில அம்சங்களை யங் வெளியிட்டுள்ளது.

ஐபோன் எஸ்இ 5ஜி ஆதரவு

2022 ஆம் ஆண்டில் ஆப்பிள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள ஐபோன் எஸ்இ 5ஜி ஆதரவுடன் வரும் என யங் டுவிட் செய்துள்ளார். மூன்றாம் தலைமுறை எஸ்இ 4.7 இன்ச் டிஸ்ப்ளே சாதனமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார். ஆப்பிள் 6.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட பெரிய எஸ்இ மாடலை அறிமுகப்படுத்தக்கூடும் எனவும் சுட்டிக்காட்டினார்.

புதிய ஐபோன் எஸ்இ மாடல் 5ஜி

புதிய ஐபோன் எஸ்இ மாடல் 5ஜி உடன் துணை 6ஜி ஹெர்ட்ஸ் இருக்கலாம் என குறிப்புகள் தெரிவிக்கிறது. அடுத்த மாடல் சாதனத்தில் உச்சநிலைக்கு பதிலாக பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய ஐபோன் எஸ்இ மாடல் பாரம்பரிய ஐபோன் வடிவமைப்பைவிட சிறப்பாக இருக்கும் என சுட்டிக்காட்டப்படுகிறது. ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே இருக்கும் என கசிவு தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சாதனம் ஐபோன் 12 போன்ற விளிம்புகளுடன் வரும் என கூறப்படுகிறது.

பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் ஐபோன் மாடல்

ஐபோன் எஸ்இ-ன் மூன்றாம் தலைமுறை சாதனம் ஐபோன் 12 போன்ற ஒத்த பிளாட் எட்ஜ் டிசைனுடன் வரும் என ஸ்வெட் பிளேயின் ரெண்டர் லீக் தெரிவிக்கிறது. முன்னதாக ஐபோன் எஸ்இ 2022 வரை வெளியிடாது என தகவல்கள் தெரிவித்தது. ஐபோன் 14 தொடரில் ஆப்பிள் ஒரு பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவை அறிமுகப்படுத்தும் என்பதற்கான குறிப்புகள் இருக்கிறது. இருப்பினும் ஐபோன் 13 தொடர் சாதனங்கள் வெளியிடப்படாத காரணத்தால் ஐபோன் 14 சீரிஸ் குறித்த தகவல்களை நம்பமுடியாதவையாகும்.

ஐபோன் 12 போன்ற வடிவமைப்பு

ஐபோன் 12 அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களிலேயே ஐபோன் 13 குறித்த வதந்திகள் பரவத் தொடங்கியது. ஐபோன் 13 சாதனம் ஐபோன் 12 போன்றே வடிவமைக்கப்பட்டிருக்கும் எனவும் இது 120 ஹெர்ட்ஸ் எல்டிபிஓ டிஸ்ப்ளே சிறந்த பேட்டரி ஆயுள், சிறந்த கேமராக்களுடன் வரும் என கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple Iphone SE third Generation May Launching with 5G Support

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X