Home
Mobile

iPhone SE 4 மாடலுக்காக காத்து இருப்பவர்களுக்கு 2 குட் நியூஸ்.. ஒன்னு விலை.. இன்னொன்னு அறிமுக தேதி!

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடல் ஆன ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) மாடலுக்காக காத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவரா? ஆம் என்றால் உங்களுக்கு 2 குட் நியூஸ் உள்ளன. ஒன்று - ஐபோன் எஸ்இ 4 மாடலின் அறிமுக தேதி பற்றியது. இன்னொன்று - ஐபோன் எஸ்இ 4 மாடலின் விலை நிர்ணயம் பற்றியது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ மாடலின் புதிய ஜெனரேஷனில் பணிபுரிந்து வருவதும், அது 2025 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் என்பதெல்லாம் பழைய செய்திகள்; ஏற்கனவே பலருக்கும் தெரிந்த தகவல்கள். புதிய தகவல் என்னவென்றால்.. ஐபோன் எஸ்இ 4 ஆனது நாம் எதிர்பார்ப்பதை விட முன்கூட்டியே அறிமுகமாகும் என்பது தான்!

iPhone SE 4 மாடலுக்காக காத்து இருப்பவர்களுக்கு 2 குட் நியூஸ்!

ஐபோன் எஸ்இ 4 மாடலின் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக பலரும் காத்திருக்கும் நேரத்தில், ஆப்பிள் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஐஓஎஸ் 18.3 அப்டேட்டை (iOS 18.3 Update) வெளியிடும் நேரத்தில் ஐபோன் எஸ்இ 4 மாடலும் அறிமுகமாகும் ஏங்கிய லீக்ஸ் தகவல் வெளியாகியுள்ளது

நினைவூட்டும் வண்ணம் ஆப்பிள் நிறுவனம் அதன் ஸ்டாண்டர்ட் ஐபோன் மாடல்களை போல ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன் எஸ்இ மாடல்களை அறிமுகம் செய்யாது. மாறாக ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, அந்தந்த ஆண்டின் ஏப்ரல் அல்லது மார்ச் மாதங்களில் புதிய ஐபோன் எஸ்இ மாடல்களை வெளியிட்டு வருகிறது

அப்படி பார்க்கும் போது ஐபோன் எஸ்இ 4 மாடலின் அறிமுகம் வழக்கத்தை விட சற்று முன்னதாக இருக்கும் என்பது போல் தெரிகிறது ஏனென்றால் ஆப்பிள் கடந்த 3 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் தான் - ஐஓஎஸ் 15.3, ஐஓஎஸ் 16.3 மற்றும் ஐஓஎஸ் 17.3 அப்டேட்களை வெளியிட்டது.

ஆக குபெர்டினோ தளமாக கொண்ட ஆப்பிள் நிறுவனம், அதன் லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட்டை வெளியிடும் லான்ச் டைம்லைனை (Launch Timeline) பின்தொடரும் பட்சத்தில் ஐஓஎஸ் 18.3 மற்றும் ஐபாட்ஓஎஸ் 18.3 (iPadOS 18.3) ஆனது 2025 ஜனவரி மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆக ஐஓஎஸ் 18.3 உடன் ஐபோன் எஸ்இ 4 மாடல் அறிமுகமாகும் பட்சத்தில், ஐபோன் எஸ்இ 4 மாடலின் அறிமுகம் வழக்கத்தை விட சற்று முன்பாகவே, அதாவது மார்ச் அல்லது ஏப்ரலுக்கு பதிலாக ஜனவரி மாதத்திலேயே அறிமுகமாகலாம். ஐஓஎஸ் 18.3 உடன் ஐபாட்ஓஎஸ் 18.3-ன் அறிமுகமும் நடப்பதால் ஐபோன் எஸ்இ 4 மாடலுடன் சேர்த்து ஐபாட் 11 (iPad 11) அறிமுகம் செய்யப்படுவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

ஐபோன் எஸ்இ 4 மாடலில் என்னென்ன அப்கிரேட்களை மற்றும் அம்சங்களை எதிர்பார்க்கலாம்? முன்னதாக வெளியான அறிக்கைகள், ஐபோன் எஸ்இ 4 ஆனது ஐபோன் 16 மாடலில் உள்ள அதே சிப் மூலம் இயக்கப்படும்; ஐபோன் 15 மாடலில் உள்ள அதே கேமரா மற்றும் ஐபோன் 14 மாடலில் உள்ளதை போன்ற டிஸ்பிளேவை பேக் செய்யும் என்று தெரிவிக்கின்றன

அதாவது ஐபோன் எஸ்இ 4 மாடலில் ஆப்பிள் ஏ18 சிப்செட் (Apple A18 Chipset) இடம்பெறலாம். இது உண்மையாகும் பட்சத்தில் ஐபோன் எஸ்இ 4 மாடலில் நாம் சில ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களையும் காணலாம். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது ஐபோன் 14 மாடலில் உள்ள அதே 6.1-இன்ச் (1170 x 2532 பிக்சல்ஸ்) ஓஎல்இடி டிஸ்பிளேவை பேக் செய்யலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, ஐபோன் 15 உடன் அறிமுகப்படுத்தப்பட்ட 48-மெகாபிக்சல் சென்சார் ஆனது ஐபோன் எஸ்இ 4 மாடலின் சிங்கிள் ரியர் கேமராவாக தேர்வு செய்யப்படலாம். செல்பீ கேமராவை பொறுத்தவரை இது 12 மெகாபிக்சல் ட்ரூடெப்த் (12MP TrueDepth) கேமராவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஐபோன் எஸ்இ 4 என்ன விலைக்கு அறிமுகமாகும்? எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை, நிச்சயமாக ஐபோன் எஸ்இ 4 ஆனது அதன் முன்னோடிகளை விட விலை உயர்ந்ததாக இருக்கும். இந்தியாவில் இது ரூ.49,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் தற்போது ஐபோன் எஸ்இ 3 மாடலின் பேஸிக் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.47,600 என்கிற ஆரம்ப விலையின் கீழ் (ஆப்பிள் வலைத்தளத்தில்) விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple iPhone SE 4 Expected to Launch Alongside iOS 18.3 and iPad 11 in 2025 January End
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X