மலிவு விலை Apple iPhone SE 2020: அட்டகாச தள்ளுபடியோடு இன்று விற்பனை!

|

மலிவு விலை Apple iPhone SE 2020 இன்று மதியம் 12 மணி-க்கு பல்வேறு தள்ளுபடியோடு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது. இதன் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஐபோன் எஸ்இ 2020

ஐபோன் எஸ்இ 2020

ஆப்பிள் சமீபத்தில் தனது புதிய ஐபோன், ஐபோன் எஸ்இ 2020 ஐ அறிமுகப்படுத்தியது மற்றும் அதன் விலைகளையும் அறிவித்தது. பின்னர் இந்தியாவில் இந்த சாதனம் கிடைப்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால் இப்போது ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 விற்பனை பிளிப்கார்ட் வழியாக இந்தியாவில் விரைவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய ஜென் ஐபோன் அட்டவணை

புதிய ஜென் ஐபோன் அட்டவணை

புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் வரிசையிலிருந்துவந்த இடைவெளியை இந்த போன் நிரப்புகிறது மற்றும் புதிய ஜென் ஐபோனை அட்டவணையில் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) அளவிலும் சிறியதாக உங்கள் பாக்கெட்டிற்குள் அடங்கும்படி எளிமையான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

IRCTC புதிய விதி கட்டாயம்! இல்லைனா டிக்கெட் முன்பதிவுக்கு அனுமதியில்லை!IRCTC புதிய விதி கட்டாயம்! இல்லைனா டிக்கெட் முன்பதிவுக்கு அனுமதியில்லை!

கோவிட் 19 தாக்குதல்

கோவிட் 19 தாக்குதல்

இந்த புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) மார்ச் மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், கோவிட் 19 இன் தாக்குதல் மற்றும் விரைவான பரவல் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது திட்டங்களை மாற்றியமைத்து.

புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) சிறப்பம்சம்

புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) சிறப்பம்சம்

புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) சிறப்பம்சம் A13 பயோனிக் சிப்செட் 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 4.7' இன்ச் கொண்ட (326 ppi இல் 1334x750) டிஸ்பிளே, 625 நைட்ஸ் பிரைட்னெஸ், 1400: 1 கான்ட்ராஸ்ட், ட்ரு டோன் 12 மெகா பிக்சல் கொண்ட (f / 1.8) பின்புற ரியர் கேமரா ட்ரு டோன் பிளாஷ் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஸ்மார்ட் HDR

IP67 சான்று வழங்கப்பட்டுள்ளதா?

IP67 சான்று வழங்கப்பட்டுள்ளதா?

IP67 சான்று வழங்கப்பட்டுள்ளதா? 7 மெகா பிக்சல் கொண்ட (f / 2.2) முன்பக்க செல்ஃபி கேமரா டச் ஐடி பட்டன் IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பு 4ஜி வோல்ட்இ வைஃபை 802.11ax வைஃபை கால்லிங் NFC புளூடூத் v5.0

Qi வயர்லெஸ் சார்ஜிங்

Qi வயர்லெஸ் சார்ஜிங்

Qi வயர்லெஸ் சார்ஜிங் ஜிபிஎஸ் / ஏ - ஜிபிஎஸ் லைட்டின்ங் போர்ட் 3.5 mm ஹெட்போன் ஜாக் கிடையாது Qi வயலெஸ் சார்ஜிங் 138.4 x 67.3 x 7.3 மிமீ அளவு மற்றும் 148 கிராம் எடை கொண்டுள்ளது. பேட்டரி மற்றும் ரேம் தகவல்களை நிறுவனம் எப்பொழுதும் போல் வழங்கவில்லை.

12 மணிக்கு விற்பனைக்க வருகிறது

12 மணிக்கு விற்பனைக்க வருகிறது

ஐபோன் எஸ்இ (2020) இந்தியாவில் பிளிப்கார்ட் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்க வருகிறது. ஏப்ரல் மாதத்தில் ஆப்பிள் தனது மலிவு விலை ஐபோன் எஸ்இ (2020)-ஐ ரூ. 42,500 என் அறிவித்தது. இது எச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகளுக்கு ஒரு உடனடி தள்ளுபடி சலுகையை அறிவித்தது, இதன்மூலம் ஐபோன் எஸ்இ (2020) 64 ஜிபி வேரியண்டை ரூ. 38,900-க்கு பிளிப்கார்டில் வாங்கலாம்.

ஐபோனுக்கு தள்ளுபடி

ஐபோனுக்கு தள்ளுபடி

இந்த நிலையில் இன்று விற்பனைக்கு வரும் ஐபோனுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனை ஹெச்டிஎப்சி வங்கி அட்டை மற்றும் கடன் அட்டை தாரர்களுக்கு ரூ.3600 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு ரூ. 38,900-க்கு விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சும்மா புகுந்து விளையாடலாம்: இனி whatsapp status-க்கு அந்த பிரச்சனை இல்லை!சும்மா புகுந்து விளையாடலாம்: இனி whatsapp status-க்கு அந்த பிரச்சனை இல்லை!

இலவச யூடியூப் பிரீமியம் சந்தா, 5% கேஷ்பேக்

இலவச யூடியூப் பிரீமியம் சந்தா, 5% கேஷ்பேக்

பிளிப்கார்ட் 6 மாத இலவச யூடியூப் பிரீமியம் சந்தாவுடன் ஐபோனில் 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஐபோன் எஸ்இ 2020 அடிப்படை மாடலான 64 ஜிபி விலை ரூ.42,500-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் 128 ஜிபி மாடலின் விலை ரூ,47,800-க்கு விற்கப்படும் எனவும் 256 ஜிபி மாடல் போன் ரூ.58,300-க்கு விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபோன் எஸ்இ 2 கருப்பு, வெள்ளை மற்றும் (தயாரிப்பு) சிவப்பு ஆகிய மூன்று வண்ண வகைகளில் கிடைக்கிறது.

source: hindustantimes.com

Best Mobiles in India

English summary
Apple iPhone SE 2020 is going on sale in India today

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X