Home
Mobile

மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு.. iPhone-ல் இருக்கும் முக்கிய அம்சத்தை காப்பி அடித்த Nothing-ன் புது போன்!

உண்மையிலேயே இப்போதுதான் நத்திங் (Nothing) நிறுவனம் ஆப்பிள் (Apple) நிறுவனத்திற்கு ஈடான ஒரு வேலையை பார்த்துள்ளது. நத்திங் பிராண்ட் அறிவிக்கப்பட்ட போது, இனிமேல் ஐபோன்களின் ஜம்பம் பலிக்காது; ஆப்பிளின் கதை முடிந்தது என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் அடிவாங்கியது என்னவோ நத்திங் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தான்!

கிளிஃப் இன்டர்பேஸ் டிசைனை (Glyph Iterrface Design) தவிர்த்து நத்திங் போன்களின் 'இன்டெரெஸ்ட்டிங்' ஆக எதுவும் இல்லை என்பதே கசப்பான உண்மை. சிஇஓ-வான கார்ல் பெய் (CEO Carl Pei) "நத்திங் பிராண்ட் ஆப்பிள் ஆகாது" என்பதை உணர்ந்த வேகத்தில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தொடங்கினார்.

iPhone-ல் இருக்கும் முக்கிய அம்சத்தை காப்பி அடித்த Nothing!

உண்மையில் நத்திங்கின் மிட்-ரேன்ஜ் மாடல்களை விட பட்ஜெட் விலை மாடல்கள் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) மாடல். இதன் விளைவாகவே அடுத்து வரும் நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் வருகிற மார்ச் 4 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சுவரசியமாக இது தன்னந்தனியான அறிமுகமாகாது; மாறாக நத்திங் போன் 3ஏ சீரிஸின் (Nothing Phone 3a Series) கீழ் அறிமுகமாகும். இதோடு சேர்ந்து நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) என்கிற மாடல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நத்திங் போன் 3ஏ சீரீஸில் ஆப்பிள் ஐபோன்களின் உள்ளதை போன்ற ஆக்ஷன் பட்டன் (Action Button) இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எக்ஸ் தளம் வழியாக நத்திங் பகிர்ந்துள்ள டீஸர் படத்தின் படி, நத்திங் போன் 3ஏ சீரீஸில், ஐபோன்களில் உள்ள ஆக்ஷன் பட்டன் போன்ற ஒரு பட்டனை பார்க்க முடிகிறது. இந்த பட்டனின் பயன்கள் என்ன என்பது பற்றிய எந்த விளக்கமும் இல்லை. இருப்பினும் இது கேமராவை லான்ச் செய்து போட்டோவை கிளிக் செய்ய பயன்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நத்திங் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த டீசரில் "உங்கள் இரண்டாவது மெமரி, ஒரு கிளிக் தொலைவில்" என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் , இந்த பட்டன் ஏஐ அசிஸ்டன்ட்-ஐ லான்ச் செய்வதற்காக கூட பயன்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிளிடம் இருந்து காப்பி அடிக்கப்பட்டாலும் கூட "பட்ஜெட் விலை பிரிவில்" உண்மையில் இதுவொரு நல்ல அம்சமாக இருக்கும்

நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ஆனது கடந்த மார்ச் 2024 இல் இந்தியாவில் ரூ.23,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் நத்திங் போன் 2ஏ பிளஸ் என்கிற 2025 ஜூலையில் ரூ.24,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதாவது இம்முறை (2025 இல்) நத்திங் 3ஏ சீரீஸில் பிளஸ் மாடலுக்கு பதிலாக ப்ரோ மாடல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பிளஸ் உடன் சேர்த்து ப்ரோ மாடல் என மொத்தம் 3 மாடல்கள் கூட அறிமுகம் செய்யப்படலாம். ஏனென்றால் ஒரு லேட்டஸ்ட் லீக் தகவலானது நத்திங் போன் 3 அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக 3-4 புதிய நத்திங் போன்கள் அறிமுகமாகி இருக்கும் என்கிறது.

ஆக நத்திங் போன் 3ஏ மாடலுக்கும் பிளஸ் அல்லது ப்ரோ மாடல்களுக்கும் இடையே என்னென்ன வேறுபாடுகள் இருக்கும்? ப்ரோ மாடலில் மட்டும் தான் ஆக்ஷன் பட்டன் இடம்பெறுமா? என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். முன்னதாக வெளியான டீசர் நத்திங் போன் 3ஏ சீரீஸில் கிளிஃப் இன்டர்பேஸ் இடம்பெறுவதை உறுதி செய்தது. அதே நேரத்தில் கேமரா டிசனையும் வெளிப்படுத்தி இருந்தது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே பேக் செய்யலாம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் சிப்செட் மூலம் இயக்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் உடனான 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் இடம்பெறலாம். முன்பக்கத்தில் 32ம்பி செல்பீ கேமரா இருக்கலாம். கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகத்திற்கு பின்னர் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple iPhone Like Action Button Confirmed in Nothing Phone 3a Series Ahead Launch on March 4
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X