Home
Mobile

விலையை சொன்னா நம்புவீங்களா? அறிமுகமானது புது ஆப்பிள் ஐபோன் டியோ.. IP68 ரேட்டிங்.. 48எம்பி கேமரா..

ஆப்பிள் நிறுவனத்தின் சர்ப்ரைஸ் அண்ட் ஷைன் நிகழ்வில் மடக்கும் வகையிலான ஐபோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் டியோ (Apple iPhone Duo) என்ற அழைக்கப்படும் மடக்கும் வகையிலான ஐபோன் தரமான அம்சங்களுடன் வெளியாகி உள்ளது. இப்போது ஆப்பிள் ஐபோன் டியோ மாடலின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் டியோ அம்சங்கள் (Apple iPhone Duo Specifications): 7.6-இன்ச் ஒஎல்இடி இன்னர் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்பிளே உடன் ஆப்பிள் ஐபோன் டியோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3000 நிட்ஸ் பீக் அவுட்டோர் பிரைட்னஸ், 1878×2670 பிக்சல்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

விலையை சொன்னா நம்புவீங்களா? அறிமுகமானது புது ஆப்பிள் ஐபோன் டியோ..

5.4-இன்ச் அவுட்ர் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியும் இந்த போனில் உள்ளது. மேலும் எச்டிஆர், ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே, செராமிக் ஷீல்ட் 2 புரொடெக்சன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த புதிய ஐபோனில் உள்ளன.

சிக்ஸ்-கோர் ஏ20 ப்ரோ 2என்எம் சிப் (Six-Core A20 Pro 2nm chip) உடன் இந்த ஆப்பிள் ஐபோன் டியோ மாடல் வெளியாகி உள்ளது. அதேபோல் 7-கோர் ஜிபியு, நியூரல் ஆக்சிலரேட்டர், டூயல் 16-கோர் நியூரல் இன்ஜின் போன்ற அம்சங்களுடன் இந்த புதிய ஐபோன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் ஆப்பிள் ஐபோன் டியோ மாடலில் உள்ளது. இந்த மாடல் iOS 27 மூலம் இயங்குகிறது. பின்பு நானோ + இ-சிம் சப்போர்ட் உடன் இந்த புதிய போன் வெளியாகி உள்ளது.

48எம்பி Fusion வைடு ஆங்கிள்கேமரா + 48எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஆப்பிள் ஐபோன் டியோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், 2x டெலிஃபோட்டோ, ஹைப்ரிட் ஃபோகஸ் பிக்சல்கள், ஃபோட்டானிக் என்ஜின், ட்ரூ டோன், 4K டால்பி விஷன் வீடியோ ரெக்கார்டிங், 4K டால்பி விஷன் வரை சினிமாட்டிக் மோட், 10x வரை டிஜிட்டல் ஜூம் உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இந்த செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும். இதுதவிர பல்வேறு சிறப்பான கேமரா அம்சங்கள் ஆப்பிள் ஐபோன் டியோ மாடலில் உள்ளன.

சைடு-பட்டன் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஃபேஸ்டைம் கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் வசதிகள் இந்த போனில்,உள்ளன. 5ஜி சப்போர்ட், வைஃபை 7, புளூடூத் 6, வைட்பேண்ட் சிப்,த்ரெட் நெட்வொர்க்கிங் தொழில்நுட்பம், ரீடர் மோட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஐபோனில் உள்ளன.

MagSafe மற்றும் 25W வரையிலான Qi2 வயர்லெஸ் சார்ஜிங், USB-C ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுகளுடன் ஆப்பிள் ஐபோன் டியோ மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போனை 60W அல்லது அதற்கு மேற்பட்ட அடாப்டரைக் கொண்டு 20 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும். 44 மணி நேரம் வரை வீடியோ பிளேபேக் ஆதரவை வழங்குகிறது இந்த ஐபோன். ஸ்டார் ஒயிட் மற்றும் நைட் ஸ்கை நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

விலையை சொன்னா நம்புவீங்களா? அறிமுகமானது புது ஆப்பிள் ஐபோன் டியோ..

ஆப்பிள் ஐபோன் டியோ விலை
256ஜிபி மெமரி கொண்ட ஆப்பிள் ஐபோன் டியோ மாடலின் விலை ரூ.2,99,900-ஆக உள்ளது.
512ஜிபி மெமரி கொண்ட ஆப்பிள் ஐபோன் டியோ மாடலின் விலை ரூ.3,24,900-ஆக உள்ளது.
1டிபி மெமரி கொண்ட ஆப்பிள் ஐபோன் டியோ மாடலின் விலை ரூ.3,74,900-ஆக உள்ளது.
2டிபி மெமரி கொண்ட ஆப்பிள் ஐபோன் டியோ மாடலின் விலை ரூ.4,49,900-ஆக உள்ளது.

இந்த போனின் முன்பதிவு அக்டோபர் 16-ம் தேதி தொடங்கும். அதன்பின்பு அக்டோபர் 23-ம் தேதி 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஆப்பிள் ஐபோன் டியோ மாடல் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Apple iPhone Duo Launched in India: Price, Specifications and Key Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X