அடுத்த 2 ஆண்டுகளுக்குள் குறைந்த விலை ஐபோன்களைத் தயாரிக்கும் ஆப்பிள்

By Karthikeyan
|
அடுத்த 2 ஆண்டுகளுக்குள் குறைந்த விலை ஐபோன்களைத் தயாரிக்கும் ஆப்பிள்

தற்போது ஆப்பிள் தயாரித்து வரும் ஐபோன்கள் அனைத்தும் இந்திய மத்திப்பில் ரூ.30,000க்கும் அதிகமான விலையில் வருகின்றன. ஆனால் வர்த்தக ஆய்வாளரான ஜீன் முன்ஸ்டர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைந்த விலை ஐபோன்களை ஆப்பிள் தயாரிக்கும் என்று ஆருடம் கூறியிருக்கிறார்.

அந்த குறைந்த விலை ஐபோன்கள் 200 அமெரிக்க டாலர்கள் விலைக்கு விற்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். ஆதாவது இந்த புதிய ஐபோன்கள் இந்திய மதிப்பில் ரூ.11,000க்கு குறைவாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் சீன மற்றும் இந்திய மொபைல் சந்தைகளை ஆப்பிள் தன் வசமாக்கக்கூடும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதாவது அதிக விலை கொண்ட ஐபோன்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மேற்கத்திய நாடுகளில் மட்டுமே நன்றாக விற்பனையாகிறது. ஆனால் இந்தியா போன் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அதிக விலை கொடுத்து அதிகம் பேர் வாங்கத் தயங்குகின்றனர்.

அதோடு மேற்கத்திய நாடுகளில் மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்கள் அதிக விலை கொண்ட போன்களை முதில் சிறிதளவு பணம் பெற்று அதை மாதந்தோரும் வசூலித்துக் கொள்ளுகின்றனர். ஆனால் இந்த வசதி இந்திய சந்தியில் கிடைப்பதில்லை.

தற்போது ஆன்ட்ராய்டு போன்கள் மொபைல் சந்தையில் கோலோச்சி வருகிறது. இன்னும் ஆன்ட்ராய்டு ஸ்மார்டபோன்களை வாங்காத மக்கள் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் ஏராளமாக உள்ளனர். இந்த நிலையில் குறைந்த விலையில் ஐபோன்களைக் களமிறக்கினால் அதிகமானோர் இந்த குறைந்த விலை ஐபோன்களை வாங்கலாம்.

ஆனால் ஆப்பிளுக்கு குறைந்த விலை ஐபோன்களை இதுவரை தயாரித்தது இல்லை. ஆனால் அவ்வாறு தயாரித்து விற்பனை செய்தால் அது சீன மற்றும் இந்திய மொபைல் சந்தைகளை ஆக்கிரமித்துவிடும் என்று நம்பலாம். தற்போது குறைந்த விலையில் வரும் கூகுள் நெக்சுஸ் 4 ஸ்மாரட்போன் குறைந்த விலையில் வருவதால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் விற்பனையில் சாதனை புரிந்து வருகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X