வெளியாகப்போவது எது : ஆப்பிள் ஐபோன் 8, ஐபோன் 10, ஐபோன் X அல்லது ஐபோன் புரோ.?

|

ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் கருவிகளை அறிமுகம் செய்த நாளில் இருந்து ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு வகை ஐபோன் சாதனங்களை (அதாவது ஐபோன் 6எஸ் / 6எஸ் பிளஸ் மற்றும் தற்போதைய ஐபோன் 7 / ஐபோன் 7 பிளஸ்) அறிமுகம் செய்து வருகிறது.

வெளியாகப்போவது எது : ஆப்பிள் ஐபோன் 8, ஐபோன் 10, ஐபோன் X, ஐபோன் புரோ.?

இந்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து நாம் அதே வழக்கமான மேம்படுத்தல்களை எதிர்பார்க்கிறோம். அதாவது ஒரு ஐபோன் 7எஸ் மற்றும் ஐபோன் 7எஸ் பிளஸ் கருவிகளை எதிர்பார்க்கிறோம். உடன் கூடுதலாக, ஆப்பிள் நிறுவனத்தின் 10-வது ஆண்டு நினைவாக, ஆப்பிள் ஐபோன் 8, ஐபோன் 10, ஐபோன் X, ஐபோன் புரோ அல்லது வேறு ஏதாவது ஒரு புதிய ஐபோன் ஒன்றையும் ஆப்பிள் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாக, எந்த வகை ஐபோன் மாடல் வெளியாகினும் அதில் நிச்சயமாக இடம்பெறுமென எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் இதோ.!

எட்ஜ்-டூ-எட்ஜ் ஓ எல்இடி டிஸ்பிளே

எட்ஜ்-டூ-எட்ஜ் ஓ எல்இடி டிஸ்பிளே

18: 9 விகித டிஸ்பிளேக்கள் இப்போது பொதுவானதாகி விட்டதால் எதிர்வரும் ஐபோனில் எதிர்பார்க்கப்படும் மாபெரும் அம்சமாக இது திகழ்கிறது. வெளியான லீக்ஸ் படங்களானது, டிஸ்பிளேயில் உள்ள அனைத்து நான்கு பக்கங்களிலும் கிட்டத்தட்ட பெஸல்களே இல்லை என்பதை காட்டுகின்றன. அதாவது, அடுத்த ஐபோன் ஆனது 5.5 அல்லது 5.7 அங்குல திரை கொண்டிருக்கலாம்.

புதிய வடிவமைப்பு

புதிய வடிவமைப்பு

அடுத்த ஐபோனில் எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளே உறுதியென்றால், அது ஒரு முழுமையான வடிவமைப்பு மாற்றத்தை பெறும் என்பதும் உறுதியே. வதந்திகள் உண்மையானால், புதிய ஐபோன் ஆனது அதன் பின்புறத்தில் கண்ணாடி வடிவமைப்புடன், இடது மூலையில் செங்குத்தாக வைக்கப்பட்ட இரட்டை கேமரா தொகுதியுடன் வெளியாகும்.

வெண்கல / செம்பு நிற மாறுபாடு

வெண்கல / செம்பு நிற மாறுபாடு

வேறு சில லீக்ஸ் தகவலின்கீழ், ஆப்பிள் டச் ஐடி கைரேகை ஸ்கேனர் ஆனது தொலைபேசியின் பின்புறத்திற்க நகர்த்தப்படலாம். அது ஒரு முழுமையான கைரேகை ஸ்கேனராகவோ அல்லது ஆப்பிள் லோகோவுடன் ஒருங்கிணைக்கப்பட்டோ வெளியாகலாம். மேலும் வெளியான வதந்திகள், அடுத்த ஐபோன் ஆனது ஒரு புதிய வெண்கல / செம்பு நிற மாறுபாட்டிலும் (கோல்ட் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகியவற்றின் கலவையில்) வெளியாகுமென அறிவிக்கிறது.

பேஸ் ரிகக்னைசேஷன் மற்றும் விர்ச்சுவல் ஹோம் பொத்தான்

பேஸ் ரிகக்னைசேஷன் மற்றும் விர்ச்சுவல் ஹோம் பொத்தான்

தொலைபேசியின் முன் டச் ஐடி மற்றும் ஹோம் பொத்தான் நீக்கப்பட்டால், திரையில் மேலே புதிய சென்சார்கள் செயல்படுத்தப்படலாம் அதாவது ஒரு 3டி பேஸ் ரிகக்னைசேஷன் அம்சம் உருட்டப்படலாம். அதன் ஓஎஸ் வழிநடத்துதலுக்காக ஐஓஎஸ் சார்ந்த அணுகலை கருவியின் மெய்நிகர் பொத்தான் வழங்கலாம்.

வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங் ஆனது உலோகத்தின் மூலம் வேலை செய்யாது ஆனால் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் மூலம் வேலை செய்கிறது. ஆக, ஆப்பிள் ரசிகர்கள் ஒவ்வொரு வருடமும் எதிர்நோக்கும் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இம்முறை வெளியாகும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.

மேம்படுத்தப்பட்ட வன்பொருள்

மேம்படுத்தப்பட்ட வன்பொருள்

ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் புதிய ஐபோன்களில் ஒரு வன்பொருள் மேம்பாடு கிடைக்கும். அப்படியாக, ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் கருவிகளானது 16என்எம் ஆப்பிள் ஏ10 ஃப்யூஷன் சில்லுகள் மூலம் இயக்கப்படுவது போல, வெளியாகும் புதிய ஐபோன்கள் புதிய 10என்எம் ஆப்பிள் ஏ11 செயலி கொண்டு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது போது.

அதிக பேட்டரி ஆயுள் மற்றும் சேமிப்புத்திறன்

அதிக பேட்டரி ஆயுள் மற்றும் சேமிப்புத்திறன்

இது ஒரு பெரிய செயல்திறன் ஊக்கத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பேட்டரி ஆயுளையும் மேம்படுத்துகிறது. இத்துடன் புதிய ஐபோன்களின் சேமிப்புத்திறனானது 64ஜிபி-யில் தொடங்கி 256ஜிபி ,மற்றும் 512ஜிபி வரையிலான நீட்டிப்பை வழங்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

எதிர்வரும் ஐபோன் சுமார் 1,000 அமெரிக்க டாலர்கள் என்ற தொடக்க விலை நிர்ணயப்புள்ளியை பெறலாம். ஆம், நீங்கள் படித்தது சரி தான். தயாராகி கொள்ளுங்கள் ஆப்பிள் பிரியர்களே.!

Best Mobiles in India

English summary
Apple iPhone 8 rumour roundup: Edge-to-edge OLED display, glass back, expected price. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X