ஆப்பிள் லீக்ஸ் : கேலக்சி எஸ்8, எஸ்8+ அளவீட்டில் ஐபோன் 8.!

Written By:

மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஐபோன் 8 சாதனமானது ஒவ்வொரு நாளும் கசிவுகளில் சிக்குகிறது. ஆப்பிள் அதன் பத்தாவது ஆண்டை முன்னிட்டு ஒரு தீவிர ஸ்மார்ட்போன் மறுவடிவமைப்புடன் வரவிருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அது எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்பிளே கொண்டிருக்கலாம் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. உடன் டச் ஐடிக்கு இடம் அளிக்கப்படாது என்றும் கூறப்படுகிறது. பெரும்பாலான வதந்திகள் டச்ஐடி ஆனது காட்சிக்கு அடியில் இணைக்கப்பட வேண்டும் என்றும், அதன் அகச்சிவப்பு சென்சார் நீங்கள் தொடும்போதெல்லாம் கைரேகையை ரெட் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

ஆப்பிள் லீக்ஸ் : கேலக்சி எஸ்8, எஸ்8+ அளவீட்டில் ஐபோன் 8.!

மூலம் : ஐட்ராப்நியூஸ்

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஐபோன் 8 பற்றி இரண்டு சுவாரஸ்யமான கசிவுகள் ஸ்லாஷ்லீக்ஸில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதிலுருந்து ஆப்பிள் நிறுவனத்தின் புதிய திட்டங்கள் மற்றும் ஐபோன் அளவு சார்ந்த சுவாரசியமான விவரங்களும் வெளியாகியுள்ளது. வெளியான அறிக்கையானது, ஐபோன்8 ஆனது சாம்சங் கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி எஸ்8 + கருவிகளின் அளவுகளுக்கு போட்டிபோடும் வண்ணம் இருக்கும் என்கிறது.

வெளியான அறிக்கை, ஐபோன் 8 கருவியின் முன் மற்றும் பின்புற வடிவமைப்பு வெளிப்படுத்துகிறது. படங்களிலிருந்து பார்த்தபடி, ஐபோன் முன் 8 சிக்னேடர் ஐபோன் ஹோம் பொத்தான் இல்லாமல் ஒரு எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்பிளேவை பரிந்துரைக்கிறது. அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்8 போன்றே ஒரு பிளாட் திரை கொண்டிருக்கும் ஆனால் வளைந்து இருக்காது என்கிறது.

மேலும், ஒரு செங்குத்து இரட்டை கேமரா அமைப்பு இடம்பெறும். இது ஆப்பிள் லோகோ மற்றும் கைரேகை சென்சார் ஆகிய இரண்டிற்கும் இருக்கும் இடைவெளியில் ஒரு சிறிய வட்ட பகுதியில் வரும் என்று அறிக்கை காட்டுகிறது. கைரேகை சென்சார் முன் டிஸ்பிளேவிற்ரு கீழே ஒருங்கிணைக்க பெறும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.

வெளியான அறிக்கை ஐபோன் 8 மற்றும் கேலக்ஸி எஸ் 8 ஆகிய இரண்டையும் ஒப்பிடுகையில் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8+ உடன் ஒப்பிடும்போது ஐபோன் 8 ஆனது 5.3 அங்குல ஓஎல்டி ஐபோன் அளவைக் கொண்டு, 143.59 × 70.94 × 7.57 மிமீ என்ற அளவீட்டை கொண்டிருக்கலாம். இருப்பினும் இரண்டு கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கு எதிராய் வைத்து பார்த்தால் அது சிறியதாகவே உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8+ பரிமாணங்கள் படி முறையே 148.9 x 68.1 x 8.0 மிமீ மற்றும் 159.5 x 73.4 x 8.1 மிமீ கொண்டுள்ளது என்பதும் வெளியான அறிக்கை ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஆகியவற்றை ஒப்பிட்டு ஐபோன் 8 கருவியின் ஒரு படத்தை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Apple iPhone 8 leaked: New schematics, size compared with Samsung Galaxy S8, S8+. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot