Home
Mobile

ஆப்பிள் ஐபோன் 8 மாடலின் வரைபடம் லீக். கேமிரா மற்றும் டிஸ்ப்ளேவில் புதுமை

புதிய ஆப்பிள் ஐபோன் 8 மாடல் குறித்த வரைபடம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது

By Siva

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த வெளியீடான ஐபோன் 8 அல்லது ஐபோன் x மாடல் குறித்து தகவல்கள் லீக் ஆகாத நாளே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு இந்த மாடலுக்கு எதிர்பார்ப்பு இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் 10வது வெற்றிகரமான ஆண்டு என்பதால்தான். 10வது ஆண்டில் வெளிவரும் புதிய மாடல் ஸ்பெஷலாக இருக்கும் என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு காரணம்

ஆப்பிள் ஐபோன் 8 மாடலின் வரைபடம் லீக். கேமிரா மற்றும் டிஸ்ப்ளேவில்

இந்த மாடல் குறித்து வெளியான பல வதந்திகள், தகவல்கள் ஆகியவற்றை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். வரும் அக்டோபரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மாடலில் OLED டிஸ்ப்ளே பேனல் இருக்கும் என்பதுதான் சிறப்பு செய்தி.

இந்த டிஸ்ப்ளேவினால்தான் இந்த மாடல் காலதாமதம் ஆவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒருசில வதந்திகள் கூறுவதை பார்க்கும்போது இந்த மாடலின் விலை $1000க்கும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அந்த அளவுக்கு உயர்தர டெக்னாலஜி இந்த புதிய ஆப்பிள் மாடலில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் அதிரடி : 3 மாத இலவச சேவை வழங்கும் செட்-டாப் பாக்ஸ்.!

இந்நிலையில் இந்த புதிய ஐபோன் 8 மாடல் குறித்த வரைபடம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வரைபடத்தின் மூலம் இந்த மாடலின் ஒருசில விபரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. அவை என்னென்ன என்பதை பார்ப்போம்

ஃபுல் டிஸ்ப்ளே என்பது உண்மை

ஃபுல் டிஸ்ப்ளே என்பது உண்மை

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த மாடல் குறித்து கசிந்த தகவல்களில் ஒன்று ஆப்பிள் ஐபோன் ஃபுல் டிஸ்ப்ளே இருக்கும் என்பதுதான். ஃபாக்ஸ்கான் லீக் செய்துள்ள வரைபடத்தில் இருந்து இது உண்மை என தெரிய வருகிறது. முழு டிஸ்ப்ளே இருப்பது தற்போது உறுதியாகியுள்ளதால் இந்த மாடல் பெஸல் மாடல் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது.

மேலும் ஸ்கீரினுக்கு கீழே ஹோம் பட்டன், செல்பி கேமிரா, பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் சில சென்சார்கள் இருப்பது இந்த வரைபடத்தின் மூலம் தெரிய வருகிறது. மேலும் டிஸ்ப்ளேவை சுற்றிலும் ஆப்பிள் வாட்ச்-இல் இருப்பது போன்று மெட்டல் பாதுகாப்பு அமைந்துள்ளது.

வெர்ட்டிக்கல் கேமிரா வசதி:

வெர்ட்டிக்கல் கேமிரா வசதி:

இந்த வரைபடத்தின் மூலம் லீக் ஆகியுள்ள இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றல் இந்த ஆப்பிள் ஐபோன் 8 மாடலில் பின்பக்கம் டூயல் கேமிரா உள்ளது என்பதும், இந்த டூயல் கேமிராக்கள் வெர்ட்டிக்கல் அமைப்பில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த டூயல் கேமிராவில் LED பிளாஷ் மற்றும் லேசர் ஆட்டோ போகஸ் ஆகியவை அமைந்துள்ளதற்கான அறிகுறியும் இந்த வரைபடத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது.

பக்கவாட்டில் எந்த மாற்றமும் இல்லை

பக்கவாட்டில் எந்த மாற்றமும் இல்லை

மேலும் இந்த வரைபடத்தின் மூலம் முன்பக்கம் எந்த பட்டனும், எந்த சென்சாரும் இல்லை என்பது கூடுதல் தகவலாக உள்ளது. பக்கவாட்டில் பிசிக்கல் பட்டன்களும், சுவிட்ச்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவை வால்யூம் அட்ஜெட்ஸ் செய்வது, பவர் பட்டன் மற்றும் மியூட் அல்லது அன்மியூட் செய்யும் பட்டன்கள் ஆகும்.

Source

Best Mobiles in India

English summary
Apple iPhone 8 or iPhone X drawings have leaked online. These drawing show the vertical dual rear camera setup and wraparound display. These drawings have been leaked via Foxconn, the company's major manufacturer.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X