இந்தியா: சிவப்பு நிறத்தில் ஐபோன் 8 சீரிஸ் அறிமுகம்.!
ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் நான்கு வண்ண மாறுபாடுகளில் வரும் - சிவப்பு, வெள்ளி, ஸ்பேஸ் சாம்பல் மற்றும் தங்கம். இரண்டுமே மிகவும் நிலைப்புத்தன்மை வழங்கும் கண்ணாடி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
ஆப்பிள் நிறுவனம் இப்போது பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, மேலும் இந்த வருடம் இந்தியாவில் பல்வேறு சாதனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். தற்சமயம் அந்நிறுவனம் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன் சாதனங்களை சிவப்பு நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கன் மேட் ரெட்
நிற அலுமினியம் ஃபினிஷ், 64ஜிபி மற்றும் 256ஜிபி மெமரி ஆதரவுடன் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிறத்தில் வெளிவரும் ஐபோன் 8 ஸமார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.67,940-ஆக உள்ளது,அதன்பின்பு ஐபோன் 8 பிளஸ் (ரெட் எடிஷன்) சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.77,560-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஐபோன் சாதனங்கள்.
ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் நான்கு வண்ண மாறுபாடுகளில் வரும் - சிவப்பு, வெள்ளி, ஸ்பேஸ் சாம்பல் மற்றும் தங்கம். இரண்டுமே மிகவும் நிலைப்புத்தன்மை வழங்கும் கண்ணாடி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. ஐபோன் 8 ஆனது 4.7 இன்ச் டிஸ்ப்ளேவும் மறுகையில் ஐபோன் 8 பிளஸ் ஆனது 5.5 அங்குல டிஸ்ப்ளேவும் கொண்டுள்ளது. புதிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் சக்திவாய்ந்த ஏ11 பியோனிக் சிப் ஆகிய அம்சங்கள் இந்த புதிய மாறுபாடுகளில் இடம்பெற்றுள்ளன. ஏ11 பியோனிக் சிப் கொண்டு இஐங்கும் ஐபோன் 7-ஐ இவிட இந்த சிப் 70 சதவீதம் வேகமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 8 பிளஸ் இரட்டை கேமரா கொண்டு வருகிறது. எப்/1.8 மற்றும் எப்/2.8 துளைகள் கொண்ட இதன் 12எம்பி கேமரா ஆழமான பிக்சல்கள் மற்றும் புதிய கலர் பில்டர்ஸ் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமரா 240 ப்ரேம் பெர் செகண்ட் என்ற அளவிலான 1080எச்டி ஸ்லோ மோஷன் வீடியோக்களை கைப்பற்றவும் உதவும்.
இதற்குமுன்பு அமெரிக்க ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஹாங் காங், ஜப்பான், நியூசிலாந்து, சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் ப்ரிட்டன் போன்ற நாடுகளில் ரெட் எடிஷன் விற்பனை செய்யப்பட்டது. தற்சமயம் இந்தியாவில விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக இந்த ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் சாதனங்கள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனங்கள் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் சாதனங்கள் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டன, மேலும் ஐபேட்
ஐபாட் போன்ற சாதனங்களும் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications