ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 6. இரண்டிற்கும் என்ன வித்தியாசம்

Written By:
  X

  ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் இன்று மிகச் சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதே நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 6எஸ் மாடலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்பதே பலரது கேள்வியாக உள்ளது.

  ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 6. இரண்டிற்கும் என்ன வித்தியாசம்

  மேலோட்டமாக பார்த்தால் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை என்பதுபோல் தோன்றினாலும் இரண்டிற்கும் இடையே பல வித்தியாசங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

  ஐபோன் 7 வெளியீடு : ஆப்பிள் கருவிகள் விலை குறைக்கப்பட்டன.!!

  வெளிப்படையாக பார்க்கும்போது கேமிராவுக்கு அதிக இடம் கொடுத்திருப்பதாகவும், கலர்களிலும் வித்தியாசம் காட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. உட்புறத்தை பார்த்தால் ஹார்டுவேர், பேட்டரி ஆகியவைகளிலும் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசங்களை தற்போது பார்ப்போம்

  புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  டிசைன்

  இரண்டு வகை ஐபோன்களுக்கும் டைமன்ஷன்களில் எவ்வித வித்தியாசமும் இல்லை. ஆனால் ஐபோன் 7 முந்தைய மாடல்களில் இருந்து வெயிட் குறைந்துள்ளது. மேலும் மிகப்பெரிய வித்தியாசமாக அனைவரும் கருதுவது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் இந்த புதிய மாடலில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  ஸ்க்ரீன்:

  ஸ்க்ரீன் சைஸ் மற்றும் ரெசலூசன் ஆகியவை முந்தைய மாடல்களில் இருந்து எவ்வித வித்தியாசத்தையும் பெறவில்லை. ஆனால் அதே சமயம் புதிய மாடலில் முந்தைய ஐபோனைவிட 25% பிரைட்டாக உள்ளது என்பது மட்டும் ஒரு வித்தியாசம்

  ஸ்டோரெஜில் வித்தியாசம் உண்டா?

  16 ஜிபி மற்றும் 32 ஜிபி என இரண்டு புதிய மாடல் ஐபோன்களில் வெளிவந்துள்ளது. இதைத்தான் உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தனர். 16ஜிபி மற்றும் 32 ஜிபி மாடல்களில் முறையே 128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் உள்ளது.

  பிராஸசர் மற்றும் கிராபிக்ஸ்:

  அடுத்த ஜெனரேஷன் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த புதிய மாடலில் 'A10 Fusion chip' பிராஸசர் உள்ள்து. மேலும் குவாட்கோர் அம்சங்கள் உள்ளதால் முந்தைய மாடலைவிட மிக வேகமாக இயங்கும். முந்தைய மாடல்களை விட இந்த புதிய மாடல் கிட்டத்தட்ட 50% வேகமாக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  கேமிராவில் வித்தியாசம் உண்டா?

  புதிய மாடல் ஐபோனில் 12எம்பி கேமிரா உள்ளதால் மிக துல்லியமாக படமெடுக்கும் தன்மை கொண்டது. கடந்த மாடலில் (OIS) லிமிட்டாக இருந்த நிலையில் தற்போதைய மாடலில் இது அதிகமாக உள்ளது.

  கலர் மற்றும் விலை:

  புதிய மாடல் ஐபோன் கருப்பு, ஜெட் கருப்பு, கோல்ட், ரோஸ் கோல்ட், மற்றும் சில்வர் என ஐந்து கலர்களில் கிடைக்கின்றது. விலையை பொருத்தவரையில் 32 ஜிபி மாடல் இந்திய மதிப்பில் சுமார் ரூ.60,000 என்றும், ஐப்பிள் ஐபோன் ப்ளஸ் அதைவிட சுமார் $100 அதிகம் என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  At the Keynote event in San Fransisco, Apple finally pulled the wraps of the much anticipated iPhone 7 and iPhone 7 Plus along with their pricing. At the first glance, the iPhone 7 and 7 Plus won't differ much in terms of design when compared to last year's iPhone 6s and 6s Plus, but a lot has changed internally.

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more