ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7ப்ளஸ் போன்கள் குறித்து லீக் ஆன புதிய தகவல்கள்
ஐபோன் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் விரைவில் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7ப்ளஸ் வெளியாகவுள்ள நிலையில் இந்த போன்கள் குறித்த இமேஜ்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மேலும் சில இமேஜ்கள் வெளிவந்துள்ளது.

இதற்கு முன்பு வெளியான இமேஜ்களில் இருந்து ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் 6 ப்ளஸ்களில் இருந்து பெரிய வேறுபாடுகள் இல்லாதது போல் தோன்றியது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள இமேஜ்கள் முந்தைய கருத்தை மறுக்கும் வகையில் உள்ளது.
வாயைப் பிளக்க வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் : இது உண்மையா நம்பலாமா.??
இன்று லீக் ஆகியுள்ள இமேஜ்களில் இருந்து ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7ப்ளஸ் போன்களில் டிசைனில் பெரிய அளவில் மாற்றம் இல்லாவிடினும், ஹார்வேர்டை பொருத்த வரையில் மிகப்பெரிய மாற்றம் உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இதிலும் அதே டிசைன் தான். ஆனால்...
ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7ப்ளஸ் வகை போன்களிலும் 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச் டிஸ்ப்ளே சைஸ் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இதில் OLED பேனல் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு

சிப்செட் எப்படி இருக்கும்?
இதற்கு முந்தைய மாடலில் A9 பிராஸசர் இருந்த நிலையில் தற்போது A10 பிராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த போன்களின் வேகம் அதிகமாக இருக்கும் அதுமட்டுமின்றி A10 பிராஸசரில் 16nm FinFET of TSMC அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7ப்ளஸ்-ல் ரேம் எப்படி?
ஏற்கனவே எதிர்பார்த்தபடி ஆப்பிள் ஐபோன் 7 மாடலில் LPDDR4 ரேம் மற்றும் 7ப்ளஸ் மாடலில் 3ஜிபி ரேம் அமைக்கப்பட்டுள்ளது.

கேமிரா எப்படி இருக்குதுன்னு தெரியுமா?
ஏற்கனவே கசிந்துள்ள தகவலின்படி 7 மாடலில் 12எம்பி பின்கேமரா உள்ளது. அதேபோல் 7 ப்ளஸ் மாடலில் 12எம்பி டூயல் கேமரா உள்ளது.

பேட்டரி கெப்பாசிட்டி எப்படி?
ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் 6 ப்ளஸ்களில் இருந்ததை விட ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7ப்ளஸ் வகை போன்களில் 14% பேட்டரின் சக்தி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 7 மாடலில் 1960mAh பேட்டரியும் 7 ப்ளஸ் மாடலில் 2,910mAh பேட்டரியும் உள்ளது.


Click it and Unblock the Notifications