Home
Mobile

இது வதந்தியா இல்லை உண்மையா!! ஆப்பிள் ஐபோன்6

By Prabakaran

இன்டர்நேஷ்னல் கம்பெனிகளில் பிராண்ட் மதிப்பீட்டில் முதல் இடம் வகிப்பது ஆப்பிள் நிறுவனம் தான். கூகுள், கொக்க கோலா போன்ற நிறுவனங்களை பின்னுக்குதள்ளி ஆப்பிள் நிறுவனம் முன்னிலையில் உள்ளது. ஐபோன்கள் மூலம் உலக அளவில் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் இதுவரை 6 கோடிக்கும் அதிகமான ஐபோன்களை விற்பனை செய்துள்ளது.

அண்மையாக இந்நிறுவனம் இரண்டு ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5C என இரண்டு ஐபோன்களை வெளியிட்டது. இதில் ஐபோன் 5S மக்களிடத்தில் அமோக வரவேற்ப்பை பெற்றது. இன்னும் இந்த ஐபோன்கள் இந்தியாவில் அதிகாரபூர்வமாக விற்பனைக்கு வரவில்லை ஆனால் அதற்க்குள் ஐபோன் 6 பற்றிய தகவல்கள் மற்றும் வதந்திகள் ஆன்லைனில் வலம் வர தொடங்கிவிட்டன.

ஆப்பிள் நிறுவனம் இதுவரை 4.0 இன்ஞ்க்கு அதிகமான டிஸ்பிளேவை கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டதில்லை. இந்நிறுவனம் அடுத்த வெளியிட போகும் ஐபோனான ஆப்பிள் ஐபோன்6 பெரிய சைஸ் டிஸ்பிளே உடன் வெளிவரும் என்று தெரிகிறது. சாம்சங், ஹச்டிசி போன்ற பல நிறுவனங்கள் பெரிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்களை அதிகம் வெளியிடுவதால் ஆப்பிளும் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்.

ஆன்லைனில் வெளியான தகவல்களை வைத்து பார்க்கும் பொழுது ஆப்பிள் ஐபோன் 6, 4.8இன்ஞ் டச் ஸ்கிரீனுடன் வெளிவரும் என்று தெரிகிறது. இதை பற்றி இணையத்தில் பல வதந்திகள் வெளியாகியுள்ளன. இவைகளை வெறும் வதந்திகள் என ஒதுக்கிவிட முடியாது , ஏனென்றால் ஐபோனை பற்றி இப்படி வெளியாகும் பெரும்பாலும் உண்மையாகவே இருக்கின்றன. கீழே உள்ள சிலைட்சோவில் அவைகளை பற்றி பார்ப்போம்.

ஆப்பிள் ஐபோன்6 கான்ஷெப்ட் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1

#1

ஆப்பிள் ஐபோன் 6 சோலார் சார்ஜிங் டச் ஸ்கிரீன் உடன் வரும் ஒரு தகவல் உள்ளது. அதாவது டச் ஸ்கிரீன் மூலம் போன் சூரிய வெளிச்சத்தின் மூலம் சார்ஜ் ஆகிக் கொள்ளும்.

#2

#2

ஐபோன் 5S 8மெகாபிக்சல் கேமராவுடன் வந்தாலும் அதில் உள்ள சென்ஸார் புதிய டெக்னாலஜியை கொண்டிருந்தது. அது போல் ஐபோன் 6ம் 12 அல்லது 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் புதிய டெக்னாலஜி சென்ஸாருடன் வரும் என்று தெரிகிறது.

#3

#3

ஆப்பிள் நிறுவனம் இதுவரை 64ஜிபி மெமரி கொண்ட ஐபோன்களை தான் வெளியிட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 6 128ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#4

#4

ஆப்பிள் ஐபோன்களின் டிஸைன்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். ஐபோன் 5S அலுமினியம் பாடியுடன் அழகிய டிஸைனில் உருவாக்கப்பட்டிருந்தது. ஐபோன் 6 டிஸ்பிளை Sapphire கிளாஸ் கொண்டு உருவாக்கப்படும் என்று தெரிகிறது. இந்த கிளாஸ் விலை உயர்ந்த வாடச்களில் தான் அதிகம் பயன்படுத்தப்படும்.

#5

#5

ஆப்பிள் நிறுவனம் அண்மையாக வெளிவந்த ஐபோன் 5Sல் 64பிட் A7 பிராசஸரை வெளியிட்டது. இந்த சிறப்பம்சத்தை மேலும் ஆப்பிள் வலுப்படுத்த விரும்பினால் கூவாட் கோர் அல்லது ஆக்டா கோர் பிராசஸருடன் ஐபோன் 6யை வெளியிடும்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X